தாவோ - ஆண் பெண் அன்புறவு/ஆண்- பெண்


ஆண்- பெண்
36. உலகன்னையின் அருகில்

இனிமை பொருண்மையானதில்லை பொருண்மையும் இனிமை இல்லை. உடலோம்பல் மண் மணத்தைத் தாங்கியுள்ளது.

பேரன்னையின் ஆற்றலின் அருகிலே இரு நாம் வேறு எங்கே திரும்பிச் செல்கிறோம்? நாம் அவளது தானியங்களைாகவும், இனிய பழங்களுமாகவும் இருக்கிறோம் அவள் மண்ணில் வேறுன்றித்தான் நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு வளர்கிறோம் அவளிடமிருந்துதான் நாம் செழுமையுற்று அவளது மெய்யறிவு என்பதால் அறுவடை ஆகிறோம்

ஆணும் பெண்ணும் வாழும் நிலம் அவளது ஆற்றலால் நாம் ஒருவருக்கொருவர் காண்கிறோம் அவளைத் தொடுகிறோம். அவளது அமிழ்தத்தைப் பருகுகிறோம் அவளது எளிய செல்வக் குவியலால் சீரும் சிறப்பும் பெறுகிறோம்.

37. சரிசமமான முழுமை

ஆண் மட்டும் அல்லது பெண் மட்டும் என்பதில்லை ஒருவரின் இயற்கை மற்றவரின் தேவையை உருவாக்குகிறது

நிகழ்ச்சிகள் உள்ள வழியை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு வியப்பானது! அவை இருப்பது போல எவ்வளவு அறிவாளியாயிருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அன்பாதரவு மிக்கராக இருக்க வேண்டும்? ஆண், பெண் போல வீறியமாகவா? இப்போது இருப்பது போல சரிசமமான பெரிதாகவா?

38. ஒருவருக்கொருவரின் நிறைவு

ஆண்மையில் தனித்து ஆண் முழுமையானவனல்லன். பெண்மையில் தனித்த பெண்ணும் முழுமையானவள் அல்லள்.

ஒருவர் மற்றவரைத் தேடுவதில் ஆவலான இருவரின் போராட்டம்

ஆதலால் ஒருவருக்கொருவரின் நிறைவுக்காகத் தான் ஆணும், பெண்ணும்

39. அறியாதல்

அறிந்த அவன் அறியாததைத் தேடுபவன் அவளோ, அறிந்திராதவள், அறிந்திராததைக் கொண்டவள்

கண்டிராத, பெண்ணின் இருட்டுத்தான் ஆணை அறிந்ததற்கப்பால் அறிந்திராததை நோக்கி மயக்கும் முதற்தொடக்கம்.

அறிவுள்ளபோது, அறியாததால்"இயற்கை நெறி"யைக் காண முடியும்

40. பிரிக்கப் படாத முழுமை

பெயர் இருப்பதால், பிரிக்கப்படுகிறது ஒருவர் மற்றவரைப் பின் பற்றுவதால், பிரிந்த பின் அங்கே முழுமைதான்.

ஆதலால், முழுமை தொடர்ந்திருக்க, பெயரிட்டுப் பிரி பெண்ணைப் பெண்ணெனப் பெயரிட்டு, அவளை ஆணிடமிருந்து பிரி. ஆணை ஆண் எனக் கூப்பிட்டுப் பெண்ணிடமிருந்து பிரித்து விடு. பெயரிடல், பிரித்தல் இவற்றுக்கு அப்பால், முழுமையையும் பிரிக்கப்படாத அமைதியையும் காண்

