தாவோ - ஆண் பெண் அன்புறவு/ஒன்றுதல்


ஒன்றுதல்
181. எல்லாமே காணப்படுகிறது

இருப்பதும், இல்லாதிருப்பதும் உளளது ஆண இருப்பது, தேடுவதில்லை பெண் இலலாமலிருப்பது, தேடுவது ஆகவே ஒன்றுவதில்தான் எல்லாமே காணப்படுகிறது

182. வினா இல்லாமலே

ஆண், பெண்ணையோ பெண் ஆணையோ ஏற்றுக் கொள்வதற்கு மாறாக, அவர்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதே சிறந்தது இவர்களிடையே ஆர்வவேட்கை எழும் போது தொடக்கம் இல்லை, வினாவோ விடையோ இல்லை. உறுதியில்லாமை இல்லை

புத்தகங்கள் கற்றுத் தரா சொற்கள் தவறான விடை தரும் எண்ணிப் பார், மிகவும் காலம் கடந்து விட்டுள்ளது கேட்டால் விடை இல்லை

எண்ணாமல்தான் தண்ணீர் தன் வழியைக காண்கிறது பருவ காலங்கள் எதையும் கவனியாது ஆண்டை நிரப்புகின்றன

நீரைப் போல, பருவ காலங்களைப் போல சேர்ந்திரு தேடாமலே காணலாம்

வினா இல்லாமல் விடை உள்ளது ஆம்

183. கணத்திற்குக் கணம்

முடிவைப போலவே தொடக்கத்திற்கும. கவனம் தேவை உடல்கள் கூடும் போது, பரபரப்படையாத போது பரபரக்காதே

ஒவ்வொரு கணமும் தொடக்கம், ஒவ்வொரு கணமும் முடிவு கணத்திற்குக் கணம் வேறு ஏதும் செய்யவோ. வேறு எங்கும் போகவோ, வேறு வகையாக இருக்கவோ வேறு ஒன்றும் இல்லை

184. தெரிந்து கொள்ள அணியமாக

ஆணாக, அறியாதவனாக புதியவனாக, அறிவதற்கு அணியமாகச் செல், அசைக.

பெண்ணாகத் தெரியாதவளாகத் தெரிந்து கொளள அணியமாக ஏற்றுக் கொள், அசைக

இது போல புதிது வெற்றி கொள்ளாமல் பழையது புதிப்பிக்கப்படும்

185. ஆதி முதல் கூத்து

தனிமையில் சேர்ந்திருக்கையில் கட்டுப்பாடு தேவை இல்லை சுவர்களும், திரைகளும், கதகதப்பும், தண்ணிலவும் காதலர்களை ஒருவருக்கொருவரிடம் இழுத்துக் கொள்ளச் செய்கின்றன

பேரியற்கையின் மாயவிச்சையில் தம் உயிர்ப்போடு ஆதிமுதல் கூத்தினை ஆடட்டுமே

186. பழமையான அடியிடு

இது வரை செய்யாததைச் செய்ய விரும்புவதை செய்து விடு. மென்மையாக, முழுமையாக, வெறுமை செய் ஒருவருக்கொருவரின் மாயங்களில் நுழை

எண்ணற்ற பலரும் வழக்கமல்லாத வழக்கத்தைக் கடைபிடித்து ஒன்று சேர்ந்துள்ளனர் நம் முன்னோர்கள் எல்லோருமே நம்மை இப்போதைக்கு முன்னேற்பாடு செய்து வந்திருக்கின்றனர்

இரு உடல்களுடன் பழமையான நடைமுறைகளுக்கு ஏற்றவாறு கூத்தாடு

187. உடலே அறியும்

ஆணின் முழுமையை ஒரு பெண் ஏற்றுக் கொள்ளும் போது, அவன் ஒரு மறைபுதிர் மாந்தனாக இல்லை பெண்ணின் வெறுமையை ஓர் ஆண் நிரப்பும் போது, அவளும் மறைபுதிரில்லை இருவரும் சேர்ந்து மற்றுமொரு மறைபுதிராய் உள்ளனர்

ஆணையும், பெண்ணையும் பிரிக்க முற்படு, ஒன்றுதல் அறியப்படாது.

