தமிழர் தோற்றமும் பரவலும்/இணைப்பு-1 ஊழி விளக்கம்
இணைப்பு 1
ஊழி விளக்கம்
1. ஆர்க்கேயன் பேரூழி (Archaean Zoic):
வேரில்லாக் கடற்பாசியும், பனிப் பாறைகளும் இரும்பு, செப்புப் படிவங்களும் உருவாகியதும், மலைகள் தோன்றி, எரிமலை வெடித்துக் குழம்புகள் பாய்ந்ததும், கண்ணுக்குப் புலப்படாப் புல் பூண்டுகளும், முதல் மர இனமும், மாவினமும் தோன்றியதும், ஆகிய முதல் பேருழி 450 முதல் 60 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.
2. ஆர்டோவீசியன் பேரூழி (Ordovician):
முதுகெலும்பு இல்லா உயிர்கள் தோன்றிய காலம். சுண்ணாம்புக் கல், ஈயம், துத்தநாகப் படிவங்கள் உருவான காலம். ஆறு கோடி ஆண்டு வயதுடையது.
3. கார்பானிபெரசு ஊழி (Carboniferous)
வெப்ப நிலைக் காடுகள் தோன்றி அழிந்து நிலக்கரிப் படிமத் தளங்கள் உருவான தொல்லூழி ஆறு கோடி ஆண்டு வயதுடையது.
4. கேம்பிரியன் ஊழி (Cambrian Era)
பாலெயோ ஜோயிக் ஊழியின் முதல் பகுதி. நிலப்படிவம் தோன்றிய 450 கோடி ஆண்டிலிருந்து 50 கோடி ஆண்டு வரையான ஊழி. இங்கிலாந்து நாட்டில், இங்கிலாந்து வடமேற்கில் உள்ள வாலெஸ் (Wales) மாவட்டத்துக் காம்பிரியன் (Cambrian) பகுதியில் உள்ள அழிந்து போன இடிபாடுகளில் காணலாம் மடிந்துபோன, நீர் வாழ்வன மற்றும் செடி கொடிகளின் தொல்வடிவம் கொண்டு மதிப்பிடப்பட்ட ஊழி.
5. சிரிடேசியஸ் ஊழி (Cretaceous Era)
ஆர்க்கேயன் என்ற முதல் ஊழிக்குப் (Archeo Zoic) பிற்பட்ட்தும், மெஸ்ஸோ ஊழிக்கு (Meso Zoic) முற்பட்டதுமான, செரோ ஊழியின் (Cero Zoic) மூன்று பிரிவுகளில் கடைசி காலப் பிரிவு தொடக்க நிலை. பாலூட்டி உயிரினங்களும், மலர்ச் செடிகளும் தோன்றியதும், வெண் சாக்குப் படிவங்கள் உருவாகியதுமான காலப் பிரிவு.
6. சைலூரியன் ஊழி (Silurian Era) :
ஊர்வனவற்றுள் முதலாவதான தேள் தோன்றிய காலம். மீன் உருவத்திற்கு முந்திய ஊழி. கடலடிப் பவழப் பாறைகள் உருவான காலம். மூன்றரைக் கோடி ஆண்டு வயதுடையது.
7. ஜுராசிக் காலப் பிரிவு (Jurassic Period)
ஆர்க்கேயன் ஊழிக்கு (Archaean Zoic) மூன்று பிரிவுகளுள், இரண்டாவது பிரிவு. கொம்பு போன்ற மூன்று புடைப்புக்களை, கொண்டையில் கொண்ட விலங்குகளில், பறவைகளும் முதன்முதலாகத் தோன்றிய காலம்.
8. திராயிக் காலப் பிரிவு (Triassic Period)
ஆர்க்கேயன் ஊழிக்குப் (Archaean 2oic) பிற்பட்டதான கடைப்பேருழியாம் மெஸ்ஸோ ஊழியின் (Mess Zoic) மூன்று பிரிவுகளும், முதலாவது பிரிவு. ஊர்வனவும், சின்னம் சிறு இலைக்கொத்து கொண்ட வெப்ப மண்டலக் காடுகளும் வளர்ந்த காலம்.
