தமிழ்ப் பழமொழிகள் 1/இ
இக்கரைக்கு அக்கரை பச்சை. 3130
- (இக்கரை மாட்டுக்கு.)
இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல்.
இக்கரையில் பாகலைப் போட்டு அக்கரையில் கொழு கொம்பு வைக்கிறான்.
இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான்.
இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலன் என்ன?
இங்கு அற்றவருக்கு அங்கு உண்டு. 3135
இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம்.
இங்கு இருந்த பாண்டம் போல.
- (இங்கு-பெருங்காயம்.)
இங்கும் புதையல் இருக்குமா ரங்கா? அதற்குச் சந்தேகமா வெங்கா?
இங்கே தலையைக் காட்டுகிறான்; அங்கே வாலைக் காட்டுகிறான்.
இங்கே வாடா திருடா, திருட வந்தாயா என்றாளாம்; உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றானாம். 3140
இங்கே வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.
இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான்.
இச்சித்த காரியம் இரகசியம் அல்ல,
- (அல்லவோ?)
இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட்.
- (தெலுங்கு, இச்சிப் பெட்டின வாரிக்கு-கொடுத்து வைத்தவருக்கு.)
இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே. 3145
இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை.
இச்சையாகிய பாக்கியம் இருக்கப் பிச்சைக்குப் போவானேன்?
இச்சையும் இல்லை; இருமையும் இல்லை.
இசலிக் கொண்டே என்னோடே நிற்கிறான். 3150
இசை இல்லாப் பாட்டு இழுக்கு.
- (இசைவு.)
இசைவில்லாப் பாட்டு இழுக்கு.
இசைவு வந்தது வடமலை அப்பா!
- (வடமலை-திருப்பதி.)
இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத் தித்திப்பாய் இருக்குமே!
- (எலுமிச்சம் பழம் போல இனிப்பாய் இருக்கும். வெல்லம் போலப் புளிக்கும்.)
இஞ்சி தின்ற குரங்கு போல.
- (போலப் பஞ்சரிக்கிறான்.)
இஞ்சியில் பாய்ந்தால் என்ன? மஞ்சளில் பாய்ந்தால் என்ன? 3155
இஞ்சி லாபம் மஞ்சளிலே.
இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட.
இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.
- (நக்கின-உண்ட.)
இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம்.
இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா? 3160
இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது.
இட்ட குடி கெடுமா?
இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது.
இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா?
இட்டத்தில் ஒன்றும் குறையாது. 3165
- (குறைவில்லை.)
இட்டத்தின் மேலே ஏறாசைப்பட்டால் கிடைக்குமோ?
- (ஏறாசைப் படுகிறதா?)
இட்டது எல்லாம் கொள்ளும் பட்டி மகள் கப்பரை.
இட்டது எல்லாம் பயிர் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா?
இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை.
இட்டம் அற்ற முனியன், அட்டமத்துச் சனியன். 3170
இட்டலிக் குப்பன்.
இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
இட்டவள் இடா விட்டால் வெட்டுப் பகை.
- (இட்டவள்-உணவு படைத்தவள்.)
இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?
இட்ட வீட்டுக்குப் பிட்டு இட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண் இட்டுக் கொண்டு திரிகிறான். 3175
இட்டார்க்கு இட்ட படி.
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்.
இட்டாருக்கு இட்ட பலன்.
- (ஏரி அடித்தார்க்குக் கோடி பலன், ஏறி அடித்தார்க்கு.)
இட்டார்க்கு இட்ட பலன்; ஆண்டிக்கு அமைந்த பலன்.
இட்டாருக்கு இடலும், செத்தாருக்கு அழுதலும். 3180
இட்டாருக்கு இட வேணும்; செத்தாருக்கு அழ வேணும்.
இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது.
இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது.
இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை.
- (உலகினில் இல்லை, யாரும் இல்லை.)
இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை. 3185
இட்டுப் பிறந்தால் எங்கும் உண்டு.
இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு.
இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் அடுக்கவும் தெரியும்.
இடக்கண், வலக்கண்.
இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே. 3190
இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது.
இடக்குக் குடை பிடிக்கலாமா?
இடது கைக்கு வலது கை துணை; வலது கைக்கு இடது கை துணை.
இடது கை பிட்டத்துக்கு எளிது.
இடது கை வலது கை தெரியவில்லை. 3195
இடம் அகப்படாத தோஷம்; மெத்தப் பதிவிரதை,
- (அதனால்தான் அவள் மெத்தப் பதிவிரதை.)
இடம் இராத இடத்தில் அகமுடையானைப் பெற்றவள் வந்தாளாம்; போதாக் குறைக்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம்.