ஒன்றுதல் என்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது நிழல்கள் போல, சொற்கள் எண்ணங்களைத் தொடர்கின்றன, எண்ணங்கள் மனத்தைப் பின் தொடர, மனம் உடலைப் பின் தொடர்கிறது உடல் மட்டும் உணர்ந்த கூடலை எப்படி அறியக் கூடும்?

சொற்கள் இல்லாத போது, இயற்கை அருகில் உள்ளது

188. உடல்கள் இயற்கைநெறியை அறியும்

கூடுதல் என்பது வெளியிலிருந்து உள்ளேயோ உள்ளிருந்து வெளியிலிருப்பதை ஏற்பதோ அன்று அது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நட்புறவுடன் ஒன்று சேரும் செயல்

உடல்கள் ‘இயற்கை'யைப் புரிந்து கொள்கின்றன அவை பிரிந்திருப்பதைச் சேர்க்கின்றன எதிரானவைகளைத் தீர்ககின்றன. ஒன்றாக உள்ள இரு உடல்களும் 'இயற்கை'

189. கூடலுக்கும் அப்பால்

ஆணின் பெருமை இப் புடவியை நிரப்புவதில் அதுவரை வன்மையை நோக்கி இருக்கும் இதுவே ஆணின் மாபெரும் மேன்மை அப்பேர்ப்பட்ட பெருந்தன்மை வாங்கிச் சுற்றிவைளத்துக் கொள்ளும் இடம் எவ்வளவு உயர்ந்தது!. இதுதான் பெண்ணின் பெருந்தன்மை, மனித முயற்சியில் உள்ளது

ஆணின் முயற்சிக்கும், பெண்ணின் ஏற்றுக்
கொள்வதற்கும் அப்பால் ஏதோ உள்ளது கூடலுக்கும் அப்பால் ஏதோ ஒன்று உள்ளது. புடவியை நிறைவு செய்வதற்கும் புடவியைச் சுற்றி வளைத்தற்கும் அப்பால் ஏதோ ஒன்றுள்ளது. சொற்கள் சொல்லாமல் சொல்லும்

எண்ணங்கட்கும் பிறப்புக்கும் முன்னால் இருந்தவை எனன? மனவேட்கை தன்னை அறிவதற்கு முன்னர் என்ன? முழுவெறுமையும வெற்று முழுமையும் என்ன?

வினாக்களும் நிகழ்வுகளும் ஏற்படுகையில் அவை எங்கே?

190. அவிழ்ப்பு வேறுபட்டது

குளிர் காலமும், கோடைக் காலமும் தம்மில் தாமே நட்புறவு கொள்கின்றன கிழக்கும், மேற்கும் ஒன்றோடு ஒன்றி வருகின்றன ஆண்டும் நிலமும தெளிவாக்கு வது ஆண், பெண்ணின் முழுமையம்

அவர்களது நான்கு கைகளை நான்கு பருவங்களாகவும், நானகு கால்களை நான்கு திசைகளாகவும் கொள் உறுப்புகளும் உடல்களும் ஒன்றாகச் சுற்றிக் கொள்கின்றன தழுவிக் கொள்கின்றன. கைவயமாக்கிக கொள்கின்றன இரண்டுகள் இரண்டுகளுடன் பிணைகின்றன. ஒன்றாகின்றன சிறப்புச் சிறப்பினை வளைக்கிறது. அவிழப்பு வேறுபட்டது. தனிப்பட்டது

191. வாழ்வின் அடித்தளத்தில்

ஒவ்வோர் உயிர் வாழ்வுப் பொருள்களின் அடித்தளத்திலும் எண்ணத்துக்கும், அறிவிற்கும் அப்பால் ஏதோ உள்ளது இதை ஒன்றுமிலலை எனலாம் இருந்தும் இது எழுச்சியிலிருந்தும், உந்துதலிலிருந்தும் உருவாகிப் பின்னர் வேட்கையாக பேருணர்சசியாக வருகிறது