41. துயர்க்கேடு

ஒருவருக்கொருவர் தேடிக் கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் எவ்விதம் அமைதியாய் இருக்கக் கூடும்? இது போன்ற ஒரு கொள்கைப் பிடிப்பும். ஒவ்வொரு பார்வையும் தேடுகிறது. அனைத்து உலகமே ஒரே தேவையை நோக்கித் திருப்பி விடப்படுகிறது வயிற்றுக் கீழே பசி, நெஞ்சம் வெறுமையாக,
தனியாக எதிரொலிக்கிறது ஒவ்வொன்றும் நிகழக் கூடியதாகிறது. இது போல போராட்டமும் வினைமுறை (சடங்கு) திருப்பங்கள்! இம் மாதிரி மடமையான துயாக்கேடு

42. எளிமையும் உயர்வும்

ஆண், பெண் இருவருக்கும் இடையே உள்ள பற்றுக்கு ஏதும் தேவையில்லை என்பதை நல்லதையே வேண்டுபவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எளிமை, பெரியதாக உள்ளவை மறையும் அளவிற்குப புலப்படாதவை பல

43. மறைவான மையம்

மிகுதியான் மறைவு போதுமானதன்று உறுதியற்றமை என்பது உரத்தத் தன்மையை மறைக்கிறது பரபரப்பு எச்சரிக்கையை இடிந்து விடுகிறது குழப்பத்தைச் சொற்கள் மறைக்கின்றன அச்சத்தை உறுதியின்மை மூடி மறைக்கிறது சிக்கலானது எளிமையைப் புலப்பட வைக்காது எளிமை புரிய வைக்காது

மட்டுமீறியதும் போதுமானதன்றும் இவற்றிற்கிடையே உள்ள மையம் தான் நாம் உள்ள இடம் ஏனெனில் ஒருவருக்கொருவர் கண்டு கொண்ட ஆணும், உலகில் சமநிலை கொள்ள பெண்ணும் ஒருவர் மற்றவரின் மறைவான மையத்தைப் புரிந்து கொள்கிறார்கள்

44. உள்ளபடியே

பெருஞ்செலவு செய்தல், பேருடைமை, நாகரிகமா யிருத்தல், ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தல் இவை எல்லாம் ஆண், பெண் இருவருக்கும் சேர்ந்து என்ன தொடர்பு? இவை எளியனவற்றைத் தடை செய்யும், எளிமையைத் தடுக்கும், இயற்கை நெறியைப் புலப்படச் செய்யாத சுமைகள்தாம்

மிகவும் குறைந்தது போலவே மிகுதி என்பதும் இடர்ப்பாடானது அதிகமிருந்தால், சிக்கனத்தைக் கடைபிடி, எளிமையைப் பெருமைப்படுத்து ஆணும் பெண்ணும் அம்மணமாய்க் கூடுகின்றனர் உள்ள படியே அவர்கள் வெளிப்படுவதுதான் பெரிய மேன்மையாகும்

45. வெறுமையைத் தழுவல்

எது இல்லையோ, அது வெறுமை. எது உள்ளதோ, அது வெறுமையில் தழுவப்படுகிறது. எப்போதும் ஆணுக்கப்பால், உலகின் வெறுமையான பெண் இருக்கிறாள். எப்போதும் ஆண் வெறுமையில் வைக்கப் படுகிறான் அவன் விருப்பப்படி செய்யட்டும், எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் பேரன்னையின் தழுவலில் இருந்து விடுபட முடியாது

46. அவளின் அணைப்பில்

வட்ட வடிவமாயும், ஏராளமாயும் அவள் இருப்பின் வளைவு, வாக்குறுதியின் ஆழம், உணவூட்ட வளர்ச்சி அவள் நிலத்தாய், அறிவுத்தாய், கொடுப்பவள், ஊட்டி வளர்ப்பவள். நிறைவு அளிப்பவள்.

