தமிழர் தோற்றமும் பரவலும்/1. மண்ணியல் ஆய்வு ஊழிக் காலத்தில் இந்தியா
விளக்கக் குறிப்புக்கள்
1. மண்ணியல் ஆய்வு ஊழிக்காலத்தில் இந்தியா
நீண்ட நெடிய மண்ணியல் ஆய்வுக் காலவரம்பில் அளந்து கண்ட வழி. இந்தியாவின் தீபகற்பப் பகுதி, (தென்பால் மேட்டுச் சமவெளிப் பகுதி) நனிமிகப் பழமையானது இப்பகுதியின் வடமேற்கு எல்லையில், இராஜபுதானச் சமவெளியின் குறுக்கே நீண்டு கிடப்பது, ஆரவல்லி என அழைக்கப்படும், நனிமிகப் பழைய மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதியாம். இம்மலைகளின் தெற்கில், நாம் இப்போது அழைப்பது போல், இந்தியத் தீபகற்பம், தொல்லுழிக் காலத்து இறுதிக் காலம் தொட்டே நிலப்பகுதியாம் ஆரவல்லிக் குன்றுகளுக்கு வடமேற்கு நிலப்பரப்பில் மூன்றாம் கடல்கோளுக்கு முன்பிருந்தே, கடல் அடுத்தடுத்துப் பொங்கிக் கொண்டிருந்தது. ஆரவல்லி மலைத்தொடர்களால், இவ்வாறு பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளிலும் கட்டமைப்பு. வடிவமைப்புகளில், மனத்தில் நிறுத்தவல்ல வேறுபாடுகள் உள்ளன. நனிமிகப் பரந்துகிடந்த ஒருபெருநிலப்பரப்பின், கழித்து விடப்பட்ட ஒரு பகுதியாவதல்லது வேறு ஆகாத, அத்தீபகற்பத்தின் இன்றைய வடிவம், வண்டல் மண் படிந்த நிலப்பரப்பாம், சிந்து மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளாம். தாழ்ந்த நிலபரப்பு தோன்றுவதில் கொண்டுபோய்விட்ட மிகப்பெரிய, தொடர்ந்த நிலநடுக்கம் தோன்றிய காலம் தொட்டே, நிலைகொள்ளப்பட்டது. பெரும்பாலும் ஆரவல்லி மலைகளின் சமகாலத்த-ஒரே ஊழிக்காலத்தைச் சேர்ந்தது. (பெரும்பாலும் ஒரு காலத்தில் அவற்றோடு இணைந்திருந்தது.) பெரிதும் பிளவுண்டதும், கரடுமுரடான தோற்றம் உடையதும் வங்காள விரிகுடாவை நோக்கி நிற்பதும் ஆகிய கிழக்குமலைத் தொடர்ச்சி, தொல் உயிர் ஊழிக்காலத்தின் முடிவுகாலம் தொட்டு, வளைகுடாவின் கடல் நீர், மேற்கு நோக்கிப் பாய்ந்து கரைகளை அரித்துவிடாமைக்கும், சென்னைக் கடற்கரைதான் மிகச்சிறிய பிரதிநிதியாக, இன்று இந்தியாவைக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவுக்கு முற்பட்ட பெருநிலப் பரப்பின் கிழக்குக் கரையாக அமையவும் காரணமாம். இந்தியத் தீபகற்பத்தின், கிழக்குத் தடுப்பு அணை, அதாவது கிழக்குக் கடற்கரை, அத்துணை நனிமிகப் பழமையானதாம். ஆனால், வரலாற்றுக்கு முந்திய இப்பெரு நிலப்பரப்பின் வடமேற்கு எல்லையாக ஆரவல்லி மலைகள் அமைந்திருந்தன என்பது தெளிவாகும்போது, உறுதி ஆகும்போது, வடகிழக்கு எல்லையாக எது அமைந்திருந்தது என்பது அத்துணைத் தெளிவாகத் தெரியவில்லை. அந்நாட்களில் கங்கைச்சமவெளி இல்லை. பெரும்பாலும் ராஜ்மகால் மலைகளும் அஸ்ஸாம் நாட்டு மலைகளும், சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கில், இமாலய நிலப்பகுதியாகத் தொடர்ந்திருந்தன. ஒப்பு நோக்க, பர்மா நாட்டு மலைகள் மிக இளையவாக இருக்க மேற்கு இமயத்தைக் காட்டிலும், கிழக்கு இமயம் நனிமிகப்பழமையானது என்பது உறுதி. அடுத்துத் தொடர்ந்தன, நிலநடுக்கமோ, கடல்கோளோ இல்லாத நீண்ட பெரும் அமைதியும் கோண்டவனம் என அழைக்கப்படும் பரந்து அகன்ற மத்திய நிலப்பகுதி தோன்றிய காலமாம் ஆறுகளின் போக்கால், வண்டல் படிவங்கள் அமைதியாகத் தோன்றலும் ஆம். பனிமூடிய மலைப்பாறைகள் இருப்பதும்.இராஜபுதானத்தில் பனிஉருகுநிலை இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கன இப்பொருள் கோளில், ஆரவல்லி மற்றும் ராஜ்மகால் மலைப்பகுதிகள்,
ஆப்பிரிக்காவின் விரிவு, அல்லது வேறு அல்ல என்ற, பெரும்பாலும், மறுக்கமுடியாத உண்மையை நாம் எதிர் கொள்கிறோம். தொல்பழங்கால இத்தொடர்பினை உறுதி செய்யத் தேடிப் பெற்ற அகச் சான்றுகள் முடிவானவை. ("India” by: Col. Sir. T.H. Holdich, page.-7-8; “C.P. Traite de Geoloie", by A. de Lapparent 4th Edn. “Lemuria” by Steiner (Anthrops) “Problem of Lemuira” by Stence (Rider). The drift of continents; by Wegner (Royal Geographical Journal. 1934-36) காண்க.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கெல்லிஸ் எனும், இடத்தில் காணப்படும் எச்சம்மிச்சங்களைக்கொண்டு அறியப்படும் பழங்கற்காலப் பகுதிக்கும் முந்திய நாகரீகக் காலத்தைச் சேர்ந்த (Pre-Chellan Eolithic Culture) சில கண்டுபிடிப்புகளும் உள்ளன. ஆந்திர நாட்டு, நரசிங்கப்பூர் மாவட்டத்தில், நர்மதை ஆற்றங்கரையில் உள்ள, பூத்ரா (Bhutra) எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட, வாழ்க்கை நடைமுறைகளைக் காட்டும், ஓவியம் தீட்டப்பெற்ற விந்திய மலையைச் சேர்ந்த அழுத்தமற்ற கல், அவற்றுள் ஒன்று. அதே இடத்தில், விலங்குகள் சிலவற்றின் எலும்புகளும் காணப்பட்டன. ஐதராபாத் வருவாய்க்கோட்டத்தில் பைதன் நகருக்கு அருகில் முங்கி எனும் இடத்தில், சில விலங்குகளின் எலும்புகளோடு காணப்பட்ட, காய் கனிகளின் உலர்ந்த நறுக்குத் துண்டுகள் இரண்டாவதாம். புத்ரா எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டவை. ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்டனவற்றோடு ஒருமைப்பாடு கொண்டுள்ளன. பர்மா, இலங்கை, அந்தமான், ஜாவாக்களில் கண்டெடுக்கப்பட்டனவோடு, தெளிவான உறுதியான ஒருமைப்பாடு கொண்டுள்ளன. இது, “இயோலிதிக்” (Eolithic) நாகரீகம், அதாவது பழங்கல் நாகரீகம். அன்றைய, அதாவது தொல்லுழிக் காலத்தில் உள்ள எல்லாநாடுகளுக்கும் பொதுவான நடைமுறையில் இருந்த நாகரீகம் என்பதைக் காட்டுகிறது” (“Prehistoric India”) by Panchanan mitra, p.138. History of Pre-Musalman India. Vol I by V. Rangacharya. p.29-32).
தகவாளர், திரு. ஜே. சி. பிரேஸர் (Sir. I.C. Frazer) அவர்கள், ஊழிப்பெருவெள்ளம் (Great Flood) குறித்த கற்பனைக் கதைகளைப் பொருள் கொள்வதில் கீழ்வரும் எச்சரிக்கையைக் கொடுத்துள்ளார். ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கற்பனைக்கதைகள் உலகின் நனிமிகத் தொலைவில் உள்ள நாடுகளில் வாழும் பல்வேறு வகைப்பட்ட மக்களிடையே பரப்பப்பட்டுள்ளன என்பது உண்மை. இவைபோலும் செய்திகளில், எவ்வளவு சான்று விளக்கங்கள் காட்ட முடியுமோ, அவ்ளவும் காட்டி, இவைபோலும் கட்டுக்கதைகளிடையே, ஐயத்திற்கு இடன்இன்றி ஒருமைப்பாடுகள் இடம் பெற்றிருப்பது, இக்கதைகள், ஒருசார் மக்களிடமிருந்து பிறிது ஒருசார் மக்களிடையே நேரடியாகக் கைமாறியது. ஒருபால் காரணம் ஆகலாம். மற்றொருபால், உலகின் பல்வேறு பகுதிகளில், ஒரே மாதிரியான- ஆனால், முற்றிலும் தன்னியலான ஊழிப்பெருவெள்ளம் அல்லது அதுபோலும் பெருவெள்ளம் ஏற்பட்டமையைக் குறிப்பிட்டுக் காட்டும் இயற்கை விளைவுகள் பற்றிய முன்அனுபவம் காரணமாகலாம். இவ்வாறு இவை போலும் மரபுவழிச் செய்திகள் பற்றிய ஆய்வு, அவற்றின் வரலாற்று, உறுதிப்பாடு பற்றிய எந்த முடிவுக்கும் நம்மைக் கொண்டு செல்வதற்கும் அப்பால், இதிலும், இதுபோலும்: மாறுபட்ட கருத்து உடையவற்றிலும், உண்மை, முழுமையாக, இப்பக்கமோ, அப்பக்கமோ சார்ந்துவிடுவதில்லை. மாறாக, அவ்விரண்டிற்கும் இடையில் எங்கே ஓரிடத்தில் தான் நிற்கும் என்ற உண்மை நிலையை எடுத்துக்கூறி, இருவேறுபட்ட கொள்கைகளுக்காக இருவேறு முனைகளில் நின்று வாதிடுவார்களை நம்ப வைப்பதன்மூலம், அம்மாறுபட்ட விவாதம் சிலநேரங்களில் உண்டாக்கிவிடும் விவாதச் சூட்டினைத் தணிய வைத்தால், பயன் உள்ள செயலைச் செய்யவும் செய்யும். (“Man God and Immortality” page:49-50).