முழுமையும், வெறுமையும் சேர்ந்து பெரும் விருப்பம் (காமம்) ஆண், பெண் இருவரையும் முழுமைக்கு வெறுமை செய்ய, இவர்கள் இவர்களுள்ளே ஆழத்தில் உள்ள ஏதோ ஒன்றுக்கு எழுப்பப்படுகிறார்கள்

192. அறிவர்கள் தேடுவதைக் காதலர் காண்பர்

காமத்தில், ஆணும் பெண்ணும் ‘தான்’ என்பதற் கப்பால் செல்கிறார்கள் எதிர்ப்புகள் தீர்கின்றன இப்போது ஆண், பெண் இல்லை எதிர்மறைகள் தீர்வு காண்கின்றன ஆண் பெண் என்று தனியாக ஒன்றுமில்லை ஒன்றும் இரண்டும ஒன்றுமே இலலை, அல்லது அதுவே எலலாமும் இயற்கை சொல்வது இதுதான்

முனிவர்கள் தேடுவதைக் காதலர்கள காண்கிறார்கள் உடலும் மனமும் மறைகின்றன

பங்கீடு பிரிவு இரண்டும் முடிகின்றன எல்லாம் உள்ளது என்கிற நிலை ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை முறியடிக்கிறது எல்லாம் உள்ளவர்கள், ஏனோ அவற்றைச் சிலருக்குத் தருவதில்லை

193. போதலும் வருதலும்

காற்றும், நெருப்பும் நீரிலிருந்தும், நிலத்திலி ருந்தும் ஏற்படுகின்றன வெளியில் உள்ள வெப்பம், உள்ளே இருககும் வெப்பததைத் தூண்டுகிறது

காதலர் ஒவவொருவரும் மற்றவரால ஏற்பட்டு இருவரில் மறைகின்றனர்

நிலம் மண்ணை அசைக்க, மச்சையும், சதையையும் உசுப்புகிறது கனல் தீயை உருவாக்குகிறது

நிலத்தோடு நிலம் மோதுவது இரண்டிலும அடங்கிய நீரை ஈரப் படுத்துகிறது நுரைக்க வைக்கிறது கடந்து போதலும் நிலைத்தலும் இதுவே

194. நிலம் உயிர்க்கின்றது

கலவியின் போது, உடல் உடலை மூச்சுக கொள்வது போன்று ஆணும் பெண்ணும் மூச்சை உள்ளிழுக்கின்றனர். வெளிவிடுகின்றனர்

காதலர்களின் வாயிலாக நிலம் தானாகவே உயிர்க்கிறது ஒருவருடைய மூச்சுக் காற்றே மற்றவருடைய மூச்சுக் காற்றாகிறது இந்த மூச்சுக் காற்று தண்ணீரும் நெருப்பையும் உள்ளடக்கிய தசைக்கு உரமேற்றுகிறது

195. ஒருவருக்கொருவர்

பெண்ணை மகிழ்விப்பதில் தான் ஆண் நிறைவு பெறுகிறான் ஆணை மகிழ்விப்பதில் தான் பெண் நிறைவு பெறுகிறாள்

ஒருவரை ஒருவர் மகிழவிப்பதுதான் இருவரையும் இணைத்துப் பிணைக்கிறது, உறவுக்கு உரம் சேர்க்கிறது

ஒருவருக்கொருவர் துணை தேவை என்கிற உணர்வு இருவருக்குமே நிறைவளிக்கிறது

196. மூழு வீச்சு

காதல் புரிவதில் முழு வீச்சை வெளிப்படுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அது கிடைக்காவிடில் எங்கிருந்து அதை அடைய முடியும்?