இடம் கண்டால் மடத்தைப் பிடிக்கலாம்.
இடம் கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான்.
இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம். 3200
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இடம் பட வீடு இடேல்.
- (ஆத்தி சூடி)
இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணல் ஆகாது.
இட மாட்டாதவன் எச்சில் என்றானாம்.
இட வசதி இல்லாத பதிவிரதை. 3205
இடறின காலிலே இடறுகிறது.
இடன் அறிந்து ஏவல் செய்.
இடாதவனுக்கு இட்டுக் காட்டு.
இடான், தொடான், மனுஷர்மேல் செத்த பிராணன்.
இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப் போகிறேன். 3210
இடி இடித்தாலும் படபடப்பு ஆகாது.
இடி ஓசை கேட்ட பாம்பு போல.
- (நாகம் போல.)
இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு குடிப்பான்.
இடிக்கிற வானம் பெய்யாது.
இடிக்குக் குடை பிடிக்கலாமா? 3215
இடி கொம்புக்காரன் கோழிக் குஞ்சின் சத்தத்திற்கு அஞ்சுவானா?
இடி கொம்பும் விட்டுப் பிடி கொம்பும் விட்டது போல.
இடி சோறு தின்கிறான்.
இடித்த புளி போல் இருக்கிறான்.
இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று வந்தவளுக்கு இரண்டு. 3220
இடித்த வானம் பெய்யாது.
இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடி சோறு அன்பாய்ப் போடுவது போதும்.
இடிந்து கிடந்த அம்பலம் போல.
இடியேறு கேட்ட நாகம் போல.
- (இடியேறுண்ட.)
இடி விழுந்த ஊரில் குடி இருந்தாலும் இடை விழுந்த ஊரில் குடியிருக்கல் ஆகாது. 3225
இடி விழுந்த மரம்போல ஏங்குதல்.
இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் குடி சாமம்.
இடுகிற தெய்வம் எங்கும் இடும்.
இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப் பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
- (இடுகிறவள், தன்னவள்.)
இடுப்பில் இரண்டு காசு இருந்தால் சருக்கென்று இரண்டு வார்த்தை வரும். 3230
இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும்.
இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கதி.
- (கைலாசம்.)
இடுப்புக்கு மேலே அந்தரங்கம் இல்லை.
இடுப்புச் சுருங்குவது பெண்களுக்கு அழகு.
இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான். 3235
இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே.
இடும்பு செய்வாருக்கு இராப்பகல் நித்திரை இல்லை.
- (இராப் பகல் இல்லை.)
இடும்பும் கரம்பும் அழியும்.
இடும்பைக்கு ஈன்ற தாய் போல.
இடுவது பிச்சை; ஏறுவது மோட்சம். 3240
- (பெறுவது.)
இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார்.
இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு.
இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா?
- (கெடுவார் கெடுப்பதா? கெடுக்காதே.)
இடுவான் இடுவான் என்று ஏக்கற்று இருந்தாளாம்; நாலு நாழி கொடுத்து நாலாசை தீர்த்தாளாம்.
இடை ஆண்டியும் இல்லை; குயத் தாதனும் இல்லை. 3245
இடைக் கணக்கன் செத்தான்; இனிப் பிழைப்பான் நாட்டான்.
இடைக் கிழவி எப்போது சாவாளோ? இடம் எப்போது ஒழியுமோ?
இடைக் கோழி இராத் தங்குமா?
இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம்.
- (மருத்துவம் பார்த்தது போல.)
இடைச்சி ஆத்தாள் தோளிக்கு. 3250
இடைச்சிக்கு எட்டுத் தாலி; பறைச்சிக்குப் பத்துத் தாலி.
இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான்.
இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி.
இடை சாய்ந்த குடம் கவிழும்.
இடைத் தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறான். 3255
இடைப் பிறப்பும் கடைப் பிறப்பும் ஆகா.
இடைப் புத்தி பிடரியிலே.
- (இடையன்.)
இடையன் எப்போது சாவானோ, கம்பளி எப்போது மிஞ்சுமோ?
இடையன் எறிந்த மரம் போல.
இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல. 3260
இடையன் கல்யாணம் பொழுது விடிந்து போச்சு.
- (விடிய விடிய.)
இடையன் கல்யாணம் விடியும் பொழுது.
இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி.
இடையன் செய்வது மடையன் செய்யான்.
இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக்கொண்டு தேடினாற் போல். 3265
இடையன் பெருத்தாலும் இடையன் கிடை நாய் பெருக்காது.
இடையன் பேரிலே சந்நதம் வந்தது போல்.