3. திருவாளர் வி.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின், “மக்ஷிய புராணம்-ஒரு ஆய்வு” என்ற நூலைக் காண்க. பக்கம்: 1-19.
உலகின் தோற்றம், ஊழிப்பெருவெள்ளம் விளைத்த பேரழிவு பற்றிய சுமேரிய நாட்டு வீரப்பெருங்காப்பியம், பூமிதேவியும், பூமிதேவனும், வானுலகக் கடவுளாம் “அணுவும்” (Anu) நீர்க்கடவுளாம் ‘என்கியும்’ (Enki) துணைசெய்ய சுமேரிய நாட்டிற்கே உரிய பழங்குடியினரையே தெளிவாக உணர்த்தும் கருந்தலை மனிதர்களைப் பெற்றனர் எனக் கூறுகிறது. இது தொடர்பாக வணங்கத்தகு தந்தை ஈராஸ் (Rev. Fr. H.Heras) அவர்களின் கருத்துக் குறிப்பு குறிப்பிடத்தக்கது. “எகிப்திய, அல்லது பழங்குடியினரின் மையக் கருமூலமாக, அதாவது. அவர்களின் மூதாதையர்களாக, நாம் இப்போது கருதும் இந்திய நாட்டுத் திராவிடர்கள், ஊழிப்பெருவெள்ளத்துக்குப் பின்னர், சிந்துசமவெளிக்கும், கங்கைப் பெருவெளிக்கும். இடைப்பட்ட, பரந்த நாட்டில் குடிவாழ்ந்த பின்னர், ஆங்குக் குறிப்பாகத் தென் கடல்கரைப் பகுதிகளில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய, கருவிகளையும், மனித இனங்களிடை வேறுபாடு உணர்த்தும் தனிச்சிறப்புகளாம் அவர்களின் பழங்கால நினைவுச்சின்னங்கள் எண்ணிலாதனவற்றை விட்டுச் சென்ற, கறுப்பு இனத்தவரின், ஒரு கிளையினராகிய நீக்ரோ இயல்பு இனத்தவரைக் கண்டனர். (“Hamitic Indo-Mediter-ranean Race.” In the New Review. Vol. XIV p. 189-192). 4. சென்னை, மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்கள் பழங்கற்கால மனிதனின் எண்ணற்ற அடையாளங்களைக் கொண்டுள்ளன. தெற்கு, மத்திய மேற்கு இந்தியாவில், பழங்கற்கால மனிதன் வாழ்ந்திருந்தமைக்கான, அறிகுறி எதுவும் தெரிந்த வகையில், இன்றுவரை காணப்படவில்லை. தளபதி குக் (Captain-Cook) அவர்களும், அவர்காலத்துக் கடலோடிகளும் மற்றும் தொடக்க காலத்துப் பிரிட்டானியக் குடியேற்றவர்களும் முதன் முதலாக வருகை தந்தபோது பழங்கற்கால மனிதனின், கடினமானதும், மங்கலான வண்ணம் வாய்ந்ததும், பல்வேறு வடிவங்களில் வெட்டிப் பண்ணக்கூடியதுமான, ஒருவகைச் சந்தனக் கல்லால் செய்யப்பட்டு, இன்றும் கிடைக்கக்கூடிய, படைக்கருவிகள், மற்றும் தளவாடங்களிலிருந்து பெறப்பட்ட உண்மை. அப்பழங்கற்கால மக்கள் பண்பாடு அற்றவர்கள்; ஆனால் காட்டுமிராண்டிகள் அல்லர்; அவர்களின் கல்லால் ஆன. கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த கைவினைப் பொருள்கள், ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கிற்கு அப்பால் உள்ள , தாஸ்மேனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்பட்டவைகளைக் காட்டிலும், எண்ணிக்கையாலும் அதிகம்; வடிக்கப்பட்ட முறையிலும் வடிவமைப்பிலும் நனிமிகச் சிறந்தவை என்பனவே. Robert Brwoce Foote. The Foote collection of Indian prehistoric Antiquities Notes on their age and distribution p.8) கேரள நாட்டில், பழங்கற்காலக் காலத்துக் கண்டுபிடிப்புகள் இல்லாமை குறிப்பிடத்தக்கது.
5. திருவாளர் சமன்லால் (Chamanial) அவர்களின் “இந்து அமெரிக்கா” (Hindu America) (Bombay 1940) என்ற நூலினைக் காண்க. அதில், டாக்டர் லுட்விக் ஸ்டெர்ன்பச் (Dr. Ludwrk Sternbach) அவர்களின், தொல்பழங்கால இந்தியாவிலும், அமெரிக்காவைச் சேர்ந்த, பண்டைய மெக்ஸிகோவிலும் இருந்த ஒரே மாதிரியான சமுதாய மற்றும் அறங்கூர் அவைகளும் (“Similar Social and legal Institutions in Ancient India and in Ancient Mexico') என்ற தலைப்புள்ள கட்டுரை இருக்கிறது. (Poona Orienalist, vi P. 43-46). தென் அமெரிக்காவில் கடல் சார்ந்த நாடாம் பெருநாட்டிற்குக் (Peru) கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஸ்பெயின் நாட்டவர் வருகை தரும்வரை, பெருநாட்டு மக்கள், ஞாயிற்றை வழிபட்டு வந்தனர். அந்நாட்டு அரசன், தன்னை, ஞாயிற்றின் குடிவழி வந்தவனாக உரிமை கொண்டாடினான். அந்நாட்டின் தலைநகராகிய (Cuzco) குஸ்கோவில் கட்டப்பட்ட ஞாயிறு கோயிலே, ஏனைய எல்லாவற்றிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது.