ஒருவருடைய உடல் மற்றவருக்கு விருந்தாகிறது விருந்தளிப்பவன் என்கிற முறையில் தாராளமாக நடந்து கொள் விருந்தாளி என்கிற முறையில் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்

197. ஆற்றின் போக்கைப் பின்பற்று

ஆறு தானாகவே ஓடுகிறது. எவரும் வழி
காட்டாமலேயே தன் வழியே சென்று கடலில் கலக்கிறது

அறிவின் கீழ் நோக்கிச் செல்லும் போக்கு யாவரையும் முழு ஒற்றுமையை நோக்கியே இட்டுச் செல்கிறது

ஆற்றின் போக்கை ஒட்டி அமைதியாகவே நீயும் செல்

குருதியின் ஆர்வமும் விரைவும் சேர வேண்டிய இலக்கு என்கிற குறிக்கோளை நோக்கியே செல்கின்றன

கீழ் நோக்கிச் செல்லுதல் என்கிற முறையை நினைவில் கொள் ஆற்றின் போக்கைப் பின் பற்று

198. தொடக்கத்தின் தொடக்கம்

தொடக்கம் என்று ஒன்று இருக்குமானால், அந்தத் தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேணடும அதே போல் தொடக்கத்தின் தொடக்கத்திற்கும் ஒரு தொடக்கம் இருக்கவேண்டும இந் நிலையில் எந்தத் தொடக்கம்தான் தொடக்கமாயிருக்க முடியும்?

எந்தத் தொடக்கத்திற்கும் மூல காரணம் ஆர்வம் ஆர்வத்திலிருந்து உயிர்த்து எழுவதுதான் ஒவ்வொரு தொடக்கமும் ஓடிக்கொண்டேயிருக்கும நீர்தான் ஆறு என்பது போல, தன்னிடமேயிருந்தே உண்டாகித் தானே நிறைவேற்றுவது போல் நிலைத்திருக்கிற புடவி தான் ஆர்வம்.

ஆணும் பெண்ணும் ஒன்றி இணையும் போது, விண்மீன்கள் ஒவ்வொன்றும், புல்லின் நுனியும் அவர்களை ஒத்தே செல்கின்றன. ஆசையின் வேர்கள் விண்மீன்களிலும், விரைவு புல்பூண்டுகளிலும் இருக்கும் நிலையில் தவறொன்றும் நிகழ முடியாது.

ஆணும் பெண்ணும் இணையும்போது எந்த முறைமை உள்ளதோ, அதே முறைமை நிலைதான் அவர்கள் பிரியும் போதும் நிலவுகிறது. தேய்ந்துவரும் ஆர்வம் பிரிவுக்கு வழிகோல்கிறது. பிரிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. எழுப்பப்பட்ட ஆர்வம் பிரிந்திருந்ததை ஒன்று சேர்க்கிறது. நாள்கள், பருவ காலங்கள் என்கிற தாளக்கட்டுதான் காதலர்கள். அவர்களுடைய மரபினருடைய தாளக்கட்டும் ஆகும்.

தொடக்கத்தின் தொடக்கத்திற்கும் முன்பாகவே இயற்கையின் காலத்திலேயே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.

199. உடம்பு மட்டுமே

எல்லை கடத்தல் என்பது எல்லைக்கு உட்பட்தே. வெளியே செல்லும் வழி என்பது உள்ளே வரும் வழிதான். இந்த உண்மை எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.

மனத்தைத் தாண்டிச் செல்வதை எப்படி மனம் அறிகிறதோ, அப்படியே உடலைத் தாண்டிச் செல்வதை உடலும் அறிகிறது. வலிகளையும், தேவைகளையும் உணர்ந்து கொள்கிற மனத்துக்கு எவ்வாறு மனத்தின் எல்லையைத் தாண்ட வழி தெரியுமோ, அதே போல் உடலின் எல்லையைத் தாண்ட உடலுக்கும் வழி தெரியும்.

தான், மற்றவர், உள், வெளி, மனம் சிந்திக்காமல் இருக்கும் நிலையில் எண்ணுதல், இவற்றை யார் தான் வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடியும்? தொடுதல் என்து சிந்தித்தல் என்று கொள்வோமேயானால், அது தொடுதலின்றி வேறில்லை. எந்த வகையான உணர்வு மில்லாமல் நடனமாடிக் கொண்டிருப்பது தான் உடல். முடிவில் உடல் என்று கூட ஒன்றில்லை. தெரிந்து கொள்ள பணிந்துபோ, கண்டு பிடிக்க இழந்திடு வெறும் உடல் இதற்கெல்லாம் போதுமானது.

