தமிழ்ப் பழமொழிகள் 2/கோ
கோகுலாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும் என்ன சம்பந்தம்?
கோட்டாறு சேவியர் கேட்டவரம் தருவார். 9900
கோட்டானை மடியிற் கட்டிக் கொண்டது போல.
- (கட்டிக் கொண்டு சகுனம் பார்த்தது போல.)
கோட்டி என்றால் கோபம் சண்டாளம்.
கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.
கோட்டைக்குள் எலியை வைத்துக் கட்டியது போல.
கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா? 9905
கோட்டைக்குள்ளே படை வெட்டிக் கொள்கிறதா?
கோட்டையில் குண்டு போடுவான், கோயிலில் குண்டு போடுவானா?
கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?
- (போட்ட சுழி:போட்ட புள்ளி.)
கோடாலிக் காம்பினால் குலத்திற்குக் கேடு வரும்.
கோடாலிக் காம்பு குடித்தனத்துக்கு ஆகாது. 9910
- (குலத்துக்கு ஈனம்.)
கோடாலிக்காரனுக்குப் பிளவை புறப்பட்டது போல.
கோடானுகோடி வினை வரினும் மனம் கோணாமல் இருப்பதே கோடி பெறும்.
கோடி ஒரு வெள்ளை, குமரி ஒரு பிள்ளை.
கோடிக்கும் வேதைக்கும் காதம்; வேதைக்கும் கள்ளிக்கும் காதம்; கள்ளிக்கும் பூண்டிக்கும் காதம்; பூண்டிக்கும் நாகைக்கும் காதம்; நாகைக்கும் காரைக்கும் காதம்.
- (கோடி. கோடிக்கரை வேதை. வேதாரண்யம், கள்ளி.கள்ளி மேடு, பூண்டி-திருப்பூண்டி. இப்படியே காசிவரைக்கும் உண்டு என்பர்.)
கோடி கப்பல் நஷ்டம் கொட்டை நூற்றா விடியும்? 9915
- (கப்பல் ஓடிய வீடு.)
கோடி கொடுத்தாலும் குழந்தை கிடைக்குமா?
கோடி கொடுத்தாலும் கோபுரம் தாழாது.
கோடிச் சீமான் துணிய வேண்டும்; அல்லது கோவணாண்டி துணிய வேண்டும்.
கோடிச் சீமானும் கோவணாண்டியும் சரியா?
கோடித் துக்கம் குழந்தை முகத்தில் மறையும். 9920
- (மறையும்)
கோடி தனம் இருந்தாலும் குணமில்லா மங்கையை மணம் முடித்தல் ஆகாது.
- (மங்கையுடன் கூடாதே.)
கோடி நேசம் கேடு படுத்தும்.
கோடிப் புடைவையைக் கட்டிக் கொண்ட தைரியத்தில் குச்சைக் கொளுத்திக் கொண்டாளாம்.
- (குடிசையை.)
கோடி போனாலும் ஐயோ! கோவணம் போனாலும் ஐயோ!
கோடி முண்டர் ஏறி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு வருமா? 9925
கோடி வித்தையும் கூழுக்குத்தான்.
கோடீசுவரன் ஆக வேண்டுமா? லட்சாதிபதி ஆக வேண்டுமா?
கோடீசுவரனைக் கெடுக்க ஒரு கோவணாண்டி போதும்.
கோடு அடுத்தவன் ஏடு எடுப்பான்.
- (எடுத்தவன். கோடு-Court போனவன்.)
கோடு ஏறினார் மேடு எறினார். 9930
- (கோடு-Court.)
கோடு கண்டாயோ? ஒடு கண்டாயோ?
- (ஷ)
கோடை இடி இடித்துக் கொட்டும் மழைபோல.
கோடை இடி இடித்துப் பெய்யும்; மாரி மின்னிப் பெய்யும்.
கோடை இடி குமுறி இடித்தாற் போல.
கோடை இடித்துப் பெய்யும்; மாரி மின்னிப் பெய்யும். 9935
கோடை இடி விழுந்தாற் போல்.
கோடையால் காய்கிற பயிர் வாடையால் தளிர்க்கும்.
- (கோடையில் பயிர்; வாடையில் பயிர்.)
கோடையிலே தண்ணீர் ஓடை கண்டமான் போல்.