கடினமான, அரிதாயுள்ள அவன் பலத்தின் எழுச்சி தேட அடையும் போராட்டத்தின் உரு. அவன் மலை போன்ற மாந்தன், அறிவு செயல்பட்டு, அசைந்து, எடுத்துக் கொண்டும், உருவாக்குவதும் அவனே

நிலத்தில் இருந்து மலை கிளைத்தல் போல, பெண்ணிலிருந்து ஆண் தோன்றுகிறான். எல்லாமே பேரன்னையிடமிருந்து வருகின்றன. இதில்தான் ஆண் குழந்தை போல அவளின் மடியில் அவளது அணைப்பில் தீவிரமாக விளையாடுகிறான்

47. ஒருவர்க்கொருவர் இணைப்பு

கருத்து என்ற காற்றினில் மிதந்து எண்ணம் என்ற மெல்லிய காற்றில் கரைந்து விடு. அப்போது தசை
யுடன் தொடர்புபட்ட உடலும் தசையும் மண்ணிலிருந்து எங்கிருந்து வருகிறது?.

நிலத்தைத் தொடு அதன் மணத்தை முகர் அதனின் மணத்தைச் சுவை ஆணும் பெண்ணும் நிலத்துடன் ஒருவருக்கொருவர் இணைந்துள்ளனர்.

48. சொற்களின் வேரும் தண்டும்

சுற்றியுள்ள காற்றில் மரம் உருவாகிறது. வானம் அதைச்சுற்றி வளைக்கிறது. அதன் வேர்கள் பிடிப்புள்ள மண்ணில் இறங்குகிறது நிலம் அவற்றை உணவூட்டி வளர்க்கிறது இந்த இணைப்பில் அசைவு இருக்கிறது இதில்தான் அடிப்படை ஆண் பெண் இருவரின் தழுவலும் உள்ளது.

அவர்களது கூட்டுறவு சொற்களால் இல்லை ஏனெனில் அவர்கள் அசைவும் அமைதியும், கொடுப்பதும் வாங்குவதும், வெளிப்புறமும் உள்புறமும் வன்மையும் மென்மையும், பிடித்துக் கொள்ளலும் விட்டுக் கொடுப்பதும் இவற்றின் உடனடியினால் பற்றிக் கொள்வதில்லை

சொற்களின் வேர்களும் தண்டும், மண்ணின் முழுமையும் காற்றின் வெறுமையும் இவற்றிற்கிடையே மேலும் கீழும் தேடுகின்றன. எண்ணங்கள் உதித்து சொற்களாக வெளி வருகின்றன, அது சமயம் பேரன்னையின் அமைதியான தழுவலில் அறிவு உள்ளது.

49. பொதுவானளாக இல்லாதவள்

ஆண் என்ற மாந்தன் தசை பேரன்னையின் முழுமையில் வெறுமையில் சிறியது பெண் என்ற தசை வெறுமையைக் கொண்டுள்ளது. இது பேரன்னையின் முழுமையான வெறுமையையும் தன்னிடம் வளைத்துக் கொள்ளத் திறக்கிறது

போராடும் ஆண் தான் பேரன்னையை மாற்றி நிரப்ப முயலுகிறான். தன் பிடிப்புள்ள பெண்தான் பேரன்னையைத் தழுவ முயலுகிறாள்

இதனால்தான் பொது மாந்தனுக்கு நளிமாகவும், உள்ளீட்டை இழக்கவும், தழுவவும் கடினமானது இதுதான் பொதுவானவனாக இல்லாதவன் ஒரு மாந்தனை விட உயர்ந்தவனாகிறான்.

50. வேலை பயில்பவன்

வேலை கற்றுக் கொள்பவன் மரத்தை வெட்ட அது துண்டு துண்டாகச் சிதறுகிறது கை தேர்ந்த சிற்பி மென்மையாகத் தொட மரம் அவனுக்கிசைய நல்ல முறையில் கலை உயிர் பெறுகிறது

ஆணும் பெண்ணும் கூட ஒருவருக்கொருவர் இணைந்து சேர்ந்து வாழும் வரை கற்றுக் குட்டி போல பயிற்சிக் கொள்ள வேண்டும்.