6. கடந்த சில ஆண்டுகள் வரை, மிகுதியாகவும் முழுமையாகவும் தெரிந்துகொள்ள, நாம் பெரிதும் விரும்ப வேண்டியதாகிய எகிப்தியரின், தொல்பெருங்கால, நிலைத்த வாழ்க்கைப் பற்றிய நைல்நதியின் கரைக்கு மேலே உள்ள பாலைவன மேட்டு நிலங்களிலும் அதைத் தொடர்ந்துள்ள அடுக்கடுக்கான ஆற்றுப் படுகைகளிலும், தங்கள் பழங்காலக் கருவிகளையும் தளவாடங்களையும் விட்டுச் சென்றிருக்கும் நாடோடிகளின் வாழ்க்கை, ஏறத்தாழப் பழகிவிட்ட கால்நடை மந்தைகளோடும் அவற்றின் நீடித்த வாழ்க்கைக்குக் கோதுமை, பார்லிகளை விளைவித்தலோடு, அப்போதும் பழகிவந்த வேட்டையாடலையும், மீன்பிடித் தொழிலையும் ஆதாரமாகக் கொண்ட நிலைத்த குடியினராய் எவ்வாறு மாறிவிட்டது என்பது பற்றி நம் அறிவு குறைபாடுடையதே. ஆயினும் 1924-25 ஆண்டில், இரண்டு கண்டுபிடிப்புக்கள் பெறப்பட்டன. ஒன்று திருவாளர்கள் ப்ருன்டன் (Brunton) பிலின்கெர்ஸ் பெட்ரியே (Sin Flinders Petrie) ஆகிய இருவரால் மத்திய எகிப்தில் உள்ள “அஸ்யூட்” (Assiut) நகருக்கு மேலே, “கௌ” (Qau) இடத்திற்கு அண்மையில் உள்ள “பதரி” (Badari) எனும் இடத்தில், மற்றொன்று, திருவாட்டி “காட்டன் தாம்ப்சன்” (Miss, Cation Thomson) அவர்களால் எகிப்து நாட்டு, வடக்கு மாநிலத்தில் உள்ள “பாயியும்” (Fayuam) எனும் இடத்தில், இது எகிப்தின், குடியாட்சி நாகரீகத்துக்கு முற்பட்டதான தொடக்கால நிலைகள் பற்றிய புரியாத மொத்தச் சிக்கல்களையும் தீர்க்கத் தக்க,
பெருமளவிலான விளக்கங்களைத் தருகிறது. திருவாளர்கள் ப்ருன்டன் அவர்களும், பெட்ரிக் அவர்களும், நையல் நதிப் படுகை நெடுக உள்ள பல்வேறு நகரங்களில் ஒன்றான, பதரி (Badari) எனும் இடத்தில், ஒரு குடியிருப்பு இருந்ததைக் கண்டுபிடித்தனர். படேரிய இனத்தவரின் குடிவழி வந்தவராகத் தெரியும் இன்றைய எகிப்தியர்கள், இன்றும் அழிந்துபடாமல் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் தொல்குடியினர்களாகிய, திராவிடர் மற்றும் வெட்டர்களோடு, உடலமைப்பில் கருத்தில் கொள்ளத்தக்க தோற்றம் கொண்டுள்ளனர். (James Barike, “A History of Egypt” - From the earliest Times to the end of the XVIIIth Dynasty Page:24-25)
திருவாளர் வி. கனகசபைப்பிள்ளை அவர்கள் தம்முடைய “1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள்” என்ற நூலில், தமிழர்களின் தோற்றம் குறித்த மிகமிகத் தீவிரமான கருத்து ஒன்றை முன் வைத்துள்ளார். அதில், மத்திய ஆசியாவைச் சேர்ந்த மங்கோலிய இனத்துப் பழங்குடியினர் பலர், இமாலயக் கணவாய் வழியாக, ஆரியர்கள் நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்த பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தனர். அம்மங்கோலிய இனத்தவருள் பெரும்பான்மையினர், கங்கை நதியின் தொடக்க இடமும், பெரிய வாணிக மையமுமாகிய “தமிலிட்டி” (Tamalitte) எனும் இடத்திலிருந்து தென்னிந்தியாவில் குடியேறினர். இந்நிகழ்ச்சியே, தென்னாட்டுப் பழங்குடியினர். தமிழர் என்ற சொல்லின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. ஆகவே, “தமிழ்” என்ற பெயர், தமலிட்டி என்ற சொல்லின் சுருக்கமாகக் காணப்படுகிறது. வாயு மற்றும் விஷ்ணு புராணங்கள், கோசலர், மற்றும் ஒட்டர்களோடு தம்ரலிப்தரர் (Tamraliptas) களை, வங்காளம் மற்றும் அதை அடுத்த கடற்கரை நாடுகளில் வாழ்பவர்களாக, மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன.
7) “Historian's History of the world” Vol. 1. P. 77, மற்றும் ஜி ஸ்லேட்டர் அவர்களின் “Dravidian Culture” Page : 22 ஆகிய நூல்களைக் காண்க. “பதரி” (Badari) என்பதுதானும் இந்திய நாட்டு, ஓர் இடத்தின் பெயராம்.
8) தென் இந்தியக் காடர்களும், உரலிகளும், இலங்கை வெட்டர்களோடும், செலெபெஸ் (Celebes) நாட்டு த்பலஸ் (Tfalas), மலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த “ஸ்கைஸ்” (Sakais) ஆகிய மக்களோடும் குறிப்பிடத்தக்க ஒருமைப்பாடு கொண்டுள்ளனர். (Macctt Anthropology P. 120) ஆஸ்திரேலியா, அவர்களின் தாயகமாகக் கருதப்பட்டது. அண்மைக்கால எழுத்தாளர் ஒருவர், பாலஸ்தீனியத் தாயகத்தைக் கூறுகிறார். நிகழ்ச்சிகள், அவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்த, புதுக்கற்காலத்தவராகிய திராவிடர்களாம் எனக் காட்டுகின்றன. அவர்களை, இந்தியத் தீபகற்பத்தின் தொடக்ககால வாழ்வின ராகிய காடர் போலும், தொல் பழங்காலக் காட்டு வாழ்வினரின் அறவே வேறுபட்ட ஒரு கூட்டமாகக் கொள்வது நனிமிகக் கடினம். (திருவாளர் எல்.ஏ. கிருஷ்ண அய்யர் அவர்களின், ‘திருவாங்கூர் நாட்டு பழங்குடியினரும் சாதிகளும்’ (Travancore Tribes and Castes Vol. P. 292-3) என்ற நூலினைக் காண்க. .
9) திருவாளர் எச்.ஆர். ஹால் (H.R. Hall) அவர்களின், “அண்மைக் கிழக்கு நாடுகளின் பண்டை வரலாறு” (The Ancient History of the Neảr East) என்ற நூலின் 173 மற்றும் 174-212 ஆகிய பக்கங்களைக் காண்க. 10) இளம் ஆசியா (Asia Minor) நாட்டின் தென்மாநில மக்களாகிய லிலியன் மக்களும், அவர்களின் இனத்தவர்களும், (The Lycian and thier Affinities) என்ற நூலினைக் காண்க. லிஸியா என்ற பெயர் பழமையானது. நம் போலும் பிற கடலோடும் இனத்தவர்களோடு கூடி, எகிப்தியர்களோடு போரிட்டுக் கைது செய்யப்பட்ட, லிசியன் பழங்குடியினரை, எகிப்து நாட்டு “ருக்கு” (Ruku) என்ற இடத்துப் புதைமேடுகளில் காணலாம் என, எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், அப்படியாகவும், வரலாற்றுத் துறைத்தந்தை என அழைக்கப்படும். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர் திருவாளர் எரோடோட்டஸ் (Herodotus) அவர்கள் “மில்யாஸில்” (Milyas) அந்நாட்டின் நனிமிகப் பெயர் ஒன்றையும், “ஸொலியிமி” (Solymi) மற்றும் “டெர்மிலொய்” அல்லது “டெர்மிஸை” (Tremiloi or Termilai) களில், மேலும் பழங்காலக்குடி வாழ்நர்களையும் அடையாளம் கண்டுள்ளார். “த்ரேமிலை” (Tremiai) என்ற பெயர் லெஸியன் (Lycian) என மாறுவதற்குக், கிரேக்க நாட்டுக் கற்பனைப் பழங்கதையில் வரும், ‘பெல்லெரோபோன்’ (Bellerophon) என்பானைப் பொறுப்பாளி ஆக்குகிறார். அதே சமயத்தில், அவர் காலத்திலும்கூட, ‘த்ரெமிலை’ (Tremiai) என்ற பெயர், அந்நிலையிலும் வழக்காற்றில் இருந்தது. பிற்காலத்தில், மக்கள் இன ஆய்வாளர்கள், கிரேக்கப் பழங்கதையாகிய ஒடிஸ்லெய் (Odyssey)யின் பாடலாசிரியரும். அந்நூலில் இடைச்செருகல் செய்தாரும், கிரேக்கம் முதலாம் நாடுகளில் வாழ்ந்திருந்த பழங்குடியினராம், பெலஸ்கோயி (Pelasgol) மக்களோடு, வேறு பல்லின மக்கள் வாழ்ந்த, 90 நகரங்களை கொண்ட ஒரு நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஓரினத்தவராகக் கொள்ளும், கிரீட் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தாருள் ஓரினத்தவராக அடையாளம் காண்கின்றனர். ஆசிய நாட்டில், நாகரீக வளர்ச்சி பெறாப் பகுதியாக இப்பகுதி இருந்தும், மேலைக்கடற்கரை நாடாம் ஆசியா மைனர் போலப் பல மாவட்டங்களைக் காட்டிலும் நனிமிக அதிகமான கல்வெட்டுக்களைக்-கிரேக்க மொழி அல்லாத வேற்று மொழிக்-கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது. அக்கல்வெட்டுக்கள் எண்ணற்றன என்றாலும், அவை, பெரிய ஆராய்ச்சிக்குப் பின்னர்ப், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒன்றானவாகவும், அறிந்த மொழிக்குடும்பம் எதிலும் சேர்ந்ததாக உறுதியாகக் கொள்ள முடியாதவாகவும் உள்ள தம் மொழியின் தோற்றம் குறித்த விளக்கம் எதையும் தரவில்லை. பலநிலைகளில், லிஸிய இன மக்களின் பழக்க வழக்கங்கள், ஆசியா மைனர் நாட்டுக்குத் தென்மேற்கில் உள்ள கரிய நாட்டு மக்களின் (Carian) பழக்க வழக்கங்களோடு ஒத்துள்ளன. ஆனால், ஒருநிலையில், அவை தெளிவாக, உறுதியாக வேறுபட்டனவே. லிலிய நாட்டவர் மக்கள் இனஉறவைத் தாய்வழி மதிப்பிடுகின்றனர். குடியுரிமை உள்ள ஒரு பெண்ணுக்கும், ஓர் ஆண் அடிமைக்கும் பிறந்த மக்களைச்சட்ட உரிமை பெற்றவர்களாக ஆக்குகின்றனர். ஆனால் குடிஉரிமை பெற்ற ஓர் ஆணுக்கும், ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பிறந்த மக்களுக்கு உரிமையை மறுக்கின்றனர். (The Cambridge Ancient Histroy. Edited by J.B.Bury, S.A. Cook and F.E. Adcock Vol II. The Egyption and Hittite Empires to 1000 B.C. page 9.)