200. உடல் நினைப்பதை மனம் தொடர்கிறது

என்ன செய்ய வேண்டும் என்பதை உடல் நன்கறியும். ஏற்கெனவே அறிந்திருந்ததைப் புரிந்து கொள்வதற்காகப் புதிது புதிதான படைத்துக் கொண்டிருக்கும் உடலின் சிந்தனையை மனம் பின் தொடர்கிறது.

பின்னர், வியப்பில் ஆழ்ந்திருக்கும் மனம் ஆசை எழுவதைக் கவனிக்கிறது. செல்லுதல், எழுதல் இவை முடிவுற்று மனத்திற்கு ஆழ்ந்த அறிதல் எட்டும் வரை உடல் எண்ணுவதால் விளையும் மயக்க நிலையில் மனம் யாவற்றையும் மறந்து விடுகிறது.

201. உடல் தீர்மானிக்கட்டும்

விடிவிக்க வேண்டியதை நகர்த்துதல் என்கிற நிலை விடுவித்து விடுகிறது. உறுதியாகப் பற்றி கொள், அது நகர முடியாது. அதுகட்டுப்பாட்டுக்குள் அதே சமயம் எட்டும் தொலைவிலேயே இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்து விடவும் முடியாது. உடலே முடிவு காணட்டும்.

நாளும் பொழுதும் உலகம் நம்மைத் தன் மாயவலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறது. காத்திருந்த பின்னரே விடுதலை செய்வது என்ற எண்ணத்தை நகர்த்துதல் என்கிற செயல் நடைபெறுகிறது. நமக்குள்ளிலிருந்தே, ஏதோ ஒன்றிலிருப்பது ஆனால் எதையும் செய்யாத நிலையிலிருந்தே நகர்த்துதல் என்கிற நிலை ஏற்படுகிறது. நம்மிடம் உள்ளது தான் என்றாலும் கூட நமது என்று சொல்லிக் கொள்ள முடியாதது நாம்தான் நகர்த்துகிறோம் என்றெண்ணாமல் நாம் நடத்தப்படுகிறோம் என்கிற உணர்வோடு உலகில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அது நமக்குக் கற்பிக்கிறது

202 தொலைவில் தெம்புடன் கண்கள்

நகர்ந்து சென்று கொண்டிருத்தல் என்கிற நிலைக்கு அப்பால் இணைதல் என்பது ஒரு இருத்தல்தான். இந்த நிலை ஆணையுடப் பிறந்ததுவே தவிர ஆணைக்கு கட்டுப்பட்டு வருவதில்லை ஆணும் பெண்ணும் அந்த அசைவற்ற இடத்தை நோக்கிச் செல்கின்றனர், அவ்வாறு செல்கையில் அவர்கள் உலகத்தை நிலைநிறுத்தச் செய்து பின்னர் அதையும் உடைத்து நகரச் செய்கின்றனர்

இத்தகைய போராட்டம் உலகத்தை நடுங்க வைத்துப் பின்னர் புதியதோர் உலகம் செய்து, பழைய உலகை முடிவுக்குக் கொண்டு வருகிறது தொலைவிலுள்ள ஆனால் தெம்புடன் இருக்கிற கண்கள் படைத்த காதலர்கள் புதியதோர் தொடக்க நிலைக்குத் திரும்புகின்றனர் மீண்டும் மீண்டும் இந்த நிலை தொடர்கின்றது

203. தன்னுள் மாறும் காலச்சுழற்சி

பருவ காலங்களைப் போலவே, ஆர்வம்
காத்திருக்கிறது, நகர்கிறது, உணர்ச்சி ஊட்டுகிறது. முடிவில் நிறைவேற்றியும் வைக்கிறது.