51. எளிதாக உணரப்படுகிறோம்

ஓர் ஆண் தன்னைத்தானே அறிந்து கொள்ளாத போது, ஒரு பெண் யாரை அறிய முடியும்? ஒரு பெண் தன்னைத் தானே கண்டு கொள்ளாத போது, ஓர் ஆண் யாரைக் காண முடியும்? உள்ளுக்குள்ளே இருப்பதை ஆராய்ந்து கண்டு பிடித்து வெளிப்படுத்து. நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் போது, நாம் மற்றவர்களால் எளிதாக உணரப்படுகிறோம்

52. அறிவனின் வழி

எச்சரிக்கையாயிருப்பதை வளர்த்து, அச்சம் என்பதை வென்றுவிடு கொடுப்பதையும், வாங்குவதையும் சமன் செய் படுவிரைவைப் பொறுமையினால் பண்படுத்து எவருக்கும் கட்டளை இடாதே பணிவாயிரு. எவரையும் பின்பற்றாதே. ஆனால் எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள் தன்னை அறி, ஆனால் 'தான்’ என்பதையன்று உள்ளும், வெளியும் வெவ்வேறு, முழுமையான உட்புறம், முழு வெளிப்புறத்தைத் தேவைப் படுத்துகிறது செயல் மூலம் அறிவாகளின் எண்ணங்களைக் கண்டுபிடி
தொலைவுகள் அதிகமிருந்தும், போவதற்கு ஏதுமில்லை உலகின் வேறு எவ்வளவோ இடங்கள் இருந்தும், விடை இங்கேதான். போய்ச் சேர வேண்டிய இலக்குகளே இல்லை நாம் எங்கிருக்கிறோமோ, அங்கு தான் பயணம் அடைகிறது

53. ஒருவரில் இருவர்

ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் வெல்வது என்பது எவ்வளவு மடமை!. ஒருவராலோ மற்றவராலோ வழி நடத்தப்படாதே ஆனால் இருவரும் சேர்ந்து வழி நடததப்படட்டும் முதல் நிலையான அழைப்பைப் பின்பற்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் பணிவாக இருந்து இருவரும் இருக்கட்டும்

54. மீண்டும் முழுமை

ஆணின் பாதியும், பெண்ணின் பாதியும் ஒருவரின் பாதி மற்றவரின் பாதியினால் முழுமை பெற வேண்டியது உண்மையிலேயே உகந்தது. பாதிகள் இணைக்கப்படுகின்றன. முழுமை இல்லாதவை முழுமையடைகின்றன. ஒவ்வொரு வரும் இருவரிலும் இழந்து முழுமை அடைகின்றனர்.

55. ஒவ்வொருவரும் உயர்ந்தவரே

ஆண், பெண் என்ற எதிரிடையானவற்றின் கூட்டுறவை விட உயர்ந்தது எது? ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் முழுமை ஆக்குகின்றனர் ஒவ்வொருவரும் ஆண் அல்லது பெண் இவர்களை விடப் பெரியவராகத் தோன்றும் அளவில் ஒவ்வொரு வரும் தன்னை இழந்து விடுகின்றனர் உள்ளும், வெளியும் போய் விடுகின்றன தானும் தான் என்பதும் தீர்ந்து விடுகிறது இருவராக இருந்து கொண்டு இருவருமே ஒன்றாகிவிடுகின்றனர்

56. இடையில் செல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளதை நம்பு அது இருந்தால் போதும், ஆணை இடப்பட மாட்டாது. அழைத்தாலும் அது வராது

ஆசை தேவை, எண்ணம், எதுமின்றி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளதில் செல். அங்கு அமைதியாய் இருக்கும்போது, மென்மையாகத் திறந்து அடிப்படைத் தூண்டுதல் தேவையால் எடுத்துச் செல்

57. இயற்கைநெறி இருக்கையில்

சிறு துளித் தண்ணீர் விடப்பட்டு ஆறாக ஓடும போது, இயற்கைநெறி இருக்கிறது இளவேனில் மொட்டு விரியும் போதும், இலை உதிர்கால இலை விழும்போதும் இயற்கை இருக்கிறது

அணுக்கும் பெண்ணுக்கும் இடையே 'இயற்கை நெறி உள்ள போது, அதிகாலைச் செங்கதிர் தானே உதிப்பது போல இருக்கும்.

