தான்பிரீன் தொடரும் பயணம்/சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திரத்தின் சுடரை ஏற்றி
வருவதற்காக கனத்த
இருளில் அவன் சென்றான்
திரும்பி வருவேன்
எனக்காகக் காத்திருங்கள் என்றான்

எங்கே சென்றான்?
சோகத்தில் கறுத்த
பனைக் கோடுகளுள்-
தத்தளிக்கும் கருநீலக்
கடல் வெளியினூடே-
எத்தனைத் தடைகளை
அவன் தகர்த்திருப்பான்?
கடுமையான, முனைகளில்
எப்படிப் போரிட்டான்?

தெரியவில்லை

தெரிவதெல்லாம்
சுதந்திரத்தை மீட்டு வருவதற்காகத்
தந்த உறுதிமொழிகள்...
காத்திருக்கச் சொன்ன நம்பிக்கைகள்...

அவனுக்காக சில காலம்
காத்திருப்பேன்
பிறகு, அவனும் வரவில்லையெனில்
நானே போவேன்
நானும் சிரும்பவிட்டால்
எனது பையன்களும் போவார்கள்.

...களில் கங்கோபாத்யாய,
எழுதிய வங்காளக் கவிதையைத் தழுவியது.