தந்தையும் மகளும்/205
205அப்பா! கத்தரிக்காய் முதலிய காய்கறிகளை வற்றல் போடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! காய் கறிகள் எப்போதும் கிடையாதல்லவா. சில காய்கறிகள் சிற்சில மாதங்களில்தான் கிடைக்கும். ஆனால் காய்கறிகள் கிடையாத காலங்களிலும் நமக்குக் காய்கறிகள் தேவை அல்லவா? அதற்காகத்தான் அம்மா காய்கறிகளை உப்புச்சேர்த்து வெயிலில் வைத்து உலர வைக்கிறாள். அவற்றிலுள்ள நீர் போய்விடுகிறது. அவை வற்றலாக ஆகிவிடுகிறது. சிறிதுகூட நீர் இல்லாமல் உலர்ந்து போனால் அவைகளில் கிருமிகளோ பூசணமோ உண்டாகிக் கெடுத்துவிட மாட்டா. கிருமியும் பூசணமும் ஈரப்பசையுள்ள இடத்தில் தான் உண்டாகும். உப்புச் சேர்த்திருப்பதாலும் கிருமிகள் உண்டாகா. உப்பு ஒரு கிருமி நாசினியாகும். வற்றலாகக் காய்ந்து போனாலும் அவை சுவையாகவே யிருக்கும். உயிர்ச்சத்துக்களும் அநேகமாகக் குறைந்து விடமாட்டா.