தாய்மொழி காப்போம்/வெறி வேண்டும்
23. வெறி வேண்டும்
எடுப்பு
வெறி கொள்ள வேண்டும்நீ தோழா-நீ
விளையாட்டுப் பொம்மையா? விளங்காத பிள்ளையா?
(வெறி)
தொடுப்பு
நெறிகண்ட குறளொன்று கண்டாய்- அந்த
நீள்புகழ்த் தாய்த்தமிழ்க் கோரிடர் என்றால்
(வெறி)
முடிப்பு
நற்றமிழ்க் குற்றது கேடு - நீ
நானுளன் என்றதை வேரொடு சாடு
பற்றுளங் கொண்டுனை நாடு - வளர்
பைந்தமிழ் மைந்தனென் றுன்புகழ் பாடு
(வெறி)
ஒற்றுமை என்றுரை கூறும் - அவன்
ஓதுதல் நம்பிடின் உன்முது கேறும்
கற்சிறை காட்டினும் மீறு- பல
கற்றவர் சொன்மொழி கேட்டுளந் தேறு
(வெறி)
வந்த மொழிக்குயர் வாழ்வு - நின்
வண்டமிழ் வாழ்வுக்கு வந்தது தாழ்வு
வெந்தது சோறெனத்தின்று - பாரில்
வீழ்வதும் தாழ்வதும் நின்தொழி லன்று
(வெறி)
(வெறி)