- (சாத்தான் வந்த கதை போல.)
இடையன் பொறுத்தாலும் இடையன் நாய் பொறாதது போல.
- (இடைக்குடி பொறாதது போல.)
இடையன் வந்ததும் படுக்க வேண்டியதுதான்.
இடையன் வெட்டின கொம்பு போல. 3270
இடையன் வெட்டு அறா வெட்டு.
இடையனில் ஆண்டி இல்லை; குசவனில் தாதன் இல்லை.
- (ஆண்டி - சிவனடியான், தாதன் - திருமால் அடியான்.)
இடையனுக்குப் பிடரியிலே புத்தி.
இடையனும் பள்ளியும் இறைத்த புலம் பாழ்.
- (சாவி.)
இடையாலும் கடையாலும் சங்கம் அழிவதாக. 3275
- (இடை-இடைக்காடர்; கடை-வள்ளுவர்)
இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய்.
இண்டம் பிடித்தவன்.
இணக்கம் அறிந்து இணங்க வேண்டும்.
இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது?
இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி. 3280
இணங்கினால் தித்திப்பு; பிணங்கினால் கசப்பு.
இணை பிரியா அன்றில் போல.
- (பிரிந்த.)
இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகாது?
- (ஆகும்?)
இத்தனை பெரியவர் கைப்பிடித்து இழுத்தால் மாட்டேன் என்று எப்படிச் சொல்வது?
இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கு ஒரு தாய் இல்லை. 3285
இத்தனையும் செய்து கத்தரி நட்டவன் இல்லையென்று சொன்னான்.
இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே.
இது எமன் ஆச்சே!
இது எல்லாம் பொம்மலாட்டம்.
இது என் குலாசாரம்; இது என் வயிற்று ஆகாரம். 3290
இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பணமா?
- (பட்டணமா?)
இது சொத்தை; அது புழுத்தது.
இது சொத்தை; அது புளியங்காய் போல.
இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை.
இது பெரிய இடத்துப் பேச்சு. 3295
இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி.
- (பரிகாரி-வைத்தியன்.)
இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.
இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம்.
இந்த அமாவாசைக்கும் வெட்கம் இல்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கம் இல்லை.
இந்த உலக வாழ்வு சதமா? 3300
இந்த ஊருக்கு எமனாக வந்தான்.
இந்த எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?
இந்தக் கண்ணிற் புகுந்து அந்தக் கண்ணிற் புறப்படுகிறான்.
இந்தக் கருப்பிற் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைக் பிடுங்குமா?
- (கருப்பு-பஞ்சம்.)
இந்தக் குண்டுக்குத் தப்பினாலே மக்கமே கதி. 3305
இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?
- (இத்தனை திருநாமம்.)
இந்தக் கூழுக்கோ பதினெட்டுத் திருநாமமும் நடுவிலே ஒரு திருச்சூர்ணமும்.
இந்தக் கைப் புழுதி தேவலையா? இந்தக் கைச் சாம்பல் தேவலையா?
இந்தச் சளுக்கனுக்கு இரண்டு பெண்சாதி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு.
இந்தச் சிற்றுண்டி எனக்குத் தெவிட்டிப் போயிற்று. 3310
இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?
இந்தப் பூராயத்தில் குறைச்சல் இல்லை.
இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?
இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்னப் பிள்ளை இல்லை.
- (அப்பா என்று கூப்பிட.)
இந்தப் பெருமையையும் பந்தல் அழகையும் பார்த்தாயா பண்ணைக்காரா? 3315
இந்தப் பையனுக்கு இந்த வீட்டு ஓதம் உறைத்து விட்டது.
இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்.
இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர்.
இந்த வளைவு சிக்கினால் எப்படித்தான் பிள்ளை பிழைக்கும்?
இந்த வீட்டிலே வைத்தது மாயமாய் இருக்கிறது. 3320
இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தேன்; பக்கத்து வீட்டுக் கருவாட்டு நாற்றம் போச்சு.
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே.
இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசாவைக் கையாலே மறைப்பாள்.
- (மறைப்பான்.)
இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போல.
இந்திராதி தேவர்க்கும் வந்திடும் தீவினை. 3325
இந்திரைக்கு மூத்தவள் மூதேவி.
- (இந்திரை-திருமகள்.)
இப்படிப் பார்த்தால் ஸ்த்ரீ ஹத்தி; அப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி.
இப்போது இல்லையெனின் எப்போதும் இல்லை.
இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான்.
- (இம்பூரல்-தூதுவளை போன்ற ஒரு செடி, இருமலுக்கு ஏற்றது.)
இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியருள் மூவர் களிறு. 3330
- (இம்மி நுண் பொருள்.)
இம்முனு போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம்.
இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும்.
இமயம் முதல் குமரி வரையில்.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது. 3335
இயற்கை அழகே லேசான ஆபரணம்.
இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ?
- (சேர்க்கை.)
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
- (இறக்கப் போனாலும், பரக்கப் போக வேண்டும்.)
இரக்கம் இல்லாதவன் நெஞ்சு இரும்பினும் கொடிது,
- (நெஞ்சு இரும்பு.)
இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும். 3340
இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல.
இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது.
- (குட்டியானான்.)
இரண்டு ஆட்டில் ஓராடு விழிக்கிறது போல்.
இரண்டு ஆட்டிலே ஒட்டின குட்டி.
- (ஊட்டின.)
இரண்டு எழுத்து மந்திரம், பச்சிலையால் தந்திரம். 3345
இரன்டு ஏற்றம் இறைக்க எங்கள் அப்பனுக்குத் தெரியாது; இருட்டினால் எப்போதும் இரண்டு பணம் கேட்கிறான்.
இரண்டு ஓடத்தில் கால் வைக்கிறதா?
- (கால் வைத்தவனைப் போல.)
இரண்டு கண்ணும் பொட்டை; பெயர் புண்டரீகாக்ஷன்.
இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு.
- (இரண்டு கையையும் அடித்தால்தான் சத்தம்.)
இரண்டு கை போதாது. 3350
இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.
இரண்டு சாஸ்திரிகள், இரண்டு ஜோசியர்கள், இரண்டு புலவர்கள், இரண்டு தாசிகள், இரண்டு வைத்தியர்கள், இரண்டு நாய்கள், இரண்டு கடிகாரங்கள், சேர்ந்து போக மாட்டார்கள்.
இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?
- (ஓடத்தில்.)
இரண்டு நாய்க்கு ஓர் எலும்பு போட்டாற் போலே.
- (போட்ட எலும்பு மாதிரி.)
இரண்டு பட்ட ஊரிலே குரங்கும் குடி இராது. 3355
இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு.
இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்.
இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்?
இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி?
- (கொண்டை என்ன கொண்டை?)
இரண்டும் இரண்டு அகப்பை; இரண்டும் கழன்ற அகப்பை. 3360
இரண்டும் கெட்டான் பேர்வழி.
இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி.
இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான்.
- (கெண்டை ஏறிக் கொட்டானாம். கெண்டை-கெண்டைக்கால்.)
இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல.
இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை. 3365
இரந்து உண்டவன் இருந்து உண்ணான்.
இரந்து குடித்தாலும் இருந்து குடி.
இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
இரந்தும் பருந்துக்கு இடு.
- (கொடு.)
இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன். 3370
இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா?
இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை.
- (என்றும்.)
இரப்பவனுக்குப் பஞ்சம் என்றைக்கும் இல்லை.
இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா?
- (வெண் சோறு.)
இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. 3375
இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?
இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து.
- (யாழ்ப்பாண வழக்கு.)
இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை, நான் கொடுக்கமாட்டேன்.
இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக முடையானும் ஆபத்துக்கு உதவா.
இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம். 3380
- (யாழ்ப்பாண வழக்கு.)
இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா?
இரவல் சதமா? திருடன் உறவா?
இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
- (இடுப்புச் சீலையை.)
இரவல் சோறு தஞ்சம் தாங்காது.
- (தாங்குமா.)
இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை. 3385
இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார்.
இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான்.
- (கொடிய சுகமாம், யாழ்ப்பாண வழக்கு.)
இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு.
இரவிமுன் பணி போல.
இரவியைக் கண்ட இருள் போல. 3390
இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை.
இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே.
- (அரவு-ராகு காலம்.)
இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும்.
இரவு உண்ணான் பருத்திருப்பான்.
- (அருத்தா பத்தி.)
இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு. 3395
இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா?
இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல்.
இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை.
- (இராக் கண்ட சனி.)
இராச் செத்தால் பகல் பிழைக்கிறான்.
- (சூரியன்.)
இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை. 3400
இராப்பகல் கண்ணிலே.
இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா?
- (அக விலையைக் குறைத்த கதை.)
இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.
இராப் பட்டினி கிடந்தவனுக்குப் பாதித் தோசை போதாதா?
இராப் பட்டினி, பகல் கொட்டாவி. 3405
இராப் பட்டினி பாயோடே.
இராப் பிறந்த குழவி பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும்.
இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது.