கோணக் கோணக் கோவிந்தா!
கோணல் கொம்பு ஏறி என்ன? குதிரை மீது ஏறி என்ன? வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம். 9940
கோணல் வாயன் கொட்டாவி விட்டாற்போல. கோணா மாணாப் பெண்டாட்டி மாணிக்கம் போலப் பிள்ளை பெற்றாள்.
கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமல் காணி கொடுப்பது மேல்.
- (நல்லது.)
கோணி கொண்டது; எருது சுமந்தது.
கோத்திர ஈனன் சாத்திரம் பார்ப்பான். 9945
கோத்திரத்திலே குரங்கு ஆனாலும் கொள்.
- (கோத்திரத்திலே கிடைத்தால்.)
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
கோப்பாயில் நாய் குட்டிச் சுவரில் ஏறியது போல.
- (கோப்பாய்-இலங்கையில் ஓர் ஊர்.)
கோப்புத் தப்பினால் குப்பையும் பயிராகாது.
கோபத்தில் அறுத்த மூக்குச் சந்தோஷத்தில் வருமா? 9950
கோபம் ஆறினால் குரோதம் ஆறும்.
கோபம் இல்லாத துரைக்குச் சம்பளம் இல்லாத சேவகன்.
கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும்.
கோபம் இல்லாத புருஷனும் புருஷன் அல்ல; கொதித்து வராத சோறும் சோறு அல்ல.
கோபம் இல்லாத ராசாவும், சம்பளம் இல்லாத மந்திரியும். 9955
கோபம் இல்லாதவனைக் குரு காப்பார்.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
- (இருக்கும்.)
கோபம் உள்ள இடத்தில்தான் சந்தோஷம் இருக்கும்.
கோபம் எல்லாம் கொடுமைக்கு லட்சணம்.
கோபம் குடிகெடுக்கும். 9960
- (எடுக்கும்.)
கோபம் சண்டாளம்.
- (கோபம் பாபம் சண்டாளம்.)
கோபம் பாபம்; நித்திரை சத்துரு.
கோபம் பெரும் பாவம்.
கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் சந்தோஷம் வந்தால் எழுந்திருக்கலாமா?
கோபமும் தாபமும் கூடிக் கெடுக்கும். 9965
கோபமும் நெருப்பும் உடனே கெடு.
கோபிக்காத புருஷன் புருஷன் அல்ல; கொதிக்காத சோறு சோறு அல்ல.
கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.
கோபுரத்தில் ஏறிப் பொன்தகடு திருடு என்ற கதை.
கோபுரத்தில் ஏறி விழுந்தவனுக்கு எங்கே கண்டு இழை இடுகிறது? 9970
கோபுரத்தில் கட்டிய கொடி போல.
கோபுரத்தில் விளக்கை வைத்துக் கொட்டுக் கூடையால் மூடுவானேன்.
- (பொட்டுக் கூடையால்.)
கோபுரத்தின் மேல் ஏறிக் கும்பத்தைக் கழற்றுகிறவன் அகத்திக் கீரைக் கொல்லையைப் பார்த்துக் கொள்ளை கொள்ளை என்றானாம்.
கோபுரத்தின்மேல் குரங்கு உட்கார்ந்தாற் போல.
கோபுரத்தைப் பொம்மையா தாங்குகிறது? 9975
கோபுர தரிசனம் பாபவிமோசனம்
கோபுரம் ஏறிக் குதித்தாற் போல.
கோபுரம் தாங்கிபோல நடக்கிறான்.
கோபுரம் தாங்கிய பூதம் போல் சுமக்கிறான்.
கோபுரம் தாங்கிய பொம்மை போல். 9980
கோபுரம் தாண்டுகிற குரங்குக்குக் குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?
கோபுரமும் எட்டும்; குபேரனுக்கும் கை சளைக்கும்.
கோபுர ഖஸ்து.
கோபுர விளக்கைக் கூடையால் மூடுவானேன்?
கோம்பை நாயைப் போல் கோபிக்காதே. 9985
கோமாளி இல்லாத கூத்துச் சிறக்குமா?
கோமாளிக் கூத்து.
கோமுக வியாக்கிரம் போல.
- (வியாக்கிரம் - புலி)
கோமுட்டி சாட்சி.