திருவாளர் கனகசபை அவர்கள், தென் இந்தியாமீது படையெடுத்து வந்து நாகர்களை வென்ற மங்கோலிய இனத்தவருள் நனிமிகப் பழமையானவர்கள் மாறர்கள் ஆவர்; அந்நிகழ்ச்சிக்குப் பின்னர், அவ்வினத்தின் தலைவன், தென்கோடி இந்தியாவில், நனிமிகப் பழங்காலத்தே குடிபெயர்ந்தவர் தமிழர் ஆதலின், ‘பழையன்’ என அழைக்கப்பட்டான் என்றெல்லாம் கூறியுள்ளார். அடுத்துப் படையெடுத்து வந்த தமிழ் இனத்தவர், கடல் அரசர் எனும் பொருள் தரும் திரையர் ஆவர். அவர்கள் பெரிய கடலோடி இனத்தவர். அவர்களின் தாயகம் வங்கத்தின் தாழ்பகுதி. அவர்கள் கடல் வழியாகப் பர்மா, தென்சீனக் கடலைச் சார்ந்த கொச்சின் சைனா, இலங்கை, தென் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். இவ்வினத்தைச் சேர்ந்தவனும், இன்றைய காஞ்சீபுரமாம் கச்சியை ஆண்டவனும், கரிகால் சோழனின் சம காலத்தவனும் ஆகிய திரையன் என்பான். இந்துப் புராணங்களின்படி, கடலைப் படுக்கையாகக் கொண்ட விஷ்ணுவின் வழிவந்தவனாவன்.
தமிழர்களின் மற்றொரு பிரிவினர் கடவுட்டன்மை வாய்ந்தவர் எனும் பொருள் உடையதான ‘வானவர்’ என்பவராவர். அவர்கள் அகச்சான்றுகளின்படி வடக்கு வங்காளத்து மலைநாட்டு இனத்தவரே. இவ்வினத்தைச் சேர்ந்த சேர அரசர்கள். தங்களை வானவர் என்றே அழைத்துக்கொண்டனர். அவர்கள், இமாலயத்துக் குடிவாழும் இனத்தவரோடு உறவு கொண்டாடினர். தங்களின் அம்மூலத்தை வெளிப்படுத்த வானவரம்பன், இமயவரம்பன் எனும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். சேர அரசர்கள் அல்லாமல், முதிரமலைத் தலைவனும் நன்னன் போலும் மலைநாட்டுத் தலைவர்களும், அழும்பில் வேள்முதலானோரும் தங்களை வானவர் தலைவர் எனும் பொருள்தரும் வானவிறல்வேள் என அழைத்துக்கொண்டனர்.
திருவாளர் கனகசபை அவர்களின் மேலே கூறியுள்ள கருத்துகள், அவர் இது எழுதிய பின்னர்ச் செய்த ஆராய்ச்சி முடிவுகளின்படி ஏற்றுக்கொள்ளக் கூடாதனவாம். இக்கருத்தோடு முற்றிலும் மாறுபட்ட முடிவினை மேற்கொண்ட திருவாளர் ஜூலெஸ் வின்சென் (Jules Vinsen) அவர்களின் கருத்து அறிய, ‘தமிழரின் தொல்பழம்பொருள் திரட்டு’ Tamilian Antiquary (No 1 , P.12)யைக் காண்க.
12) திருவாளர் ராய் பகதூர் சரத் சந்தர ராய் (Rai Bahadur Sarat Chandra Roy) அவர்கள், மக்கள் இனக் கூட்டமைப்பில் அடையாளம் காண்கிறார். இயலக்கூடிய அனைத்து வகையிலும், தொடக்கநிலையில் முதன் முதலாகக் குடிவந்தவர் மலைநாட்டு ‘செமங்’ (Semangs), அந்தமான் தீவு மின்கோபிகள் (Mincopics) ஆகிய மக்களோடு இன உறவு உடைய, சிறிய, கரிய சுருண்ட தலைமயிர் கொண்ட நெகிரிடோ (Negrito) இனத்தவராவர். அடுத்து வந்தவர் திராவிடர்க்கு முந்தியவர் என்றும், சிலசமயம் ஆஸ்திரேலியரின் ஆதிமுன்னோர் என்றும் அழைக்கப்படும் நீண்ட தலையுடையவர்கள். அவர்கள், வடகிழக்கு அல்லது வடமேற்கு அல்லது கடலுள் ஆழ்ந்துபோன லெமூரியாப் பெருநாட்டிலிருந்து வந்தவர்களாதல் வேண்டும். ‘திராவிடர்க்கு முந்தியவர்கள் எங்கெல்லாம் தோன்றியிருந்தாலும், இந்திய நாட்டு ஆஸ்திரேலிய ஆதிமுன்னோர்களின் இன அமைப்பு. இந்திய நாட்டுத் தட்பவெப்ப நிலைகளின் ஆதிக்கத்தால் முடிந்த முடிவாக, இந்திய நாட்டவராகவே முடிவுசெய்யப்பட்டு, இந்திய நாட்டின் உண்மையான பழங்குடியினராகின்றனர். இந்தியாவுக்கு, அதன் பின்னர் வந்த, அலை அலையான குடிபெயர்ப்பாளர், தங்களோடு, உழவுத்தொழில் பற்றிய அடிப்படை அறிவு, தாழியில் புதைத்தல், இறந்தவர் நினைவாகச் செப்பனிடப்பெறாக் கற்களை நாட்டுதல், புதிய கற்காலக் கருவிகள், கப்பல் ஒட்டும் அறிவு மற்றும் புதிய மொழிகளைக் கொண்டுவந்த, மத்தியதரைக் கடல் இனத்தவருள் பழைய கிளையினராவர். அவ்வினத்தவரின் முக்கிய பிரிவினர், திராவிட முன்னோர்களாலும், நெகிரிடோ இனத்து மூதாதையர்களில் அழிவுறாது எஞ்சியவர்களாலும் அங்குமிங்குமாக வாழ்ந்து வந்த தென்னிந்தியத் தீபகற்பத்தில் குடியேறினர்.
வட இந்தியாவில் வந்து தங்கிவிட்ட, மத்தியதரைக் கடல் பகுதியைச் சார்ந்த ஒரு சில வந்தேறிகள், காலப்போக்கில், வட இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்த திராவிடர்களுக்கு முந்திய இன மக்களிடையே மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர். திராவிடர்களின் ஆதிமூதாதையர் என நம்மால் அழைக்கப்படுபவர்களும், அவர்களின் வழிவந்தவர்களும் ஆகிய தென்னிந்தியாவில் வந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர், ஆஸ்திரேலிய ஆதிமுன்னோர்களின் ரத்தத்தோடு கலந்த ரத்தக் கலப்பைப், பையப்பையப், பல்வேறு அளவில் பெற்று, மேலும் காலம் செல்லச்செல்ல, திராவிட நாகரீகம் என இன்று நாம் அழைக்கும் ஒரு நாகரீகத்தைத் தோற்றுவித்தனர். நிலைத்த சிற்றுர் வாழ்க்கை, சிற்றுர் அமைப்பு, சிற்றுர் அரசப்பணியாளர், சிற்றுர்க் கடவுள்கள், சிற்றுர் அறங்கூறு அவை ஆகியவற்றைப் பெற்றிருப்பதற்கு இந்தியா, அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. (Journal of the Bihar and Orissa research Society Vol.XXIV 1958, Page, 37.38.)
13) முண்டா மொழிகள், சந்தால்பர்கனா, மத்திய மாநிலம், வடசென்னை, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பெருவழக்காம். முண்டா மொழிகளோடு இனத் தொடர்புடைய மொன்-கமெர் (Mon-Khmer) என்ற குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள், பர்மா, மலேயத் தீபகற்பம், அன்னம், கம்போடியா, மற்றும் நிக்கோபார் தீவுகளில் பேசப்படுகின்றன. திராவிடமொழிக்குடும்பம், தமக்கே உரிய பற்பல சிறப்பியல்புகளைக் கொண்ட மொழிகளின் கூட்டமாம் என்ற, திருவாளர் ஸ்டென் கொனெள (Sten Konow) அவர்களின் கூற்று சரியானதே (Encyclopaedia Brittanica, 14th Edition Vol. XV, P.957-58).
14) பலுசிஸ்தானத்தில் வழங்கும் ‘பிராகுவி’ என்ற மொழியில் காணலாம். திராவிட மொழிக்கே உரிய சிறப்பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு, திருவாளர் ‘டென்யஸ்பிரே’ (Denys Bray) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் எது எப்படி ஆயினும், சில அறிஞர்கள் ஒரு மொழிக்கு, அதன் உரிய இடத்தைக் கொடுப்பதற்குச் சரியான முக்கியத்துவமாக, அம்மொழி எழுத்துக்களிடையே உள்ள ஒருமைப்பாட்டு உறவினைக் கொள்வதாகத் தெரிகிறது. அவர்தம் வாதத்தின் போக்கு, பின்பற்றுவதற்குச் சிறிது சிரமமானது.