- (பகல் பிறந்த பெண்ணும்.)
இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான்.
இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்றானாம். 3410
இராவணன் என்றால் படையும் நடுங்கும்.
இரிசிக்குப் புருஷன் ஆசை உண்டா?
- (இரிசி-பேடி,)
இரிசியார் உடைமை இராத் தங்கப் போகாது.
இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டாற் போல்,
- (படுக்கப் பாய் கேட்பான்.)
இருக்க இருக்க எல்லாம் இசைவாகும். 3415
இருக்கச் சாண் இடம் இல்லாமல் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை.
இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு.
இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்.
இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல.
இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம். 3420
இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும்.
இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு.
இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்.
இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாத போது காவிக் கும்பம்.
இருக்கிற வரையில் இருள் மூடிச் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம். 3425
இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வயாய்ச் சிரைப்பான்.
- (ஒழுங்காய், சரியாய், இருந்தால் தானே.)
இருக்கிறவன் நல்லவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
- (நம்மவன் ஆனால்.)
இருக்கிறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு அநேக வீடு.
- (எங்கும் வீடு.)
இருக்கிறவனுக்கு ஒன்று; இல்லாதவனுக்குப் பத்து.
இருக்கும் இடம் ஏவுமா? 3430
இருக்கும் போதே இரக்கப் போவானேன்?
இருக்கும் வளையில் எலியையும் கொல்ல முடியாது.
இருசி உடைமை இராந் தங்கல் ஆகாது.
இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.
இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி. 3435
இருட்டில் சிவப்பாய் இருந்தால் என்ன; கறுப்பாய் இருந்தால் என்ன?
இருட்டில் போனால் திருட்டுக் கை நில்லாது.
- (இருட்டுள்ளே போனாலும் திருட்டுக் கை போகாது.)
இருட்டிலே குருட்டு ஆண்டி.
இருட்டு அறையில் மங்கு கறந்து எய்த்தாற் போல.
இருட்டு உள், சுருட்டுப் பாய், முரட்டுப் பெண்டாட்டி. 3440
இருட்டுக்கு எல்லாம் சரி.
இருட்டுக் குடிவாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இருட்டு வீட்டில் குருட்டு ஆனை.
இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம்.
இருட்டு வீட்டில் நுழைந்தாலும் திருட்டுக் கை சும்மா இராது. 3445
- (போனாலும், திருட்டுக் கை போகாது.)
இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல;
இருட்டு வீட்டிலே குருட்டுக் கொக்குப் பிடித்தாற் போல.
இருட்டு வேலையோ? குருட்டு வேலையோ?
இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல்,
இருத்தினவன் தோளில்தான் அழுத்துவார்கள். 3450
இருதயத்தில் நினைத்தது எல்லாம் எழுதிக் கட்டு.
இருதயத்து எழுந்த புண் போல.
இருதலைக் கொள்ளி எறும்பு போல்.
- (ஆனேன்.)
இருதலைக் கொள்ளியில் எறும்பு பிழையாது.
இருதலை மணியன் பாம்பைப் போல். 3455
இருதலை வழக்கு நூலினும் செம்மை.
இரு தோணியில் கால் வைக்காதே.
இருந்த இடத்து வேலை என்றால் எங்கள் வீட்டுக்காரரையும் கூப்பிடுங்கள்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
இருந்த இடத்து வேலைக்காரன் எங்கள் வீட்டு ஆண் பிள்ளையாம்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
இருந்த இடம் ஏழு முழம் ஆழம் வெந்து போகும். 3460
இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று.
இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி.
இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப் பறையனுக்குத் தாரை வார்த்தது போல.
- (வீடூர்ப் பறைவனுக்கு.)
இருந்தல்லவோ படுக்க வேணும்?
இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. 3465
இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.
- (நெடுந்தூரம் போவான்.)
இருந்தவன் தலையிலே இடி விழுந்தாற் போல.
இருந்தவனுக்குப் போனவன் குணம்.
இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்.
இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன். 3470
- (சப்பன்.)
இருந்தால் இடுவது; இல்லையேல் விடுவது.
- (இடுவது உரம்.)
இருந்தால் ஓணம்; இல்லா விட்டால் ஏகாதசி.
இருந்தால் இருப்பீர்; எழுந்தால் நிற்பீர்.
இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன்.
இருந்தால் துவாதசி; இல்லா விட்டால் ஏகாதசி. 3475
இருந்தால் நவாப் சாயபு; இல்லா விட்டால் பக்கிரி சாயபு.
- (நவாப் ஷா; பக்கிரி ஷா.):
இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி.