கோமுட்டிப் பிசாசு பிடித்தால் விடாது. 9990
கோமுட்டிப் பிள்ளை வீணுக்கா நெய்ப்பல்லாயைப் போட்டு உடைக்கும்?
கோமுட்டி புத்திக்கு மோசம் இல்லை.
கோமுட்டி புத்திக்கு மோசம் லேது; மோசம் வந்தால் செப்ப லேது.
- (லேது - இல்லை; தெலுங்கு.)
கோமுட்டியைச் சாட்சிக்குக் கூப்பிட்டது போல.
கோமுட்டி வீட்டுப் பெருச்சாளிக்குக் கொண்டதென்ன? கொடுத்ததென்ன? 9995
- (கொண்டது கொடுத்தது தெரியாது.)
கோயில் அருகே குடி இருந்தும் கெட்டேன்.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி.
- (திருவாரூரில்.)
கோயில் சாந்து ஒன்பது குளிக்கு மாறாது.
(சீரங்கத்தில்.).
கோயில் பூனைக்குப் பயம் ஏது? 10000
கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.
கோயிலையும் குளத்தையும் அடுத்திருக்க வேண்டும்.
கோர்ட்டுக்கு முன்னால் போகாதே; கழுதைக்குப் பின்னால் போகாதே.
கோரக்கல் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா?
கோரைக் கொல்லை பிடித்தவனும் மலடி ஸ்திரீயை மணந்தவனும் பயன் அடைய மாட்டார்கள். 10005
கோரை குடியைக் கெடுக்கும்.
கோரை முடி குடியைக் கெடுக்கும்.
கோல் ஆடக் குரங்கு ஆடும்; அதுபோல மனம் ஆடும்.
கோல் இழந்த குருடன் போல.
கோல் உயரக் கோன் உயர்வான். 10010
கோல் எடுக்கக் குரங்கு ஆடும்.
- (கோல் ஆட.)
கோல் எடுத்த பிள்ளை குருட்டுப் பிள்ளை.
- (கொடுத்த பிள்ளை. பிள்ளை தன் கண்ணைத் தானே குத்திக்கொள்ளும்.)
கோல் பிடித்த பிள்ளை குரங்கு.
கோல் பிடித்தவன் கோமான்: தண்டம் பிடித்தவன் தண்டல்காரன்.
கோலச் சமத்தி, கோலச் சமத்தி என்றாளாம்: அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம். 10015
கோவணத்தில் இடி விழுந்தது என்றாளாம்.
கோவணத்தில் ஒரு பணம் இருந்தால் கோழி கூப்பிடும் வேளையில் ஒரு பாட்டு வரும்:
- (ஒரு காசு கோழி கூப்பிடும் போதே.)
கோவணத்தில் முக்கால் துட்டு இருந்தால் கோழி கூப்பிடப்பாட்டு வரும்.
- (காசு இருந்தால்.)
கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரம் இல்லை.
கோவணத்தை அவிழ்த்து மேற்கட்டுக் கட்டுகிறது. 10020
கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
கோவணம் பீயைத் தாங்குமா?
கோவணாண்டிக்குக் குடித்தனம் பெருத்ததுபோல.
- (யாழ்ப்பாண வழக்கு.)
கோவணாண்டி துணிவிலும் கோடிச் சீமான் துணிவா.
- (துணிவு)
கோவிந்தா என்றால் கோடி ஸ்நானம் என்று குளிக்காமல் முழுகாமல் இருக்கலாமா? 10025
கோவில் ஆனை கல் ஆனை.
கோவில் இடிக்கத் துணித்தவனா குளம் வெட்டப் போகிறான்?
- (குளம் கட்ட)
கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்.
கோவில் கட்டி அல்லவா விளக்குப் போடவேண்டும்?
கோவில் கட்டிக் குச்சு நாயைக் காவல்; மாடி வீட்டைக் கட்டி மரநாயைக் காவல். 10030
கோவில் கல்லைப் பிடுங்கப் போகிறான்.
கோவில் காளை போலத் திரிகிறான்.
கோவில் குளம் போகாத கோபி சாஸ்திரி; கன்னி குளம் போகாத கன்யா சாஸ்திரி.
கோவில் கொள்ளைக்காரன் குருக்களுக்குத் தட்சினை கொடுப்பானா?