தன்சொற்களில், இருமடங்கு இலத்தீன் மயமாக மாற்றப்பட்டுவிட்ட, வடஐரோப்பிய மொழியாகிய டியோடோனிக் (Teutonic) இல்லையேல், ஆங்கிலமொழி என எதுவும் இல்லை. யாதோ ஒர் இயற்கைப் பிறழ்ச்சியால், பிராகுவி மொழி, திராவிடத் தாய்மூலத்திலிருந்து, வழிவழியாகப் பெற்ற எல்லாச் சொல்லுருபுகளையும் அறவே களைந்து எறிந்துவிட்டு, அதற்கு ஈடாகப் பெயர்கள் மற்றும் சுட்டுப் பெயர்களோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கவும், வினைகளோடு சந்திப்பு, இடைச் சொற்களை இணைக்கவும், இரானியமொழி அல்லது இந்திய மொழி இலக்கண நெறிகளை மேற்கொண்டால், குறிப்பிடத்தக்க சிறப்பு இயல்பால், திராவிட மொழித் தன்மை வாய்ந்த, சொல்லுருபோடு இணைந்த எதிர்மறை வினைத்திரிபுச் சொற்களுக்குப் பதிலாக, இலக்கண மரபு அல்லாத, வலிந்து கொள்ளும் ஒருவழியில், சாதாரண எதிர்மறை வினையெச்சத்தை மேற்கொண்டு திராவிட மொழியின், அழியாது நிற்கும் எஞ்சிய பகுதியின் இலக்கணக் கட்டமைப்பை, அதன் தன்மை, முன்னிலை, படர்க்கைச் சுட்டுப் பெயர்கள், வினாச்சொற்கள், சுட்டுப் பெயர்ச்சொற்கள் ஆகியவற்றைச் செம்மை செய்ய முனைந்தால், இந்திய, இரானிய மொழிகளில் இருந்து கடன்வாங்கிய சொற்கள், இப்போதும் நனிமிக அதிகமாக இரண்டறக் கலந்திருப்பதுபோல், திராவிட மொழிச் சொற்கள் பெருமளவில் இரண்டறக் கலந்திருந்தாலும் அதைத் (பிராகுவி மொழியை) திராவிட மொழிக் குடும்பமொழியாக, இன்னமும் கொள்வதாக இயலாத ஒன்றாம். இக்கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டப்படும், இரண்டாந்தரச் சான்றாகிய, சொற்களிடையே உள்ள ஒருமைப்பாடும் போதுமானதும் அன்று: ஏற்கக் கூடியதும் அன்று. தூய திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்ட சொற்கள், நனிமிகக் குறைவு என்பது உண்மை; ஆனால், அவை, வளம்மிக்க சொற்களின் சிறுபான்மையினவே. அது, நனிமிக அடிப்படையான மூலத்தோடு ஒட்டிய கருத்துக்களை வெளிப்படுத்தவல்ல சொற்களால், முழுமையாக ஆக்கப்பட்டுள்ளது. வாய்,காது, கண், மூளை, இரத்தம், உறக்கம், முடி, அடி போலும் அடிப்படைச்சொற்கள்; பெரிய, சிறிய, புதிய, பழைய, இனிய, கசக்கும், உலர்ந்த, வெய்ய, சிவந்த என்பன போலும் பெயரெச்சச் சொற்கள்; நான், நீ, அவன், நாம், நீ, அவர், யார், எது, எத்தனை, மற்றவைபோலும் சுட்டுப்பெயர்கள் இரு, ஆகு, வா, கொடு, தின், பேசு, கேள், பார், உணர், எடு, அடி, அஞ்சு, இற என்பன போலும் வினைச்சொற்கள்; முன்னர் பின்னர், இனியும் இன்று என்பன போலும் வினையெச்சங்கள் (The Brahuilanguage Part II, P. 16).
15) திருவாளர் ஜி.ஆர். ஹண்டர் (G.R Hunter) அவர்களின் அரப்பா மற்றும் மொகஞ்சொதாரோ எழுத்துக்களும், அவை, பிறமொழி எழுத்துக்களோடு கொண்டுள்ள உறவும் (Thescript of Harappan and Mohenjodaro and its connection with other script) என்ற நூலைக் காண்க. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் ஓவிய வடிவு எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் காணப்பட்டன. இவைபோலும் எழுத்துமுறை, சுமேரிய, மொழியிலும், மற்றும் ஈரான் நாட்டு, எலாமிட் மக்களின் ஆதிமுன்னோர் (proto-Elamite) மொழியிலும் எதிர்ப்படுகின்றது. ஓவிய வடிவு எழுத்து முறையாகிய, பண்டைய இவ்வெழுத்து முறைக்கு, அவை, பொதுமூலம் ஒன்றைக் கருதுகின்றனர். இது, சிலப்பதிகாரத்தில், பண்டப் பொதிகள் மீது எழுதப்படுவதாகக் கூறும் கண்ணெழுத்து அல்லது வேறு அன்று. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி.” (சிலம்பு :5: 1.12)
16) மூன்றாவது மற்றும் நான்காவது அரச இனத்துத் தலைநகராகிய மெம்பிஸ் (Memphis), மேலை எகிப்துக்கும் கீழை எகிப்துக்கும் இடைப்பட்ட எல்லைக்கண் எழுப்பப்பட்டது. (W.J. Perry: The Growth of Civilization p. 97-98. Pelican book)
17) வேத அட்டவணை காண்க. See the Veidc Index part I. p 346-9.
18) அருள் தந்தை ஈராஸ் (Rev. Father Heras) அவர்களின் கருத்து ஈண்டுக் குறிப்பிடல் தகும். எகிப்து மற்றும் ஆப்பிரிக்க நாட்டு, ஆம் (Ham) என்பான் வழிவந்த ஆமிடிக் (Hamic) இனத்து மூலக்கருவாக அடையாளம் காணும் திராவிடர், ஊழிப் பெருவெள்ளத்துக்குப் பின்னர், சிந்து நதிக்கும், கங்கை நதிக்கும் இடைப்பட்ட பெருநிலப் பரப்பில் குடிவாழ்ந்திருந்தபோது, ஆங்கு. அதிலும் குறிப்பாகத் தென்கரையில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென்கரையில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக் கருவிகள் வடிவில், தங்களின் பழைய, எண்ணற்ற அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற கறுப்பர் இனத்து ஒரு கிளையினரான, மலேய நாட்டுக்குள்ள உருவ “நெக்ரிட்டோர்”களை (Negritres) எதிர் கொண்டனர். அவர்களின் வழிவந்தவர்கள், வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் இன்றும் வாழ்கின்றனர். ஆமெடிக் இனத்தவரோடு கலந்துவிட்ட திராவிடக் குடிவாழ்நர், நனிமிகத் தொடக்க காலத்தில் நெக்ரிட்டோ இனத்தவரோடு கலந்துவிட்டனர். இக்கலப்பால், தோன்றிய அவர் வழிவந்தவர்கள், இன்று தென்இந்திய மக்களிடையே காணலாகும், தமக்கே உரிய உடல் அமைப்பை இயல்பாகவே பெற்றுக்கொண்டனர். குள்ள உருவம், நனிமிகக் கறுத்தமேனி (ஆமெடியர்களின் மேனிக் கறுப்பு போன்றதன்று). தட்டையான மூக்கு, சுருண்ட தலைமயிர் கி.மு. 1500 ஆண்டளவில், ஆரியர்கள், இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்ட தாலர் அல்லது தஸ்யூக்களாம். தங்கள் பகைவர்களிடையே, மேலே கூறியன போலும், தாம் முன்பு கண்டறியாத இயல்புகளைக் கண்டனர். இருக்கு வேதப் பாடல்களில் அவர்களை மூக்கற்றவர்கள் எனக் கூறி, அவர்களின் இழிவான அருவருக்கத்தக்க நிலைகளைச் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக் கூறி வைத்தனர். (New Review September. 1941).
19) அமரர் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தென்னிந்திய மக்களின் பண்பாடு, மற்றும் இன இயல்புகள், தொல்லூழி காலம் முதல் இடையறவு படாமல் தொடர்ந்து வருவது என்ற கொள்கையை நிலைநாட்டும் நல்ல ஆர்வமிக்க முனைவராவர். ‘தென் இந்தியாவில் பழங்கற்கால நாகரீகம், பையப்பைய முடிவுற்றுப், புலனால் அறியப்படாநிலையில், புதிய கற்காலத்தால் மறைந்து ஒளிகுன்றி விட்டது. பழங்கற்காலம் முடிவுற்று அடுத்த பாகம் தொடங்கும்போது, பேரழிவு விளைவிக்கும் இயற்கை நிகழ்ச்சியை உணர்த்தும் நிலஇயல் சார்ந்த அல்லது வேறுவகையான குறிப்பு எதுவும் இல்லை. பொன்கலந்த மென் பாறைகளுக்குப் பதிலாகக் கடினப் படிக்கல் பாறைகளை மேற்கொண்டது, படிக்கல் பாறையால் செய்யப்பட்ட, கருவிகள் தளவாடங்களைத் தொட்டால் நனிமிக மென்மை தரும் வகையில் மெருகேற்றும்-கலையினைக் கற்றல், காட்டுக் கொடு, நாய்களை வீட்டு நாய்களாகப் பழக்குதல், மோட்டா வகை நெல்லை விளைவித்தல் ஆகியன பழைய கரடுமுரடான கருவிகள் இடத்தில் புதிய கற்காலக் கருவிகள் தோன்றுவதற்கான, அமைதியான வளர்ச்சிக்கும், பழங்கற்கால நாடோடி வாழ்க்கையிலிருந்து, புதிய கற்கால நிலைத்த வாழ்க்கை முகிழ்த்தற்கும் வழிவகுத்தனவற்றை விளக்க முனைந்துள்ளார்.