இருந்து அடித்தேன்; பறந்து போயிற்று.
இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப்பட்டாளாம்.
இருந்து இருந்து ஒரு பிள்ளை பெற்றாள், மலமும் ஜலமும் இல்லாமல். 3480
- (வலமும், ஜலமும்.)
இருந்து இருந்து ஒரு பெண்ணைக் கொண்டான்; மலஜலம் எல்லாம் வீட்டுக்குள்ளே.
இருந்து இருந்து பார், இடி விழுவான் காரியத்தை.
இருந்து கொடுத்தால் நடந்து வாங்கு.
- (வாங்க வேணும்.)
இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது.
- (கடன் கொடுத்து.)
இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான். 3485
- (கெடுத்தான் பாவி, கெடுத்தான் முருகப்பன்.)
இரு நாய்க்கு இட்ட எலும்பு போல.
இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்த வாயன் ஆவானேன்?
இருப்பது பொய்; போவது மெய்.
இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே.
இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை. 3490
இரும்புக்கட்டியைக் காற்று அடித்தபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.
இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுப்பதா?
இரும்பு கோணினால் ஆனையை வெல்லலாம்; கரும்பு கோணினால் சுட்டியும் பாகும் ஆகும்.
இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடிப்பதா?
இரும்பு செம்பு ஆனால் திரும்பிப் பொன் ஆகும். 3495
இரும்பு செம்பு ஆனால் துரும்பு தூண் ஆகும்.
இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?
இரும்புத் தூணை எறும்பு அரித்தாற்போல்.
இரும்புத் தூணைச் செல் அரிக்குமா?
இரும்புப் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? 3500
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
- (துரும்பு பிடித்தவன் கையும் கரும்பு பிடித்தவன் கையும்.)
இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும்.
இரும்பு முளைத்தாலும் கரும்பு முளைக்காது.
இரும்பை எலி கவ்விற்று என்கிறான், படுக்காளி.
- (எலி தின்றது என்கிறான் இடக்கன்.)
இரும்பை எலி தின்னுமா? 3505
இரும்பை எறும்பு அரிக்குமா?
இரும்பைக் கறையான் அரித்தால் குழந்தையைப் பருந்து கொண்டு போகாதா?
- (பிள்ளையை.)
இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ?
இரு மனசு மங்கையோடு இணங்குவது அவம்.
- (அவலம்.)
இருமும்போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது. 3510
இருவர் ஒத்தால் ஒருவருக்கும் பயம் இல்லை.
- (இருவரும்.)
இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.
இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்?
இருவிரல் தோலும் அவற்றின்மேல் மயிரும் எனக்கு இல்லையே!
இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா? 3515
- (எலிக்குஞ்சு.)
இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?
இருளன் ராஜவிழி விழிப்பானா?
இருளுட் ஒரு காலம்; நிலவும் ஒரு காலம்.
இரை விழுங்கின பாம்பு போல.
இல்லது வாராது; உள்ளது போகாது. 3520
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
இல்லறம் நல்லறம்.
இல்லறம் பெரிது; துறவறம் சிறிது.
- (துறவறம் பழிப்பு.)
இல்லாத சொல் அல்லல்படும்.
இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்? 3525
இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.
இல்லாதவன் கோபம் பொல்லாதது.
இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி.
- (மைத்துனி, யாழ்ப்பாண வழக்கு.)
இல்லாதவன் பொல்லாதவன்.
இல்லாதவன் வீட்டில் இருபத்தேழு குழந்தைகள். 3530
இல்லாதவனுக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை.
இல்லாதவனோ, பொல்லாதவனோ?
இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம்.
இல்லாது சொல்லி அல்லற்படுதல்.
இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது. 3535
இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன்.
இல்லார் இருமையும் நல்லது எய்தான்.
இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?
இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை.
இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா. 3540
- (தெலுங்கு, வீட்டை மெழுகிவிட்டால் பண்டிகை வந்துவிடுமா என்பது பொருள்.)
இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது?
இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.
- (இல்லை என்ற இடத்தில்.)
இல்லையா இலை மறைவு, காய் மறைவு?
இல்லையே ஒன்றுக்கும் உதவாத ஒன்று.
- (பழமொழி நானூறு.)
இல்லோர் இரப்பது இயல்பு. 3545
இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள்.
இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.
இலக்கணம் புலவர்க்கு அணிகலன்.
இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை.
இலங்கையைச் சுட்ட குரங்கு. 3550
இலந்தைப் பழப் புழுப் போலத் துடிக்கிறது.
இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு.
இலவு காத்த கிளி போல.