ஆண்டின் ஒத்திசைவு இலையுதிர் காலத்தின் முடிவுக்கு காதலர்களை இட்டுச் செல்வதான வாக்குறுதி யாகிறது. இலையுதிர் காலத்தில் அவர்கள் ஒருங்கிணைவது புதியதோர் தொடக்கத்தின் ஒத்திசைவு உணர்ச்சிப் பெருக்கின் ஆழத்தில், சொல்லப்படாத வாக்குறுதியாகக் கூட அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், பொறுத்திருக்கிறார்கள். பனிக்காலம் வரை காத்திருப்ப தென்பது கூட வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையினால்தான். பனிக்காலம் பற்றிய எண்ணமும், மறுபடி மறுபடி ஆர்வம் ஊற்றெடுத்து வரப் போகிற பருவ நிலைகளிலும் தொடரும் என்கிற நம்பிக்கையில் தான் எழுகிறது.

204. உடலின் செய்பாடு

ஆணின் முழுமை பெண்ணின் வெறுமையினாலும், பெண்ணின் வெறுமை ஆணின் முழுமையினாலும் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், ஆண் பெண் என்கிற தனி நிலை மட்டும் இருப்பதில்லை. உடலின் செய்கையினால் இரு பாலாரின் நிலையிலும் மாற்றமும், இணைவும் ஏற்படுகின்றன.

தசைத் தொடர்புடையது என்கிற காரணத்தினால் ஆண் மனம், பெண் மனம் என்கிற புரிதல் ஏற்படுகிறது எண்ணங்களைப் பற்றிய சிந்தனை மூலம் இந்தப் புரிதல் கிடைப்பதில்லை.

தசை உணர்ச்சி காரணமாக உடலுக்கு விரைவில் புரிதல் கிடைக்கிறது. உடல் புரிதலைப் பெற முயச்சி செய்கிறது எண்ணங்கள் புரிதலைப் பெற உடலைப் பின் தொடர்கின்றன

205. எளிமையும் தெளிவும்

தெளிவாகப் புலப்படுவதிலும் தெளிவில்லாத தொன்று உள்ளது. எளிதுதான் என்பதில் எளிதில்லாத தொன்று உள்ளது தெளிவானது, எளிதானது என்று நாம் நினைப்பதிலெல்லாம் தெளிவில்லாததும், எளிதில்லாததும் உள்ளன.

ஆண், பெண்ணும் நன்கு ஆழ்வுணர்வின் போது, உடலோடு உடல் இணைதல் என்ற நிலைக்கும் அப்பால் ஒன்று இருக்கிறது. இடைவெளி என்பதற்கு உள்ளேயே, உன்னையும், வெளியையும் இங்கே அங்கே, இது அது இவற்றையெல்லாம் இணைப்பது என்று ஒன்று இருக்கிறது

இடைவெளி, என்பதற்கு உள்ளேயே, எளிமையானது எளிமையற்றது நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலை, முழுமையான வெறுமை, எண்ணம் பொருள் இரண்டும் அற்ற ஒருநிலை, தொடாமலே தொடுதல் என்கிற நிலை ஆகியவையெல்லாம் காணப்படுகின்றன. மனம் இருக்கிற காரணத்தினால் எண்ணங்கள் அந்த நிலையைக் காண முடிவதில்லை உடல் இருப்பது காரணமாகப் புலன்கள் அதை உணர முடிவதில்லை.

உடலோடு உடல் இணைந்து ஒன்றுபடும்போது, இடையிலிருக்கும் நிலையைப் பற்றிக் கொள். எண்ணங்களிடையே மனம் சிந்திக்கும் போது, புரிந்து கொள்ளுதல் தெளிவாகிறது, எளிதாகிறது

ஒன்றுக்கிடையே மற்றொன்று என்கிற உண்மையை ஆண் பெண் இணைதல் என்கிற நிலை புரிய வைக்கிறது.