கோவில் சோற்றுக்குக் குமட்டின தேவடியாள் காடிச் சோற்றுக்குக் கரணம் போடுகின்றாள். 10035
கோவில் தாசிக்குச் சதிர் ஆடக் கற்றுக் கொடுத்தது போல.
கோவில்பட்டியை விட்ட குதிரை கோபால சமுத்திரம் போனவுடன் துள்ளிக் குதித்ததாம்.
கோவில் பூனைக்குப் பயம் ஏன்?
கோவில் பூனை தேவர்க்கு அஞ்சாது.
கோவில் மணி போனால் நம்பியானுக்கு என்ன? 10040
கோவில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.
கோவில் மணியம் என்று பேர் இருந்தால் போதும்.
கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
கோவில் மதில்மேலே தேள் கொட்டிற்றாம்; குருக்களகத்து ஞானாம்பாளுக்கு நெறி கட்டிற்றாம்.
கோவில் விளக்குக் கோடி புண்ணியம். 10045
கோவில் விளங்கக் குடி விளங்கும்.
கோவிலில் கொட்டு முழக்கு; கடையில் பாக்கு வெற்றிலை.
கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டும்.
கோவிலிலே பூஜித்துக் குளத்திலே கை அலம்பிக் கோபுர வாசலிலே உறங்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே.
கோவிலுக்கும் முட்டும்; குபேரனுக்கும் கை சளைக்கும். 10050
கோவிலை அடைத்துக் கொள்ளை அடிப்பவனா குருக்களுக்குத் தட்சிணை கொடுப்பான்?
கோவிலைக் கட்டி நாயைக் காவல் வைத்தாற் போல.
கோவிலை நம்பிக் குயவன் பிழைக்கிறது போல.
கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொட்டைப் பார்த்துக் கும்பிடுகிறதா?
கோவிலையும் குளத்தையும் அடுத்து இருக்க வேண்டும். 10055
கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.
கோவூரான் அவிசாரி போகக் குன்றத்தூரான் தண்டம் கொடுக்க.
- (ஊர்மேல் போக.)
கோவூருக்கு வழி எது என்றால் கன்று என்னுடையது என்றானாம்.
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?
- (அடிக்க.)
கோழி அடை வைக்குமுன்னே குஞ்சுகளை எண்ணலாமா? 10060
கோழி ஓட்டத் தெரியாதவன் கொக்கு வாரியா?
கோழி ஒட்டினாலும் கும்பினிக்கு ஒட்டு.
- (கும்பினி-East India Company.)
கோழிக் கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும் கீரைத் தண்டாணம் அடாசப்பா; கீரைத் தண்டாணம் அடாசு.
- (அடா.)
கோழிக் கறி கொடுத்துக் குயில் கறி வாங்கினாற் போல.
கோழிக் காய்ச்சல், வேசைக் காய்ச்சல். 10065
கோழிக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் விடா.
கோழிக்குக் கொண்டை அழகு; குருவிக்கு மூக்கு அழகு.
கோழிக் குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.
கோழி களவு போனால் ஆடு வெட்டிப் பலி இடுகிறதா?
- (பொங்கல் இடுகிறதா?)
கோழி கவிழ்க்கும் போதே கூடக் கவிழ்த்து கொள்ளுகிறாயே. 10070
கோழி கறுப்பு ஆனால் அதன் முட்டையும் கறுப்பா?
கோழி குஞ்சிலும், அவரைக்காய் பிஞ்சிலும்.
கோழி குஞ்சுக்குப் பால் கொடுக்குமா?
கோழி குருடு ஆனாலும் சாறு மணக்காது போகுமா?
கோழி கூப்பிட்டு விடிகிறதா? நாய் குரைத்து விடிகிறதா? 10075
- (விடியுமா?)
கோழி கூவாவிட்டால் விடியாதா?
கோழி கூவிப் பொழுது புலர்ந்தது.
- (பொழுது விடியுமா?)
கோழி கூவுகிறதற்கு நாழிகை தெரிகிறது போல.
கோழி கொடுத்துக் குரலும் அழுகிறதா?
- (அழிகிறது.)
கோழி கொடுத்துக் குரலும் பறிகொடுத்தது போல. 10080
கோழி கொரிப்பது போல் சாப்பிடுகின்றான்.