58. அமைதியாகச் சிரி

ஆணும் பெண்ணும் அமைதியான உள் புறத்தில் இருந்தவாறே ஒருவரை ஒருவர் தேடுவது என்பது எவ்வளவு மடமை! இதை எப்படி இடர்ப்பாடானதாகக் கொள்ள முடியும்? பார்வைகளும் குறுகுறுப் பேச்சுகளும், கேட்பதும், விரைவுறுதலும் தன்னைத் தனக்காக வணிகம் செய்வதே

இருவரும் ஒருவரில் மற்றவரைத் தெளிவாகக் காணும்போது பெரும் உதவிதான். அப்போது தேடுவது முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது

அமைதியான இடம், மற்றும் இறுதிப்படுக்கையிலிருந்து அமைதியாகச் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? இப்படி இடுக்கண்ணானது மடமையிலும், மடமை இடர்ப்பாட்டில் முடிகிறது.

59. தலைமை ஆற்றல் அடக்கப்படுகிறது

ஒவ்வொரு மாந்தனுள்ளும் எல்லா மாந்தர்களும், ஒவ்வொரு பெண்ணின் உள்ளேயும் எல்லாப் பெண்களும் உள்ளனர் ஓர் ஆண் தன்னைத் தானே
தனக்காக வெளிப்படுத்தும் போது அவன் எல்லா ஆண்களாகக் கண்டுகொண்டு முதல் ஆற்றலுக்கு அருகில் வருகிறான் ஒரு பெண் தன்னைத் தனக்காக வெளிக்கொணரும் போது அவள் எல்லாப் பெண்களுமாகக் கண்டு கொண்டு அடிப்படை ஆற்றலுக்கு அருகில் வருகிறாள்

எல்லா ஆண்களாக ஓர் ஆண் வெளிப்படுகிறான் எல்லாப் பெண்களாக ஒரு பெண் வெளிப்படுகிறாள் தனிச்சிறப்புடையவனாகிவிடு தனிச் சிறப்பில்லாததின் கீழே வழக்கமானது

எல்லா ஆண்களுமாக ஓர் ஆண். எல்லாப் பெண்களுமாக ஒரு பெண்ணைக் காண்கையில் முதலாற்றல் உயர்வடைகிறது ஆண் ஒரு பெண்ணை எல்லாமாகவும், ஒரு பெண் ஆணை எல்லாமாகவும் - அறிய, தலைமையாற்றல் அடக்கப்படுகிறது

60. ஆதி முதல் இருட்டு

கமுக்கமான கருமை, வெறுமை இவற்றை வைத்திருப்பவள்தான் பெண் வெளிச்சத்தை வேட்டை யாடும் அவள், ஆணின் முழுமையைப் பெற்றிருப்பவள் ஏனெனில் அந்த ஆண் அவளது வெறுமையை நிரப்பி கமுக்கத்தை வெளிப்படுத்துகிறான்

அவளது ஆதிமுதல் இருட்டில் ஆண் தேடுகின்ற ஆழமான மூலமும், கமுக்கமான அறிவும் உள்ளன அவளை வரவேற்பவளாயும், அவளது மெய்யறிவைத் தாங்குபவளாயும் அவள் இருக்கிறாள்

பெண்ணில், போராட்ட எண்ணங்களுக்கப்பால் உள்ளதை ஆண் காண்கிறான்

61. பெண்ணிடத்தில் ஆண் சிறப்பது

பெண் என்பவள் மென்மையான மலைகளின் தாராள மனமுடிடைய, வரவேற்கும் சமவெளி இங்கே உலகின் வன்மையிலிருந்து ஆண் தன்னைத் தோற்கடித்துக் கொள்ளத் தானே தன் இச்சைப்படி வருகிறான்