206. ஈரடிகளும் கூத்திட வேண்டும்

எப்பொழுது பெண்ணின் வெறுமை நிரப்பப்பட்டு, ஆணின் முழுமை வெறுமையாக்கப் படுகிறதோ, ஒருவர் மற்றவரை செயலிழக்கச் செய்கிறார் என்றாகிறது

ஆண் வீழ்ச்சியுறுகிறான், தன்னைச் செயலிழக்கச் செய்து அவள் முழுமை பெற்று விடுகிறாள் என்கிற காரணத்தினால் அவன் அவளைக் குறை கூறுகிறான். அதே சமயம் அவனுக்கு அவள் துணை தேவைப்படுகிறது. பெண்ணினால் தன் ஆற்றலை இழப்பது அவனுக்குப் புதிது.

பெண் வீழ்ச்சியுறுகிறாள். தன்னைச் செயலிழக்கச் செய்து தன்னுடைய வெறுமையை அவனுடைய முழுமையினால் ஈடுசெய்து விடுகிறாள் என்கிற காரணத்தினால் அவள் அவனைக் குறை கூறுகிறாள் அதே சமயம் அவளுக்கு அவன் துணை தேவைப் படுகிறது ஆணினால் தான் ஆற்றல் பெறுவது அவளுக்குப் புதிது

வாழ்வின் தோல்வி ஒவ்வொன்றும் புதியதோர் சமநிலையைத் தேடுதலே. ஆண் பெண் இரு பாலருடைய வீழ்ச்சியும் தனிமையிலிருந்து மீண்டும் இணைதலைத் தேடுதலிலேயே முடிவு தேடுகிறது. இணைதலின் சமப்போக்கை அவர்களுடைய உடல்கள் உணர்ந்திருக்க மனம் இதைப் புரிந்து கொள்ளவில்லை. உடல்களே இந்த உண்மையை உணர வலியுறுத்தல் தேவையாகிறது. சிந்தனை ஏற்படுத்தும் தொலைவிற்குத் தொடுதலே நெருக்கம் கொணர்கிறது. எண்ணச் சுழலில் சிக்கியிருக்கிற மனத்திற்கு உடல்களின் நெருக்கமே புரிதலை உணர்த்துகிறது.

உடல்கள் அவற்றின் போக்கில்தான் செல்லு மென்பதை மனம் மறந்து விடுகிறது. இதையே இணைதல் நினைவு படுத்துகிறது

உடலும் உள்ளமும் சமநிலையிலிருக்க வேண்டும்
ஆணும், பெண்ணும் கூட அவ்வாறே இயற்கையின் மெய்மையைப் புரிந்து கொள்ளப் பாதங்கள் கூத்திட வேண்டும்

207. சிறப்பான அசையாநிலை

ஒவ்வொரு சிந்தனைக்கும் செயலுக்குமிடையே, சிந்தனையையும் செயலையும் சரிசமப்படுத்தும் வகையில் அசையா நிலையிலிருந்து அசையா நிலைக்கு இட்டுச் செல்லும் சிறப்பான ஓர் அசையா நிலை உள்ளது

ஒவ்வொன்றும் அசையாநிலையிலிருந்து எழுந்து பின்னர் அதே அசையாநிலைக்குத் திரும்பிச் செல்கிறது

அசையா நிலை என்பது எண்ணமிடாத நிலையும் செயல்படாத நிலையும் ஒருமிக்கும் ஒரு சிறப்பான அசையா நிலையாகும்

இணைவதிலும் ஓர் அசையா நிலை உள்ளது. எவருடைய முயற்சியுமில்லாமலேயே இந் நிலை ஏற்படுகிறது உடல்கள் உடல்களையும், உள்ளங்கள் உள்ளங்களையும் செயலிழக்கச் செய்யும் நிலை இது.

208. முயற்சி எடுக்காத முயற்சி

உள்ளே இருப்பது வெளியே இருப்பதை ஒன்றுவதும், முடிவு பெறாததை முடிப்பதுமான நிலையே ஆணும் பெண்ணும் இணைவது.

உடல் அசைவு கொடுப்பது, மனம் மனமாகவும், உடல் உடலாகவும் செயல்படும் போதும் ஏற்படும் அசையா நிலையாகும்

இணைதல் என்பது ஆணும் பெண்ணும் கூடும் முயற்சி எடுக்கா முயற்சியும், நிலைத்து நிற்கும் அமைதியான பேசாமையுமாகும்.