கோழி கொழுத்தால் முட்டை இடாது.
கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பது போல.
கோழித் திருடியும் கூடி அழுகிறாள்.
கோழி தட்டிக் கூவுமா? 10085
கோழி திருடிக் கூடக் குலாவுகிறான்.
கோழி திருடிய கள்ளனும் கூட நின்று குலாவுகிறான்.
கோழி திருடியவன் தலையில் கொண்டை மயிர்.
கோழி தின்ற கள்ளனும் கூட நின்று குலாவுகிறான்.
கோழி போனது அல்லாமல் குரலும் போயிற்று. 10090
கோழி மிதித்துக் குஞ்சு சாவது இல்லை.
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
- (குஞ்சுக்குக் கேடு ஆகுமா?)
கோழி முட்டைக்குச் சுருக்கு வைத்து, வாத்து முட்டைக்கு வரிச்சல் போடுவான்.
கோழி முட்டைக்குத் தலையும் இல்லை; கோவில் ஆண்டிக்கு முறையும் இல்லை.
கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குகிறான். 10095
கோழி முடத்துக்குக் கடாவெட்டிக் காவு கொடுக்கிறதா?
- (கடா வெட்டிப் பலி இட்டது போல.)
கோழி மேய்த்தாலும் கும்பினியான் கோழி மேய்க்க வேணும்.
- (கோறன்மேத்திலே. Government.)
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைத்தான் சீக்கும்
- (கிளறும்.)
கோழியும் கொடுத்துக் குலையும் இழந்தாளாம்.
(கூக்குரலும் படுகிறதா?)
கோழியும் யாருடையதோ? புழுங்கலும் யாருடையதோ? 10100
- (யாழ்ப்பாண வழக்கு.)
கோழியை அடிப்பதற்குக் குறுந்தடி ஏன்?
கோழியைக் கேட்டா ஆணம் காய்ச்சுகிறது?
கோழியைக் கேட்டுத்தான் மிளகாய் அரைப்பார்களா?
கோழியைப் பருந்து அடிக்கும்; பருந்தைப் பைரி அடிக்கும்.
- (பைரி-ராஜாளி.)
கோழியையும் கொடுத்துக் குரலையும் இழந்தாளாம். 10105
கோழியை வளர்க்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்; கழுத்தை அறுக்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்.
கோழை நாய்க்குப் பட்டது அரிது.
கோழையில் மொய்த்துக் குழம்பும் ஈயைப் போல்.
கோழையும் ஏழையும் கூடின காரியம் பாழிலே பாழ்.
கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என்று நினை. 10110
கோள் சொல்லிக் குடும்பத்தைக் கெடுத்தாலும் குடிவரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே.
கோள் சொல்லிக் குண்டுணி.
- (குண்டுப் பெருமாள்.)
கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோளாற்றக் கொள்ளாக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்.
கோளாறு இல்லாத செட்டி கோவணத்தை அவிழ்ப்பானா? 10115
கோளுக்கு முந்தேன்; கூழுக்குப் பிந்தேன்.
- (உணவுக்கு)
கோளும் குறளையும் குலத்துக்கு ஈனம்.
கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்?
கோனான் கோல் எடுக்க நூறு ஆடும் ஆறு ஆடு ஆயின.
கோஷ்டியூர் காணாதவர் குரங்காய்ப் பிறப்பார். 10120
கெளசிகத்துக்கு ஒளியில் எவர்க்கும் ஒளியும்.
- (ஒளிரும்)
கெளபீனத்துக்கு இச்சைப்பட்ட சாமியார் கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டாராம்.
கெளபீன ஸ்ம்ரகூடிணார்த்தம் அயம் படாடோப:
கெளவை உடையார் காலைத் தொடு.
கெளவை கருதேல். 10125
கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
கெளவைப் பட்டால் காயத்தில் ஒருமுழம் நீளுமா?
கெளவையது இல்லான் திவ்விய சொல்வான்.
கெளளி ஊருக்கெல்லாம் பலன் சொல்லும்; தான் மாத்திரம் கழுநீர்ப் பானையில் விழும்.
ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை, ஙாய்பிறந்தது பொன்மலை.
ஙப்போல் வளை. 10180
- (ஆத்திகுடி.)