அவள் ஒரு கிளர்ச்சியுள்ள நம்பிக்கைச் செய்தி நிலம் முழுமையும், நிலாவும் கொண்ட ஒரு முழுமை இதில் வானுலகத்தின் அறிவாற்றல் கூட பேச்சற்றுப் போகிறது

அவள் ஆதிமுதல் இருப்பிடம் இங்கிருந்துதான் ஆண் உதிக்கிறான் பிறப்பும், வாழ்வும் அவனை வருத்துகிறது. ஆனால் ஆசையும் இறப்பும் அவனை மீண்டும் கவர்ந்து இழுக்கிறது.

பெண்ணிடம் ஆண் இறப்பது என்பது அவன் புத்துயிர் பெறுதல்

சிறிய, உயர்ந்த குருதி மரபினர்களின் இசைவான இயற்கையின் இணைப்பின் வலியுறுத்தல் அவள் அவளிடம்தான் ஆண் விடுதலைக்கும் இன்னலத் திற்கும் திரும்பத் திரும்ப வருகிறான்

62. இல்லை என்பது இருப்பதினும் உயர்ந்தது

எந்தப் பெண்ணும் பெண் மட்டுமல்லள் எந்த ஆணும் ஆண் மட்டுமல்லன் ஆணில் பெண்ணில்லாமலோ, பெண்ணில் ஆண் இல்லாமலோ, இருவருக்கும் இடையே அறிந்து கொள்வது என்பதில்லை

இருந்தும், பெண்ணிடம் இல்லாத ஆண் தன்மை தான் ஆணைப் பெண்ணின் மறைபுதிரில் சிக்க வைக்கிறது. அது போல ஆணிடம் இல்லாத பெண் - தன்மை பெண்ணை அவனது புதிர் மறையில் ஈர்த்து மயக்குகிறது இல்லை என்பது இருக்கிறது என்பது போலவே மிக உயர்ந்தது.

63. கருத்தார்ந்த புதிர்

ஆணும், பெண்ணும் தத்தம் ஆண், பெண் ஆற்றலுடன் இவ் உலகின் பெரு மூச்சில் சேர்ந்து இழுப்பது இடர்பாடானது

மையத்தில் பிடிப்புடன் இருந்து கொண்டு, அவர்கள் தங்கள் மூச்சுடன் நகர்ந்து உந்துதலுடன் வளைந்து செல்ல வேண்டும். இல்லையேல் அவர்கள் உடைந்து தங்கள் ஒற்றுமையை இழப்பர் அல்லது தங்கள் தனித்தன்மையை இழப்பர் இறுகிப் பிடித்துக் கொள்ளும்போது, அவர்கள் விட்டுப் பிடிக்க வேண்டும் விட்டுப் பிடிக்கும் போது இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும் இணைந்து இருக்கும் போது, தனித்திருக்க வேண்டும். தனியே இருக்கும் போது இணைந்து இருக்க வேண்டும்

இருமையாக இருப்பது, ஒருமையாக இருப்பது என்பது என்ன? மற்றவர், நான் என்பதென்ன? இழப்பதும், வைத்துக் கொள்வதும் என்ன? மிகுதி, குறைவு, வன்மை, மென்மை, பயன்பாடு, தொடக்கம் என்பதெல்லாம் என்ன? இது என்ன கருத்தார்ந்த புதிர்?