9. டேவோனியன் ஊழி (Devonian Era)
மண்ணியல் படிவ அமைப்புகள் உருவான காலம். மீன் மற்றும் நிலத்திலும் நீரிலும் வாழ்வன தோன்றிய காலம். ஆறு கோடி ஆண்டு வயதுடையது.
10. பாலியோ ஜோயிக் ஊழி (Paleo Zoic)
வேரில்லாக் கடற்பாசியும், பனிப்பாறைகளும், இரும்புச் செப்புப் படிவங்களும், உருவாகியதும், மலைகள் தோன்றி எரிமலைக் குழம்புகள் பாய்ந்ததும், கண்ணுக்குப் புலப்படாப் புல் பூண்டுகளும், முதல் மாவினமும் தோன்றியதும் ஆகிய ஆர்க்கேயோ ஜோயிக் (Arcaro Zoic) என்ற முதல் ஊழிக்குப் பிற்பட்டதும், ஊர்வனவும், சின்னஞ்சிறு இலைத் தொகுதிகளைக் கொண்டதும், ஆன திரியாஸிக் (Triasica) என்ற காலப் பிரிவு. மண்டையில் கொம்பு போலும் மூன்று புடைப்புகளை உடைய விலங்கினங்களும், பறவைகளும் முதன்முதலாகத் தோன்றிய, ஜுராஸ்ஸிக் (Jurasses) என்ற காலப் பிரிவு. தொடக்க நிலைப் பாலூட்டிகளும், மலர்ச் செடிகளும் தோன்றியதும் வெண் சாக்குப் படிவங்கள், உருவாகியதுமான, க்ரெட்டசியேயஸ் (Cretaceous) காலப் பிரிவு, ஆகிய மூன்று காலப் பிரிவுகளைக் கொண்டதும், பாலூட்டிகள் பெருகியதுமான ஆறு கோடி ஆண்டளவினதும் ஆன செரோ ஜோயின் (Cero Zoic) ஊழிக்கு முந்தியதுமான, மெஸ்ஸோ ஜோயிக் (Meso Zoic) ஊழிக்கு முற்பட்டதும் ஆம்.
11. பெர்மியன் ஊழி (Permion Era)
5 கோடி ஆண்டு வயதுடையது. தொல் உயிர் ஊழியின் இறுதி அடுக்கு. ஊர்வன பெருகிய காலம். பெரிய மலைகளும், பனிப் பாறைகளும், உருவான காலம். நிலத்திலும், நீரிலும் வாழ்ந்த உயிரினங்களும் ஆதிக்கம் பெருகிய காலம்.
12. ப்ரொடெரோ ஜோயிக் (Protero Zoic)
முதல் பேருழியாம் ஆர்க்கேயன் (Archaean) ஊழியை அடுத்தும், பலெயோ ஜோயிக் (Paleo Zoic) ஊழிக்கு முன்னரும் ஆன ஊழி. வேரில்லாக் கடற்பாசிகளும், பனிப் பாறைகளும் உருவான காலம். மண்ணுக்கடியில் இரும்பு, செப்புப் படிவங்கள் உருவான காலம்.
13. மெஸ்ஸோ பேரூழியாம் இடைப் பேருழி (Meso Zoic)
தொல் பேருழியாம் பாலியோ ஊழியாம் முதல் ஊழிக்குப் (Paleo Zoic) பிற்பட்டதும், திரயாஸிக் (Trassic),ஜூராஸ்ஸிக் (Jurassic) கிரெட்டாசியாஸ் (Cretaceous) என்ற மூன்று காலப் பிரிவுகளைக் கொண்டதும், பால் ஊட்டிகள் பெருகியதும், ஆறு கோடி ஆண்டளவினதும் ஆன, செரோ ஜோயிக் (Cere Zoic) என்ற ஊழிக்கு முந்தியதுமான, இடைப் பேருழி.