“புதிய கற்கால யுகத்தில், விந்திய மலைச்சாரல் சார்ந்த பகுதி நீங்கலாக உள்ள, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த கிளை மொழிகள் பேசப்பட்டன: வட இந்திய, புதிய கற்காலத்தவர், திராவிட மொழிக்குடும்ப மொழிகள் என அழைக்கப்படும்மொழிகளோ, கட்டமைப்பில் ஒருமைப்பாடு உடையதும், சமஸ்கிருதம் அல்லது பிராக்கிருத மொழியோடு ஒருமைப்பாடு அற்றதும், தொல் பழங்கால மக்கள் வழங்கிய, தனித்தனிச் சொற்றொடர்களைக் கொண்ட நிலைமொழிகளிலிருந்து படிப்படியாகத் தோன்றியதுமான ஒருவகை மொழிகளைப் பேசினர்’ என மேலும் கூறியுள்ளார். அப்பேரறிவு சான்ற அவ்வெழுத்தாளர் (Journal of the Biharand Orissa Research Society Vol. XXIV, p.39-40).
இந்தக் கொள்கையின்படி, திராவிட இனம், இந்நிலத்துக்கே உரிய தொல்பெரும் பழைய இளம் தமிழர் மற்றும் அவரோடு இனத்தொடர்பான மக்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்கள் வழங்கும் மொழிகள், அவை இப்போது எங்கே பேசப்படுகின்றனவோ அங்கேயே படிப்படியாக வளர்ந்து முழுமை பெற்றவை. தென் இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்திய, அங்கேயே இருந்த பண்டைக்கால நினைவுச்சின்னங்கள் பற்றிய விழிப்போடு கூடிய ஆய்வு, தொல்பழங்காலத்தில் நாகரீகம், ஒருகட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைத்தது. பண்டே வாழ்ந்திருந்த மக்களோடு, வேறு நாட்டவர் அல்லது இனத்தவர்களின் தேவையில்லாத் தலையீட்டால் நேர்ந்த போராட்டம் போலும் பேரழிவு தரும் மாற்றங்களால் அல்லாமல் அமைதியான மறுமலர்ச்சி நிலையிலேயே அடியெடுத்து வைத்தது: என்ற முடிவிற்கல்லது வேறு, முடிவிற்குக் கொண்டு செல்லாது. புதிய கற்காலத்து நிலப்படத்தின் ஓர் ஆய்வு, அந்நாடு அம்மண்ணுக்கே உரிய நாகரீகம் வாய்ந்த மக்களால் நெருங்க வாழப்பெற்றிருந்தது.தங்களின் பழங்கால இலக்கியங்களில் பதிய வைத்திருப்பதுபோல், அம்மண்ணுக்கே உரியவர்களாக உரிமை கொண்டாடும் தமிழர்களைப் போலவே, அந்நாட்டுப் பிறமக்களும் தொல் பழங்குடியைச் சேர்ந்தவர் அவர் என்ற உண்மைகளை உறுதிசெய்யப் போதுமானதாம். தமிழ் மொழியின் நனிமிகப் பழங்காலத்து வளர்ச்சி நிலைகளில், புதிய கற்காலத்து நாகரீகத்திற்கான தேவைக்கு மேலும் அடையாளங்களை மட்டும் அல்லாமல் அதை அடுத்து வந்த இரும்புக் காலத்து நாகரீகப் பிறப்பையும் கண்டுபிடிக்கலாம். (Jounal of Bihar and Orissa Research Society Vol. XXIV, p. 41-42).
20) தென்னிந்திய மக்களைத் தமிழர்கள் என்றும், தமிழர்களுக்கு முந்தியவர்கள் என்றும் வகைப்படுத்தும் நிலையில், திருவாளர் டாக்டர் மக்லியன் அவர்கள் பெரும்பாலும் சரியான முடிவையே கண்டுள்ளார். வேறுபாடு இனத்தைச் சார்ந்தது அன்று. மாறாகப் பண்பாட்டைச் சார்ந்தது. ஒவ்வோர் ஊழியும் கரடுமுரடான கல்லால் செய்யப்பட்ட கருவிகள் மற்றும், கற்குவியலால் ஆன சவக்குழிக் காலம் முதல், சங்ககாலம் மற்றும் சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம் வரையான தமிழர் நாகரீகத்தின் வளர்ச்சி, மற்றும் பெருக்கங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எது எப்படியாயினும், அவர்கள் வரலாற்றின் நனிமிகப் பழங்காலத்தில், இந்தியத் தீபகற்பத்திற்கு வந்து குடியேறிய வெளிநாட்டவர் என்பதற்கான மரபுவழிச் செய்தி எதுவும் தமிழர்க்கு இல்லை. அதற்கு மாறாக, அவர்கள் இம்மண்ணிலேயே பிறந்தவர் என்பதற்கு ஆதரவான அனைத்தும் உள்ளன. திசைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வு, கீழ்த்திசையை உணர்த்தும் கிழக்கு என்ற சொல், கடலை நோக்கித் தாழ்ந்து செல்லும் சாரலையும், மேலைத் திசையை உணர்த்தும் மேற்கு என்றசொல் மேற்கு மலைத் தொடர்ச்சியாம் மேட்டு நிலத்தையும் குறிக்கும். இது இந்தியத் தீபகற்பத்தைச் சார்ந்த மக்களின் கருத்துக்களோடும் நனிமிகப் பொருந்தியுள்ளது. (See V. Rangacharya op. cit. p. 70-7l).
22) தென்னிந்திய மொழிகளின் குடும்பம் ஒரு காலத்தில், ஐரோப்பிய எழுத்தாளர்களால் "தமுலியன்" அல்லது "தமுலீக்" என்ற பெயரால் குறிக்கப்பட்டது. 1856ல் வெளிவந்த, திராவிட அல்லது தென்இந்தியக் குடும்ப மொழிகளின் "ஓப்பீட்டு இலக்கணம்". (A Comparative Grammar of the Dravidian or South-lndian Family of Languages) என்ற நூலின் முதற்பதிப்பில் திருவாளர் டாக்டர் கால்டுவெல் அவர்கள், "திராவிடன்" என்ற சொல் சில காலம் வரை, பெரும்பாலும் தமிழை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டு வழங்கி வந்தது. ஆனால், அது சமஸ்கிருத மொழி வல்லுநர்களால், தென் இந்திய மக்களையும் அவர்களின் மொழிகளையும் குறிக்கும் பொதுப்பெயராகவே ஆளப்பட்டது எனக் கூறியுள்ளார். தம் கூற்றிற்குச் சான்றாக, "ஆந்திர-திராவிடபாஷா" என்ற சொல்லைக் குமாரில பட்டர். தமிழ்நாடு, மற்றும் தெலுங்கு நாடுகளில் வழங்கும் மொழிகளைக் குறிக்க ஆண்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் பர்னல் (Dr. Burnell) அவர்கள், குமாரில பட்டரின் தமிழ்மொழி குறித்த தெளிவான அறிமுகம், குறிப்பிடத்தக்க ஒன்றாம், "திராவிடம்" என்ற சொல், தமிழ் எனும் பொருள் உடையதாக அவர் கொள்வது பயன் மிகுந்தது எனக் கூறியுள்ளார். (The Indian Antiquary for October 1872). திராவிடர் கூடித்திரியர்கள் ஆவர். அவர்கள் பெளண்டரிகர், ஒட்டர், காம்போஜர், யவனர், சாகர், பரதர், பஹலவர், சீனர், கிராடர், தாரதர் மற்றும் காசர்களைப் போல, “வீர்ஸ்லா” அதாவது இழி சாதியினர் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என மனு கூறுகிறார். (X. 43-44) ஈண்டுக் கூறிய பழங்குடியினர்களுள் தென்னிந்தியாவுக்கு உரியவராகக் கூறப்பட்டவர், திராவிடர் ஒருவரே. ஆகவே, இப்பெயர் தென்னிந்தியப் பழங்குடியினர் அனைவரையும் குறிக்க எண்ணியதாகத் தெரிகிறது. கூறிய இனங்களுள், ஏதாவது ஓர் இனம் இணைக்கப்படவில்லை என்றால், அது, பெரும்பாலும், ஐத்திரேய பிராமணாவில் குறிப்பிடப்பட்டு, விஸ்வாமித்திரரின், கீழ்ச் சாதியினராகத் தள்ளப்பட்ட புண்டரர், உபரர், புளிந்தர்களோடு வகை செய்யப்பட்ட, உள்நாட்டு, தெலுங்கு பேசும் ஆந்திரராவர். அதே கருத்து மகாபாரதத்திலும் கூறப்பட்டுளது. இனத்தால் இழிந்த கூத்திரியர்களாகக் கொடுக்கப்பட்ட அந்த இரு பட்டியல்களிலும், தென்இந்தியப் பழங்குடியினராகக் குறிக்கப்பட்டவர் திராவிடர் ஒருவரே. ஆகவே, பாண்டியர், சோழர் போலும் தனித்தனிக் குலங்களைக் குறிக்கும் சொற்கள் வடஇந்தியாவில், அந்தக் காலத்தில் நன்கு தெரிந்திருந்தன என்பதை நோக்க, அச்சொல் பொதுவாகவே ஆளப்பட்டுள்ளதாகவே கொள்ள வேண்டும். ஐயத்திற்கு இடம் இல்லாமல், அதே பொருள்நிலையில்தான், ஊழிவெள்ளத்திற்குப் பின்னரும் வாழ்ந்த மனித இன முன்னோர் ஆன நோவா (Noah) என்பவனைப் போலும் இந்திய நோவாவாம், சத்திய வரதனும், திராவிடர் தலைவன் எனப் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளான். (Muir's Sanskrit Text Vol. 1). 23) திருவாளர் வி. ஆர். ஆர். தீகூஷிதர் அவர்களின், “தமிழ் நாகரீகம் என்றால் என்ன” (What is Tamil Culture) என்ற ஆய்வுக் கட்டுரையினைக் காண்க. (New Review: Culcutta. June 1937 Page: 513-26).