64. ஒவ்வோர் உடலும் மற்றொன்றின் உடல்

கண்களின் தொலைவான நிறைவளிக்கிற மற்ற புலன்களின் அனுமதியை வாக்குறுதி செய்வதில்லை அவை கண்ணில் காணப்படுவதை உறுதி அளிக்க வேண்டும். (கண் உடலின் பலகணி என்பதால் மனிதனின் எண்ணங்கள் கண்கள் மூலம் உணரலாம்)

உடல்கள் உரிமையாகும்போது, எல்லாப் புலனறிவுகளும் மற்ற உடல் மூலம் ஓர் உடலின் புலன்கள் ஈர்க்கப் படுகின்றன புதிது ஆனால் பழக்கப்பட்டது, தனியானது ஆனால் உரிமையானது ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டும் ஒரே வேறுபடாமையுந்தான்

ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மற்றவர் உடல் மூலம தன் உடலைக் காணும் போது இயற்கைநெறி உள்ளது

65. இயற்கை ஒன்றும் இல்லாதது

சொற்களின் வெளிப்புற அமைப்பு மூலம் சொற்களை அறிந்து கொள்வது போலவே, வெளிப் படையான எண்ணங்கள் வழியேதான் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள வேறொன்று தேவைப்படுகிறது இவ் வகையான எண்ணம் எங்கே இட்டுச் செல்லும்?

ஆண் பெண்ணின் மூலம் ஆணைப் புரிந்து கொள்கிறான் பெண்ணும் ஆண் மூலம் பெண்ணை அறிந்து கொள்கிறாள் ஆணையும் பெண்ணையும புரிந்து கொளள வேறு ஒன்று தேவைப்படுகிறது அந்த வேறு ஒன்று இன்னும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது அந்த மிகுதியான ஒன்று எல்லாவற்றிலும தேவைப் படுகிறது எல்லாவற்றையும் புரிந்து கொள்ள எதையும் அறியாதே
சொல்லப்படாத சொல், எண்ணப்படாத எண்ணம் இயற்கை, ஒன்றும் இல்லாத நிலையைப் போன்றது சொற்களால் இயற்கை நெறி இருப்பதாக எண்ணுகிறோம் ஆனால் அது சொல்லும் அன்று. எண்ணமும் அன்று

66. சொற்கள் இல்லாமல்

ஒன்றை மற்றதிலிருந்து, ஆணை பெண்ணிடமிருந்து சொற்கள் பிரித்திருக்கின்றன இது அறிவர்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கத் தெரிந்தது அதுவரை இப்படித்தான்.

சொற்கள் இல்லாமல், புரிந்து கொள்ளாமல் கூட காதலர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள்.

67. பரந்த ஒத்திசைவு

இந்தப் பரந்த திருக்குமறுக்கான நிலத்தில் எல்லாவற்றிலும் இருந்து எல்லாம் வருகின்ற நிலத்தில், பரந்த ஒற்றுமையைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. செங்கதிர் ஒளிர்கிறான் வானம் பொழிகின்றது சமவெளியிலருந்து மலைகள் தோன்றுகின்றன ஆறுகள், கடலை நோக்கி ஓடுகின்றன. நானிலம் சீர்மையான மூச்சுடன் வாழ்கிறது. அங்கே பிறப்பும், இறப்பும் என்ற தொடக்கம் உள்ளது

ஒத்திசைவு எங்கும் வழக்கமாக உள்ளதால் அது பொதுவாக இழக்கப்படுகிறது.

ஒவ்வொரு விளக்கமும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளது இது போல அறிவர் ஒரு குறிப்பிட்டதைக் கவனிக்கிறார். ஆனால் பொதுவழியில் நடத்தி செல்லப்படுகிறார் அழிவைப் பழிப்பைச் செய்யவும் தேவையில்லை அல்லது அளவுமீறியவற்றைப் புகழவும் தேவையில்லை ஆணும் பெண்ணும் கூட அளவு மீறிய அளவானவர்கள்தாம்

68. அமைதியான தீர்மானம்

தாங்களே பார்க்கவேண்டும் என்பதை அறிவதற்காக மற்றவர்களை ஊடுருவும் உறுதியற்ற கண்கள் உள்ளன

நாம் மட்டுமே அறியக் கூடிய பொருண்மைகள் உள்ளன நாம் ஒவ்வொருவரும் கமுக்கமான முன்காணிகள்

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அமைதியாக தீர்மானமாக உள்ளபோது, அவர்களது கண்டு பிடிப்பின் பிணைப்பு ஏற்பாடாக்கப்படுகிறது

69. விட்டு விட

ஒருவரை ஒருவர் சமன் செய்து செல்லும் போது ஆணும் பெண்ணுமாக செல்க.

