திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-மவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை
தொகுஆசிரியர்: தெரியவில்லை
தொகுமவ்வருக்கம்-12 பாடல்கள்
தொகும
பாடல் 76 (மறங்கண்ட)
தொகு(சுவடு கண்டிரங்கல்)
மறங்கண்ட கள்ளர் செருப்படி யாங்கவை மற்றவரைப் ()
புறங்கண்ட வேலன்பொற் காற்சுவ டிங்கிவை பூதலத்தி ()
லறங்கண்ட மாயன் கரந்தை வெற் பூடுபண் டஞ்சுமென்பொன் ()
னிறங்கண்ட தண்டைச் சிறுகாற் சுவடுவை நேர்படுமே (60)
பாடல் 77 (மாயோன்)
தொகு(பாலைக்கிரங்கல்)
மாயோன் கரந்தையி லாதி வராகர் மலையகிரி ()
மேயோன் கரந்தை வருந்தனங் காள்மலர் மேலிருந்தாள் ()
சேயோன் கரந்தை மலர்வாளி யெய்யவெண் டுண்டமுடித் ()
நூயோன் கரந்தை யெனப்பசந் தீரவன் சொன்னினைந்தே (60)
பாடல் 78 (மின்னா)
தொகு(அவன் சுரத்துய்த்தல்)
மின்னா மருங்குல்வெள் ளோதிம மேமெள்ள மெள்ளவாரா ()
யின்னா நடையென் றினியிரங் காம லிடையிலுண்டு ()
கன்னா ரியாக்குந் திருமால் வராகர் கரந்தைவெற்பிற் ()
றென்னார் தடம்பனை மன்னார் பதிதடை தீர்ந்துறவே (60)
பாடல் 79 (மீனங்கள்)
தொகு(காதலின் விலக்கல்)
மீனங்கள் போல்விழி யாளுட னீகங்குல் மேவிலெங்கள் ()
தானங்க ணீள மிலையண்ண லேயிச் சரிநடந்த ()
வூனங்க ளாறி மரைப்பால் விருந்துண் டுறங்கியெழுந் ()
தேனங்க ளேனப் பெருமாள் கரந்தையிற் செல்லுமினே (60)
பாடல் 80 (முனந்தானை)
தொகு(தன் பதி அணிமை சாற்றல்)
முனந்தானை காத்தவ ராதி வராகர் முகிற்கிரிமேற் ()
பனந்தாங்கு கொங்கைப் பசுங்கொடி யேகொடும் பாலையென்ற ()
வனந்தான் கடந்தனம் மாளிகை பார்மணிக் கோபுரம்பார் ()
சனந்தான் புகழ்தடந் தேர் பார தோகரந் தாபுரியே (60)
பாடல் 81 (மூத்த)
தொகு(முக்கோற் பகவரை வினாதல்)
மூத்த வராகமுக் கோலுமுந் நூலு முகந்துநெறி ()
வாய்த்த வராக வருமந்த ணீர்சொலும் வையமெலாம் ()
பூத்த வராகர் புரந்ததென் னாட்டினில் பூவைதன்னைக் ()
காத்த வராக நிழலாய் நடந்த கருத்துணர்ந்தே (60)
பாடல் 82 (மென்மரல்)
தொகு(நற்றாயிரங்கல்)
மென்மரல் சாய்ந்தெட்டி வேரறத் தீய்ந்துவெள் வேல்கருகிப் ()
புன்மர மொன்றற்ற பாலையி லேயொரு பொற்கணையால் ()
வன்மர மேழெய்த மாயோன் கரந்தையில் வாய்த்தவன்பின் ()
பன்மல ரோதிதன் பாடகக் காலெப் படிவைகுமே (60)
பாடல் 83 (மேட்டுக்)
தொகு(பாங்கியை முனிதல்)
மேட்டுக் கிறைத்த புனலோ கடற்பெய்த மென்மழையோ ()
காட்டுக் கெறித்த நிலவோ வராகர் கரந்தைவள> ()
நாட்டுத் தளவ நகையா யுனைநம்பி நான்வந்ததுங் ()
கோட்டுத் தனத்திற்குக் கையுறை தேடிக் கொணர்ந்ததுமே (60)
பாடல் 84 (மைபோ)
தொகு(இறைமகள் மறுத்தல்)
மைபோ லிருண்டது வானமெல் லாமழை மாரிபெய்து ()
செய்போற் குளிர்ந்தது தேசமெல் லாமிடைச் சேரியிற்போய் ()
நெய்போற் றயிருண்ட கள்வர் வராகர் நெடுங்கிரியில் ()
மெய்போல வேரதி யேவம்புக் காரன்று மின்கொடியே (60)
பாடல் 85 (மொய்வர)
தொகு(விதிவழிச் சேறல்)
மொய்வர வூரவர் முந்நூ லவர்வர முத்தனையாள் ()
கைவரு மாலையென் கண்களி கூர்வரக் காணுமுன்னே ()
மைவரு நீல மலைபோலு மாதி வராகர்வெற்பின் ()
மெய்வருங் காவலன் பின்போக வோதலை மேல்விதியே (60)
பாடல் 86 (மோகக்)
தொகு(குறத்தி குறி கூறியமை சாற்றல்)
மோகக் கணவன் வருவான்பொன் னேயின்று முட்டையிட்ட ()
பாகக் கெவுளி பலுகுநன் றாந்திருப் பாற்கடலில் ()
யோகத் துயில்கொண்ட வாதி வராக ருயர்பொதியக் ()
காகக் குறக்குறி பொய்யாது கூழுங் கலையுநல்கே (60)
பாடல் 87 (மௌவற்)
தொகு(தனிமைக்கு இரங்கல்)
மௌவற் கமுக மடன்மேற் படர்ந்து மலர்ந்துவண்டு ()
கௌவக் கமழுங் கரந்தை வராகர் கனங்கிரிமே ()
லௌவைத் தெரிவை யரன்பருந் தாமு மணைத்துறங்க ()
விவ்வத் தனிக்குத் துணைநா னொருத்தி யிருந்தனனே (60)
பார்க்க
தொகு- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-உயிர்வருக்கம்
- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்
- திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-தவ்வருக்கம்