25) திருவாளர் ஆர். புரூஸ் புட்டே(R.Bruce Foote) அவர்கள், இந்தியாவின் நிலஇயல் ஆய்வுத் துறையில், 1858ஆம் ஆண்டில் சேர்ந்து, 33 ஆண்டுகள் போலும் தம்முடைய நீண்ட பணிக்காலத்தை, நிலஇயல் மற்றும் புதைபடிவ ஆய்வில் செலவிட்டார். அவர் 1863ல், சென்னைக்கு அருகில் பழங்கற்காலத்துக் கருவிகள் சிலவற்றைக் கண்டுபிடித்து இந்தியாவில் இத்துறையின் முன்னோடியாக விளங்கினார். தம் முதல் கண்டுபிடிப்பு குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:
ஆங்கில நாட்டுச் சிறந்த நிலநூல் ஆய்வாளர்களாகிய திருவாளர்கள் ஜோஸப் ப்ரெஸ்டவிச் (Josep Prestwich, John Evans) மற்றும் ஹக் பால்கானர் (Hug Falconer) ஆகியோர், வட பிரான்ஸ் நாட்டில் ஓடி, ஆங்கிலக் கால்வாய்க் கடலில் கலக்கும் ‘சோம்மே” (Somme) ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்ட, கடின பாறைக் கல்லைச் செதுக்கிச் செய்யப்பட்ட கருவிகளைத் தொடக்ககால மனிதன் கையாண்ட, கலைத்தொழில் சிறப்பு வாய்ந்த கருவிகளாக, முழுமையாக உறுதிசெய்தது. கடந்த நூற்றாண்டின் தொடக்க அறுபது அளவில் மனித இனத்தோற்றம் பற்றிய ஆய்வில் ஆர்வம் மிக்க ஒவ்வொருவரையும் கிளர்ந்தெழச் செய்தது.
குறிப்பிடத்தக்க, வியத்தகு இக்கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி, என் எண்ணங்களை அப்போது என் பணி செயல்பட்ட தென் இந்தியாவில் அவைபோலும், தொடக்க கால மனிதனின் கலைக்கான அடையாளங்களைக் காணும் இன்றியமையாமைக்குத் திருப்பிற்று. ஆகவே 1863, மே, 30ல் சென்னைக்குத் தெற்கில் உள்ள பல்லாவரத்தில், படை அணி வகுப்புத்திடலில், இருப்புப்பாதையில் பரப்பும் செந்நிறக் கருங்கல் ஜல்லி குவித்து வைத்திருக்கும் குழியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களிடையே, உண்மையான, வெட்டிச்செய்யப்பட்ட கருங்கல் கருவிகளைக் காணநேர்ந்தபோது, அது, எனக்கும் பெரிய வியப்பாக இருந்தது என்பதிலும், உண்மையான மனநிறைவையே தந்தது. பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்டவை, உண்மையான பழங்கற்காலத்தைச் சேர்ந்தனவாம் என்ற என் மதிப்பீட்டின் உண்மை, என் நண்பரும், என்னோடு பணிபுரிபவரும் ஆகிய இளநிலை எழுத்தாளர் திருவாளர் வில்லியம் கிங் (William King) அவர்களோடு, சென்னைக்கு 40 கல், வடமேற்கில் உள்ள அட்டரம் பாக்கத்து நீரோடையில் கண்டெடுத்த மிகப்பெரிய, இவைபோலும் கலைத்தொழில் சிறப்பு வாய்ந்த பொருள்களால் உறுதி செய்யப்பட்டது. இது 1863 செப்டம்பரில்.
26) திருவாளர் ஜே. டபள்யூ. பிரீக்ஸ் (j.W. Breeks) அவர்கள், நீலகிரி மலைநாட்டில், கற்குவியல் வடிவிலான சவக்குழிகள் பலவற்றைத் தோண்டி, அவைபற்றித், தம்முடைய, முக்கிய நூலாகிய நீலகிரிமலைப்பகுதி, நினைவுச்சின்னங்களும், பழங்குடி மக்களும் மதிப்பீடு ("Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris") என்ற நூலில் விளக்கியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த, திரு. "ரே" (Rea) அவர்கள். திருநெல்வேலியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்திய பழங்காலப் பொருள்களைச் சென்னை அரும்பொருட்காட்சி அகத்தில் குவித்து வைத்துள்ளார். (தென்பால் இந்தியாவில் உள்ள, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய புதையிடங்கள் (Some pre Historic Burial Places in Southern India) என்ற திருவாளர் ரே அவர்கள் நூலையும், பல்லாவரத்தில் உள்ள பாரக்கல் சார்ந்த பொருள்களும், மண்பாண்டங்களும் நிறை கல்லறைகள் (Megalithic and Earthenware tombs at Pallavaram) என்ற நூலையும் காண்க. (J.A.S.B. Vol. IVII part No. 2 of 1885).
27) புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூர் வட்டம், அன்னவாசல், மனிதனின் தொடக்க காலவாழிடம். அமரர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், இந்த மாவட்டந்தான், பழங்கற்கால மனிதனின் தாயகம்; புதுக்கற்கால மனிதனின், பிணம் புதை வழக்கங்களைக் கண்டறிவதற்கு ஆராயத்தக்க மாவட்டமும் இந்த மாவட்டந்தான், என்ற அழுத்தமான கொள்கையைக் கொண்டுள்ளார். இன்றைய புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், மனிதன், பழங்கற்காலக் காலம் முதல், இன்று வரை தொடர்ந்து வளமான வாழ்வு பெற்றமையை உறுதி செய்யும் அகக்சான்றுகள் கிடைக்கின்றன. (புதுக்கோட்டை நாட்டுக் கையேட்டினை “A Manual of the Pudukottai State: Revised Edn. Vol. I Page: 516-518, Vol. II. Chap xxiii. Sec. I) காண்க. இப்புதைகுழிகள் அனைத்தையும், வரலாற்றுக் காலத்துக்கு முந்தியனவாகவோ, புதுக்கற் காலத்துக்கு உரியனவாகவோ, பதிப்பாசிரியர் அவர்களால் வகைப்படுத்தல் இயலாது.
28) திருவாளர் புரூஸ் புட்டே (Bruce Foote) அவர்கள், தென்னிந்தியாவில் பழங்கற்காலத்துக் குறைகள் ஒருசிலவே உள்ளன; அவற்றுள் ஒன்றில் மட்டுந்தான், பழங்கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன; அவை பிரஞ்சு நாட்டில் லாமாடிலின் (Lamadeleine) என்னும் இடத்தில் காணப்படும் படிவங்கள் காட்டும் கற்காலத்தைச் சார்ந்த (Magaddlinian) செதுக்கப்பட்ட எலும்புகள், குறியீடு செய்யப்பட்ட பற்கள் போன்றனவாம். பழங்கற்காலத்தைச் சேர்ந்த மரத்தால் ஆன, கலைத் தொழில் வேலைப்பாடு அமைந்த பொருட்களும் கூடக் காணப்படவில்லை.
