தந்தையும் மகளும்/29
29அப்பா! ஆறுகள் எல்லாம் கடவில் போய்ச் சேருகின்றனவே, கடலிலிருந்து பூமிக்குள் போகும் ஆறு உண்டோ?
ஆம் அம்மா! ஆறுகள் அனைத்தும் கடலிலோ ஏரியிலோ அல்லது வேறு ஆற்றிலோதான் போய்ச் சேரும். ஆயினும் கிரீஸ் தேசத்துக்கு அருகிலுள்ள செபலோனியா என்னும் தீவில் நீ கேட்கிற மாதிரி கடலிலிருந்து பூமிக்குள் போகும் ஒரு ஆறு இருக்கிறது. அங்கே கடல் நீரானது மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் நூற்றைம்பது அடி தூரம் பூமியின் மீது செல்லுகிறது. அப்படிச் செல்லும் நீர் 150 அடி தூரம் சென்றதும் அங்குள்ள பாறைகளின் இடையே பாய்ந்து மாயமாக மறைந்து விடுகிறது அப்படி மறைவதற்குக் காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.