தந்தையும் மகளும்/54
54அப்பா! தண்ணீரைச் சுடவைத்தால் அதன் அளவு கூடும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! கூடத்தான் செய்யும். தண்ணீர் தான் அப்படிக் கூடும் என்று எண்ணாதே. மற்ற திரவப் பொருள்களும் அவ்விதமே சுடவைத்தால் அளவு கூடும். அதனால் தான் வெண்ணெய்யை உருக்கி நெய அளந்து கொடுக்கும் போது அதைச் சூடு குளிர்ந்த பின்னரே அளக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
அம்மா! ஒவ்வொரு பொருளும் கண்ணிற்குத் தெரியாத மூலக்கூறுகளால் ஆனதாகும். அந்த மூலக்கூறுகளுக்கு இடையில் இடைவெளியிருப்பதாகவும் காலமும் அசைந்து கொண்டிருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
நாம் தண்ணீரைச் சுடவைத்தால் அப்பொழுது தண்ணீரிலுள்ள மூலக்கூறுகள் முன்னிலும் அதிகமாக அசைய ஆரம்பித்துவிடுகின்றன. அப்படி அதிகமாக அசைவதால்தான் தண்ணீரின் அளவு கூடிவிட்டதாகத் தெரிகிறது.