தந்தையும் மகளும்/97
97அப்பா! நீரில் நீந்தமுடிகிறது, ஆனால் காற்றில் பறக்க முடியவில்லையே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நீந்துவதானாலும் பறப்பதானாலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான். நம்முடைய உடம்பு தண்ணீரை விடவும் காற்றை விடவும் கனமானது. அதனால் அது நீருக்குள் மூழ்கிவிடும், காற்றில் நிற்காமல்
தரையில் வந்து விழுந்து விடும்.ஆயினும் நாம் நீரில் நீந்துகிறோம், அதற்குக் காரணம் நம்முடைய உடம்பு நீரைவிட அதிகக் கனமில்லாதிருப்பதுதான். அதனால்தான் நாம் தண்ணீரில் மூழ்கி விடாமல் சமாளித்துக் கொள்கிறோம், நாம் நீந்தும் தண்ணீர் கடல் உவராயிருந்தால் அதில் நீந்துவது ஆற்றிலோ குளத்திலோ வௌவால் நீந்துவதைவிட
எளிதாயிருக்கும். கடல் நீர் உப்பு நிரம்பியதாயிருப்பதால் மற்ற நீரைவிட நிறை கூடியதாகும். நம்முடைய உடம்பின் நிறை காற்றின் நிறையை விட மிகவும் அதிகமாயிருப்பதால் தான் நம்மால் பறக்க முடிவதில்லை.
ஆனால் நம்முடைய உடம்பு போலவே உள்ள வௌவால் பறக்க முடிகிறது. அதற்குக் காரணம் என்ன? வௌவாலுக்கும் நம்மைப் போலவே கைகளும் விரல்களும் இருந்தாலும் அந்தக் கைகளுக்கும் விரல்களுக்குமிடையில் ஒரு தோல் படலமிருப்பதால் அது அதற்குக் குடை போலிருந்து கீழே விழுந்து விடாமல் பாதுகாக்கிறது. ஆனால் நமக்கு அந்த விதமான கைகள் இல்லை, அதனால் தான் நம்மால் பறக்க முடியவில்லை.