தந்தையும் மகளும்/79
79அப்பா ! சோப்பை நீரில் கரைத்து அதில் குழாய் வழியாக ஊதினால் குமிழிகளாகப் பறக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! அந்தக் குமிழிகள் ஒவ்வொன்றும் நீ விளையாடுகிற பந்து மாதிரி அமைந்திருக்கிறது. பந்தில், மேலே ரப்பர் உறையும் உள்ளே காற்றும் இருப்பது குமிழிகளின் மேலே சோப்பு நீர் உறையும் உள்ளே இருக்கிறது. நீ சோப்பு நீரில் ஊதும் பொழுது நீ ஊதும் காற்று சோப்பு நீர் உறை செய்துகொண்டு அதனுள் தங்குகிறது.
நீரானது எப்படித் தோலால் செய்த உறைபோலிருக்ம் என்று கேட்பாய். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் இருக்கும் பொழுது அதன் மீது மெதுவாக ஒரு ஊசியை வைத்துப்பார். அது தண்ணீருக்குள் தாழ்ந்து விடாமல் மிதக்கும். அதற்குக் காரணம் தண்ணீரின் அணுக்கள் ஒன்றையொன்று பிடித்து இழுத்து மெல்லிய தோல் போல் ஆவதேயாகும். இந்தச் சக்தி நீர் போன்ற திரவங்களுக் கெல்லாம் உண்டு, அந்த மெல்லிய தோல் மெல்லிய' ரப்பர் தோல் போல் நீளவும் சுருங்கவும் கூடியது.
நீ ஊதும் காற்று அத்தகைய தோலை ஒரு பந்து உறை போல் செய்துகொண்டு மேலே பறந்து செல்கிறது ஆயினும் அதை பூமி தன்னுடைய ஆகர்ஷண சக்தியால் கீழே இழுக்கிறது. இந்த இழுப்புச் சக்தி நீர் அணுக்களின் இழுப்புச் சக்தியைவிட அதிகமாகும். அதனால் தான் சிறிது நேரம் சென்றதும் தோல் உடைந்து போகிறது.