சமநிலைப்பட ஆணை விட்டு விட்டுப் பெண்ணைக் காண்க, பெண்ணை விட்டு விட்டு ஆணைக் கண்டு கொள்க; ஒருவரை விட்டு மற்றவரைக் கண்டுபிடி மற்றவரை விட்டு விட்டு ஒவ்வொருவரையும் காண்க

பின், ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டு, இருவரையும் விட்டுவிட, இருவரையும் தெளிவாகக் காண்க இருவரையும் பிடித்துக் கொண்டு, ஒவ்வொருவரையும் விடும் போது, ஒவ்வொருவரையும் சரியாகக் காண்க.

70. ஆண் ஒளியை விரும்பியிருந்தால்

ஆண் ஒளியை விரும்பியிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு, பெண்ணுடன் படுத்து இருள் என்ற வாயிலை அடைந்திருக்கமாட்டான். எளிமையாக அறிவதை விரும்பிய எவரும் இருளுடனும் பெண்ணுடனும் சேரமாட்டார்.

ஒளியில் குருட்டுத்தன்மை இருப்பது போல, இருளில் அதிகம் பார்க்க முடியும் இருளில்தான் பார்ப்பதின் தொடக்கம் பெண்ணின் ஈரமான இருள்தான் ஒளியின் தொடக்கம் இதில்தான் முதன்மை தொடங்கி, அதிலேயே முடியும் திரும்புகிறது

ஒளியை, வெளிச்சத்தை மட்டும் விரும்புவர்கள் தொடக்கம், முடிவு வருவது, போவது மற்றும் எல்லாவற்றிலும் உள்ள ஏற்ற இறக்கங்களை அறியமாட்டார்

ஆண் பெண்ணிடம் வரும்போது அவன் ஒரு தனித்த இருளுக்கு வருகிறான்

71. வழக்கமான நலம்

மிகப்பெரிய மலைகள், நிலம் முழுவதையும் மூடுவதில்லை அருவிகள் எல்லாம் ஆறுகள் அல்ல பொதுநிலை கடந்தவையில் பல பொதுநிலையே.

ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் ஒத்திசைவில் வளர்கின்றனர் நாளும் கூட்டிசை, ஏந்தான அமைதி, வளரும் நிறைவேறப்பட்ட ஆசைகள் ஆகியவை

வழக்கமான நலம், ஒன்றாயிருத்தல் ஆகியவற்றிலிருந்து எளிமையாகப் பங்கு கொள்ளப் பொது இடத்திலிருந்து அமைதியாக வருகிறது

72. இளம் காதலர்களின் புதிர்

சில் என்று வீசும் காற்றுடன் உள்ள பைன் மரக்காட்டில் மூத்த அறிவர் என்ன சொல்வார்? மலைகளில் சற்றித் திரியும் அவர் காதலர்களின் இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவாரா?

அவரது மனம் மறுத்து, உடல் வேண்டும் எனும் போது அவர் என்ன செய்வார்?

முதுமைக் குருதி சற்றே சூட்டைத் தணிக்கிறது இது குறித்து கலந்துரையாட நேரமோ விரைவோ ஏற்பட்டதில்லை ஒருவேளை அறிவர் தம் அறிவிலேயே வாழ்நாள் கடத்தி விட்டார் போலும்

இளம் காதலர்களின் புதிர்களை எப்படி முதியவர்கள் தீர்க்க முடியும்?