தந்தையும் மகளும்/41
41அப்பா! அடுப்பில் வைக்கும் விறகு முதலில் கரியாகிப் பிறகு கடைசியில் சாம்பலாகி விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! விறகு என்பது மரம்தானே மரம் தினந்தோறும் காற்றிலிருந்து கரியையும் மண்ணிலிருந்து பல விதமான ரஸாயனப் பொருள்களையும் கிரகித்து, மாப்பொருள், ஊன்சத்து, கொழுப்புப் பொருள் முதலியவற்றை உண்டாக்கிக் கொள்கின்றன என்பது உனக்குத் தெரியும். அதனால் விறகை அடுப்பில் வைத்து எரிக்கும் பொழுது முதலில் அதிலுள்ள எண்ணெய் முதலிய பொருள்கள் ஆவியாக மாறி வெளியே போய் விடுகின்றன. அதனால் தான் விறகு எரியும் பொழுது முதலில் அது கரிபோல் கறுப்பாக ஆகிவிடுகிறது. பிறகு கரி முழுவதும் காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து கரியமலவாயு உண்டாகி வெளியே போய்விடுகிறது. ஆகவே கடைசியில் எஞ்சி நிற்பது சில உப்புவகைகள்தான். அவற்றைத்தான் நாம் சாம்பல் என்று கூறுகிறோம்.