இலுப்பைச் சர்க்கரைக் கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம்.
இலுப்பைப் பூப்போல். 3555
இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டு புறமும் பொத்தல்.
இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு.
இலைக்கும் உண்டு, மட்டையும் பழுப்பும்.
- (பட்டையும்.)
இலை சாய்கிற பக்கம் குலை சாயும்.
- (இலை-வாழைஇலை.)
இலை தின்னி காய் அறியான். 3560
- (இலை-வாழை இலை.)
இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது.
இலைப் புரை கிளைத்தல்.
- (சீவக சிந்தாமணி.)
இலைமறை காய் போல்.
இலை மறைவு, காய் மறைவு.
இலை மறைவு, தலை மறைவு. 3565
இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.
இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது.
இவருக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல் ஆகிறது.
இவன் ஊராருக்குப் பிள்ளை.
இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுவான். 3570
இவன் புத்தி உலக்கைக் கொழுந்து,
- (குந்தாணி வேர்.)
இவன் மகா பெரிய கள்ளன்; காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்ப்பது அரிது.
இவன் வாழ்ந்த வாழ்வு மறுகிலேன் மல்லாக்கினேன்.
இவனுக்கும் அவனுக்கும் ஏழு பொருத்தம்.
இழந்த சொத்துப் பெரிய சொத்து. 3575
இழப்பாரை ஜயிப்பார் இல்லை; எதிர்ப்பாரை ஜயிப்பார் உண்டு.
இழவுக்கு வந்தவர்கள் எல்லாம் தாலி அறுப்பார்களா?
இழவுக்கு வந்தவளை உழவுக்கு அழைத்தானாம்.
இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.
இழவு சொன்னவன் மேலா பழி? 3580
- (பேரிலேயா?)
இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும்.
இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார்.
இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார்.
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
இழுத்தபடி எல்லாம் வரும் தங்கக் கம்பி. 3585
இழுத்துப் பிடித்து நின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும்.
இழுத்து மூட வேணும்.
இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு.
இழை ஊடாடா நட்புப் பொருள் ஊடாடக் கெடும். 3590
இழையத் தீட்டிக் குழைய வடித்தது போல.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்.
இளங் கன்று பயம் அறியாது.
- (இளமறி.)
இளஞ்சிங்கம் மதயானைக்கு அஞ்சுமா?
இளநீர்க் காய் உதிர்க்கிறது போல. 3595
இளமைச் சோசியம்; முதுமை வைத்தியம்.
இளமையில் கல்வி எப்போதும் நிற்கும்.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை.
- (மிடிமை.)
இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது. 3600
இளமையில் பழக்கம் சுடுகாடு மட்டில்.
இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம்.
இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்.
இளமையும் முதுமையும் சரியான வயசு அல்ல.
இளவெயில் காயாத நீயா தீப் பாயப் போகிறாய்? 3605
இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள்.
இளிச்ச வாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம்.
இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி; ஏறி அடித்தானாம் தவசிப் பிள்ளை.
- (இடக்கர்.)
இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு.
- (பழமொழி நானுாறு.)
இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு. 3610
இளைத்த நாயை ஏறி மிதிப்பது போல,
இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர்.
இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார்.
இளைத்தவரைச் செயிப்பார் உண்டோ?
இளைத்தவன் இரும்பு தின்ன வேண்டும். 3615
இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண்.
இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் கரும்பு.
இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் வாழை.
இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு விதைக்க வேண்டும்.
இளைத்தவன் எள்ளு விதைப்பான்; பருத்தவன் கரும்பு போடுவான். 3620
இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும்.
இளைத்தவன் சிநேகிதனைச் சேர்.
இளைத்தவன் தலையில் ஈரும் பேனும்.
இளைத்தவன் தலையில் சொட்டு.
- (கொட்டு.)
இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி. 3625
- (மைத்துனி.)
இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம்.
இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான்.
இளைத்து இனத்தாரிடம் போவானேன்?
இளைது என்று பாம்பு இகழ்வார் இல்.
- (பழமொழி நானூறு.)
இளையாள் இலை தின்னி; மூத்தாள் காய் அரிவாள். 3630
இளையாள் முகமோ, இழையாடிக் காற்றோ?
இளையாள் மோகம் கண்ணை மறைக்கிறது.
இளையாளே வாடி மலையாளம் போவோம்; மூத்தாளே வாடி முட்டிக் கொண்டு சாவோம்.
இளையாளைக் கிழவன் அரிக்கிறது போல.
இளையானே ஆயினும் மூத்தாளே ஆகும் மகன். 3635
- (பழமொழி நானூறு.)
இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.
இறகு இல்லாப் பறவைக்கு உட்கார ஒரு நாழிகை இல்லை.
இறகு முற்றிப் பறவை ஆனால் எல்லாம் தன் வயிற்றைத்தான் பார்க்கும்.
இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்; ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்.
இறங்கு துறையிலே நீச்சானால் ஏறு துறையிலே எப்படி? 3640
- (இறங்கும்போதே, ஏறு கரையில்.)
இறங்கு பொழுதிலே மருந்து குடி.
இறடுங்கால் இறடும்.
இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.
இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.
இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும். 3645
இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு.
இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும்.
இறந்து இறந்து பிறந்தாலும் இருவக்கரையானாய்ப் பிறக்க வேணும்.
இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி.
இறாக் கறியோ, புறாக் கறியோ? 3650
இறுகினால் களி; இளகினால் கூழ்.
இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.
இறைக்க, இறைக்கக் கிணறு சுரக்கும்.
- (ஊறும்.)
இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம். 3655
இறைக்கிற கிணறு சுரக்கும்.
இறைக்கிறவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும்.
இறைக்கும் கிணறு ஊறும்.
இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான்.
இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா? 3660
- (கழுத்தில் போட்டுக் கொள்ளலாமா? எலும்பைக் கோத்துக் கழுத்தில் அணியலாமா?)
இறைத்த கிணறு ஊறும்; இறையாத கிணறு நாறும்.
- (பாழ், ஊறுமா?)
இறைத்த கிணறு சுரக்கும்.
இறைத்தோறும் ஊறும் கிணறு.
- (பழமொழி நானுாறு.)
இறையாத கிணறு பாழும் கிணறு.
இறைவனை ஏற்று; அரசனைப் போற்று. 3665
இன்சொல் இடர்ப்படுவது இல்லை.
இன்சொல்லால் இடர் வராது.
இன்சொல்லே ஏற்றம் தரும்.
இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.
இன்ப துன்பம் இரண்டும் காவடிப் பானைகள் போல. 3670
இன்பம் உற்றிடில் துன்பம் இல்லை.
இன்பம் வருவதும் துன்பம் வருவதும் எடுத்த உடலுக்கு வரம்.
இன்பமும் துன்பமும் இணை விடா.
இன்பமும் துன்பமும் இதயத்தே ஆம்.
இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு. 3675
இன்பமும் துன்பமும் பொறுமையிலே.
இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு.
இன்று அற்று இன்று போகிறதா?
இன்று இருப்பவர் நாளைக்கு இல்லை.
இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி. 3680
இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும்.
இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.
இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா?
இன்றைக்கு ஆளுவார் நாடு; நாளைக்குக் கையில் ஆளுவார் ஓடு.
இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை. 3685
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான்.
- (அறுக்க மாட்டானா?)
இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது.
இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்,
இன்றைக்குச் சிரிப்பு; நாளைக்கு அழுகை,
இன்றைக்குச் சின்னதுக்கு வந்தால் நாளைக்குப் பெரியதுக்கு வரும். 3690 தமிழ்ப்பழமொழிகள் 159
இன்றைக்கு செத்தால் நாளைக்கு இரண்டு நாள் இன்னம் இருக்கிறது தேருக்குள் சிங்காரம் (இன்னும்) இன்னம் இன்னம் இசைச்சொல் அனேகம் இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல இன்னமும் பேயோடேனும் பிரிவு. 3695 (பழமொழி நானூறு)
இன்றும் கிடக்குது ரியோ ரியோ இனக்கூட்டு ஆனாலும் நிலக்கூட்டு ஆகாது இனத்தால் இனம் ஆகும்;பணத்தால் ஜனம் ஆகும் இனத்தை இனம் சேரும் இனத்தை இனம் தழுவும். 3700
இனம் இனத்தோடு சேரும்;பணம் பணத்தோடு சேரும் இனம் இனத்தோடே;வெள்ளாடு தன்னோடே இனம் கெட்ட ஏகாதசிக்கு என்ன பலகாரம்? இனம் பிரிந்த மான் போல 3705
இனாம் வந்த மாட்டை நிலவில் கட்டி ஓட்டு என்றானாம் இனிமேல் எமலோகம் பரியந்தம் சாதிக்கலாம் இனிமேல் ஒரு தெய்வத்தை கை எடுக்கிறதா? இஷ்கா இஷ்பாவாக இருக்கிறான் இஷ்டம் அற்ற முனியன் அஷ்டமத்து சனியன் 3710
இஷ்ராவினால் தெரிந்து கொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான். (இஷ்ரா-சமிக்கனை)