209. ஆணும் பெண்ணும் இல்லாவிடில்?

கலவியின் அந்த அமைதியான நேரத்தில் ஆணின் முழுமையையும் எடுத்துக் கொண்டபின் தன்னுடைய வெறுமையை முழுவதுமாக நிரப்பப்பட்ட நிலையில் வேறு என்ன தேவையிருக்கிறது பெண்ணுக்கு? அதேபோல், தன்னுடைய ஆற்றலை யெல்லாம் பெண்ணுடைய வெறுைைய இட்டு நிரப்பிய பின், கொடுப்பது வேறு என்ன இருக்கிறது ஆணுக்கு? ஆண் பெண்ணை அழித்து விடுகிறான், பெண் ஆணை அழித்து விடுகிறாள்

ஆண் தன்னுடைய ஆற்றலை எல்லாம் பெண்ணுக்குக் கொடுத்து விடுவதாலும், பெண் ஆணுடைய ஆற்றலை எல்லாம் எடுத்துக் கொள்வதாலும் இருவருக்குமே இழப்பு என்பதைத் தவிர கண்ட பலன் என்ன? வெறுமைதான் எச்சம்.

அண்மையில் இந்த முடிவுக்கு வருவது சரிதானா? ஆணையும் பெண்ணையும் தவிர இந்தப் புதிரை யார் விடுவிக்க முடியும்?

210. திகைப்பூட்டும் நிலை

கலவியில் திளைத்திருக்கும் காதலர்களில், அவன் தன்னைக் கடந்து செல்கிறான்; தன்னையே மறந்து விடுகிறான். அதேபோல் பெண்ணும் தன்னைக் கடந்து சென்று விடுகிறாள். தன்னை மறந்து விடுகிறாள்.

உருவம் என்கிற நிலையை அவள் கடந்துவிடும் போது அவள் அவனுக்கு ஒரு பொருளேயில்லை. அதேபோல் உருவம் என்கிற நிலையை அவன் கடந்து விடும் போது, அவன் அவளுக்கு ஒரு பொருளேயில்லை. ஒருவருக்கு மற்றவர் தெரிந்தவர் என்கிற நிலையே அழிந்து போகிறது.

ஆசை வைத்துக் கொள்ளாததினாலேயே அவர்கள் ஆசையுடையவர்களாகிறார்கள். ஒருவருடன் மற்றவர் பிணைந்திருக்கும் போது திகைப் பூட்டும் ஒரு நிலையே நம் கண்களுக்குத் தென்படுகிறது.

211. மீண்டும் மீண்டும் திரும்பும் காலம்

முடிவு மறுபடி தொடக்கம் இவற்றிற்கு முன்னர் ஆண் பெண் இருவரும் தம்மை மறந்த ஓர் அற்புத நிலையில் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் காதலர்களே, அவர்களின் தனிமை நிலை என்ன வாயிற்று? வேறுபாடுகள் என்னவாயின? ஒன்றாகக் கலந்த அந்த இருவர் எங்கே போயினர்?

விடுதலை, முடிவு பிரிவில் முடிகிறதும், மீண்டும் விழிப்புணாவுக்குத் திரும்புகிறதுமான நிலை ஏற்படும் வரை தனிமையிலுள்ள உடல் மனத்தைக் குழப்பிக் கொண்டே இருக்கிறது.

தொடக்க நிலைக்குத் திரும்பும் காலம் எனபதிலுள்ள மனநிலை எததனை வியப்பானது!

212 முழுமையின் மறுபாதி

கலவியில் ஆண் பெண்ணிடம் தன்னைவிட்டுக் கொடுக்கும் போதும், பெண் ஆணிடம் தன்னை விட்டுக் கொடுக்கும் போதும், ஒருவர் மற்றவருக்கு முழுமையின் மறு பாதியை அளிக்கின்றனர்

ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாய் இணைவதை முழுமை செய்கின்றனர். அதே சமயம் ஒவ்வொருவருமே பிரிவின் விரைவையும் முழுமை செய்கின்றனர்

米米 米