29) பெல்லாரி மாவட்டத்தின், ஆறில் ஐந்து பங்குப் பகுதி, கரடுமுரடான கட்டமைப்பும், இயல்மாறுபடும் தன்மையும் வாய்ந்த, கனிமம், படிகம், வெள்ளை அபிரகம், திண்ணிய கருப்பு அல்லது கரும்பச்சைக் கனிமங்கள் கலந்த அடுக்குப் பாறைகளாம் ‘கிரானிடோய்ட் (granitoid) பாறைகளாகவும், படிகம் அபிரகம் கலந்த அடுக்குப் பாறைகளாம் ‘ஜெனிஸ்ஸிக்’ (Gemissic) பாறைகளாகவும் வகைப்படுத்தப் பெறும் முதல் ஊழிக் காலத்தைச் சேர்ந்த அர்ச்சேயன் (Archaean) பாறைகளால் மூடப்பட்டுளது. இவற்றுள் மூத்தது "கிரானிடோய்ட் பாறைகள்” ‘அர்ச்சேயன்’ பாறைகளில் பெரும்பகுதி, இளம் பழுப்பு நிறம் வாய்ந்த இரும்பு கலவாப் பாறைகளாம். தார்வார் பாறைகள், நனிமிகக் கடினம் வாய்ந்த, இரத்தம் போலும் சிவந்த அடுக்குப் பாறைகளாம். சந்தூர் குன்றுகளும் செப்பு மலைத்தொடர்ச்சியும், இரத்தச்சிவப்பு அடுக்குப் பாறைகளைப் பெருமளவில் கொண்டுள்ளன. அவை, இரும்பை அதிகமாகக் கொண்டுள்ளன. சேலத்துக் காந்தம் கலந்த இரும்புப் படிவங்களிலும், அதிகமாக இரும்பைக் கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள இரும்புப் படிவங்கள் அனைத்தினும் அதிகமான இரும்பைக் கொண்டுள்ளன. இரும்புத்தொழில் இப்போது இறந்துவிட்டது என்றாலும். அண்மைக்காலம் வரை, மெல்லிரும்புச் சுரங்கங்கள் தோண்டப்பட்டுப் பழைய முறையில் உருக்கப்பட்டன. சாந்துர் மலைத்தொடர்ச்சி, பொன்தொழில் அடையாளங்களே அல்லாமல், கண்ணாடி செய்யப் பயன்படும் மாங்கனிஸ் சுரங்கங்களையும் கொண்டுளது. “அர்ச்சேயன்” மற்றும் "தார்வார்" பகுதிகளில், எண்ணற்ற, உறுதி வாய்ந்த பாறைகள் உள்ளன. பொன்கலந்த பாறைகள் நிறைந்த ஓடைகளும், படிகக்கல் கலந்த பாறைகளைக் கொண்ட சுரங்கங்களும் குறிப்பிடத் தக்கவை. இம்மலைகளில் காணப்படும் பொருள், கட்டிடங்கள் கட்டப்பயன்படும் பெரிய சோப்புக்கட்டிகள் போலும் வடிவுடைய் கற்களாம். இவை ஹடகல்லி (Hadagali) மற்றும் ஹர்ப்பனல்லி (Harbanalli) போலும் இடங்களில் உள்ள சாளுக்கிய மரபு சிறிய கோயில்களில், சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. (Bellary District gazetteer p. 13-21). பழங்கற்கால நாகரீகம், தென்னிந்தியாவுக்குப் புதிது அன்று என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. அவை, இராஜபுதனத்து நர்மதை ஆற்றங்கரை, ஜைபூர் மற்றும் ஒரிஸா போன்ற இடங்களில், பெரும் எண்ணிக்கையில் உள்ளன. என்றாலும், அவை, பஞ்சாப், இமாலயப்பகுதி, அஸ்ஸாம், மற்றும் பர்மா போன்ற இடங்களில் காணப்படவில்லை.
இரும்பைப் பயன்படுத்தும் முறை, வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவுக்கு வந்ததா அல்லது, அதற்கு மாறான நிலையிலா என்பது பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே, முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. (See. Dr. Guha. The Census of India 1931. Vol. I Part III and Prof. P.T.S. Aiyangar's Stone Age in India p.48).
30) உண்மையான இரும்புக் காலத்து மண் பாண்டங்கள். நன்கு பளிச்சிடும் வண்ணங்களும், நன்கு மெருகூட்டப்பட்ட மேல் பக்கமும் கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க, புதுக்கற்காலத்து மண்பாண்டங்கள் வெளிறிய வண்ணமும், கரடுமுரடான மேல் பக்கமும், சிறிதே ஒப்பனையும் உடையவாம். இரும்புக் காலத்தனவும், அதன், பிற்காலத்தனவுமான இவை போலும் மண்பாண்டங்கள், மைசூர் மாநிலத்து நரசிபுரச் சங்கம் மற்றும் பிரெஞ்சுப் பகுதி மலைக்குன்றுகளிலும், பெல்லாரி மாவட்டத்து மலையம், மற்றும் கர்னூல் மாவட்டத்து “பட்பட்” பகுதியிலும் காணப்படுகின்றன. இரும்புக்காலத்திற்குமுன், பித்தளை நாகரீகக்காலம் இடம் பெறாத நாடு. இந்தியா மட்டும் அன்று. திரு. ஜே.இ. ஓஸில் (J.E.Wocel) அவர்கள் கூற்றுப்படி பால்கன் கடற்கரையை சேர்ந்த யுகோஸ்லோவீகியா நாட்டிற்கு வடக்கே உள்ள ஸ்லாவோனிய (Slavonia) மக்களும், பித்தளை நாகரீகக் காலத்தை இழந்து விட்டுப் பழங்கற்காலத்திலிருந்து, நேரே, இரும்பு உருக்கும் காலத்திற்குச் சென்று விட்டனர். சீனநாடும், பித்தளை நாகரீகக் காலம் என்பதை அறியாது எனச் சொல்லப்படுகிறது.(Brue Foote Indian pre Historic and Proto Historic Antiquities. Page : 25.)
புதிய கற்காலக் கண்டுபிடிப்புகள், பழங்கற்காலத்துக் கண்டுபிடிப்புக்களை அடுத்தடுத்து, அனந்தபூர், கடப்பா, கர்னூல் மற்றும் சில மாவட்டங்களில் பெருமளவில் காணப்படுகின்றன. (அகச்சான்றுக்குக் கடப்பா மாவட்டத்து, கருப்பொருள் களஞ்சியம் (Cuddappa District gozetteer: p. 8-20) காண்க.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வராய் மலைக்குன்றுகள், சீடெட் மாவட்டங்கள். ஐதராபாத், மற்றும் பரோடா ஆகிய இடங்களில் புதுக்கற்காலத்து மண்பாண்டங்கள் நனிமிக அதிகமானவற்றை நாம் எதிர் கொள்கின்றோம். திருவாளர் புரூஸ் புட்டே அவர்கள் வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்டனவாய மண்பாண்டங்களைத் தாம் கண்ட 127 இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் 56 இடங்கள், புதுக்கற்கால இனத்தைச் சேர்ந்தனவற்றைத் தந்துள்ளன. 2 இடங்கள், புதுக் கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்கு மாறும் காலத்தைச் சேர்ந்தவை. 60, இரும்புக் காலத்தன. ஏனை இரும்புக் காலத்துக்குப்பிற்பட்ட காலத்தவை.
31) சுடுதல், முக்கியமாக வேதவழக்காம், ஆனால் தென்இந்தியாவில், அது, நுழைக்கப்பட்ட பின்னரும், ஏனைய முறைகளும் பின்பற்றப்பட்டன, என்ற கருத்தில் சிந்தனை ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். மற்றொரு முறையாகிய இறந்தார் உடலைத் திறந்த வெளியில் எறிதல், பின்வருமாறு பொருள் கொள்ளப்படுகிறது. அதர்வனசம்ஹிதா (xviii-2-34) இறந்த முன்னோர்களுக்குச் சோற்று உருண்டைகளைப் படைத்து வழிபடு நெறியில் “பரோப்தா” (தொலை விடங்களில் எறிந்து விடுதல்) மற்றும், “உத்தஹைதம்” (மேட்டுப் பாங்கான இடங்களில் எறிந்து விடுதல்) போன்றனவற்றைக் குறிப்பிடுகிறது. இறந்தார் உடலைத் திறந்த வெளியில் எறிந்து விடும் வழக்கம். ஒருவகை மாறுபட்டநிலையில், திபேத்தியர் மற்றும் பாரசீக மக்களிடையே, இன்றும் இடம் பெற்றுளது. சீன யாத்திரீகள் யுவான்சுவாங், இந்தியாவில் இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றனுள், இது ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுக்கு உட்பட்ட புதை குழிகளுள் ஒன்று எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதை, அதனுடன் அகப்படும் கண்டுபிடிப்புக்களின் தன்மையினாலேயே உறுதி செய்யப்படும் எனக் கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டக் குறிப்பேட்டின் (Pudukottai Manual) ஆசிரியர், எதில், இரும்பு அல்லது பித்தளையாலான பொருள் எதுவும் இல்லாமல், புதுக்கற்காலக் கருவிகள் மட்டுமே கிடைக்கின்றனவோ அது. வரலாற்றுக் காலத்துக்கு முந்தியதாம். எங்கெல்லாம், தாழி மற்றும் பாரக்கல் புதை குழிகள், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை எதையும், கொண்டிராமல், இரும்பாலான கருவிகளையும் பாண்டங்களையும் பெருமளவில் கொண்டிருக்கின்றனவோ, அவை, புதுக்கற்காலத்தை அடுத்து வந்த இரும்புக் காலத்துத் தொடக்கக்காலத்தனவாகி, வரலாற்றுக் காலத்தில் அடி இடுவனவாம். அகில இந்தியக் கீழ்க்கலைப் பத்தாவது மாநாட்டு நடவடிக்கையில் உள்ள, தென்னிந்தியாவில் இறந்தார் உடலை அப்புறப்படுத்தும் முறை என்ற என் கட்டுரையினைக் காண்க (See my paper on the Disposal of the Dead in S. India, in the Proceedings of Tenth All India Oriental Conference page: 530-533.)
32) திருவாளர் பெர்ரி (Perry) அவர்கள் கூற்றுப்படி கி.மு.3வது ஆயிரத்து ஆண்டளவிலேயே, கடல் போக்குவரத்து இந்தியாவைப் பாதித்துவிட்டது. ஆனால், பாரக்கல் புதையல்களின் பரந்து கிடக்கை, கடல்வழிகளைப் போலவே நில வழிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனக் கருத்து அறிவிக்கிறது. மெசபடோமியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு மேலும் முந்திய காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். மெசபடோமியா மற்றும் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு அதற்கும் முற்பட்ட காலத்திலேயே இருந்தது எனக்கூறும் திருவாளர் டாக்டர் எச்.ஜெ. ப்லெயரெ (Dr. H. Pleure) அவர்கள், அல்லது எந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளரோடும் நாம் ஒத்துப் போதல் இயலாது.