திருவாசகத்தேன்/நல்லவர் பேச வேண்டும்! அல்லவர் ஏச வேண்டும்!
மாணிக்கவாசகர் பல்வேறு அனுபவங்களைச் சந்தித்தவர். மகிழ்ச்சிக்குரிய அனுபவங்கள் மாணிக்கவாசகர் வாழ்க்கையில் அருமையிலும் அருமை. அமைச்சுப் பொறுப்பிலிருந்த போதும் அந்தப் பொறுப்பை பதவியைக் கடமையாகவும் பாரமாகவும் கருதினாரேயன்றி மகிழ்ச்சியாக கருதவில்லை.
ஆட்சிப் பொறுப்பு எளிதன்று; பொறுப்பு மிகுதியும் உடையது! மழை பெய்யவில்லையா? ஆட்சிக் காவிலின் பிழையே என்பர் சான்றோர். பசி பட்டினியால் சாவா? இரந்து பிழைத்தலா? அனைத்துக்கும் காரணம் ஆட்சியே என்று கூறுவது மரபு. இளங்கோவடிகள் சேரன். செங்குட்டுவன் வாயிலாக ஆட்சி துன்பம் தரும் தகையது என்று கூறுவார்.
"மன்பதைக் காக்கும் கன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்"
என்பது சிலப்பதிகாரம்.
இன்று ஆட்சி சுகத்திற்குரியதாக விளங்குகிறது.
இன்று ஆட்சி சுகத்திற்குறியதாக இன்று அரசியல், ஆட்சி அனைத்தும் ஈட்டத்திர்குறியனவாகும். சுகானுபவத்திற்கு உரியனவாகும் விளங்குகின்றன. இன்று Power Currupt என்பது பழமொழியாகவே விளங்குகிறது.
ஆட்சிக்குரியவர்கள் எப்படி விளங்க வேண்டும் என்பதற்குக் கம்பனில் ஓர் உதாரணம் கிடைக்கிறது. இராமன் வசிட்டனது இல்லத்திற்குச் சென்று படித்து விட்டு வருகிறான். அன்று மாணவர்கள்-ஆசிரியரைத் தேடிப்போன காலம் இன்றோ ஆசிரியர்கள் மாணவர் களைத் தேடிப்போகிறார்கள்! இராமன் வசிட்ட முனிவர் இல்லத்திலிருந்து வருகிறான். சாலையில் இரு மருங்கிலும் மக்களைப் பார்த்த இராமன் இரதத்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கிப்போய்,
<poem>"எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எதுவினை இடர் இலை? இனிது தும் மனையும்
மதிதரு குமரரும் வலியர் கொல்?"
என்று வினவியறிகிறான். ஆக, என்ன தெரிகிறது? இல்லங்கள் தோறும் நலமமைந்த வாழ்க்கை தேவை: இன்றியமையாத் தேவை. அதற்கு அரசு உறுதுணையாக அமைதல் வேண்டும். உங்கள் பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கின்றார்களா? என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் இராமன் கேட்கிறான். இன்றோ ஆட்சியாளர்களை அணுக முடியாத நிலையில் வேலி! ஆட்சியாளர்களை அணுக முடியாத நிலையில் குண்டு துளைக்காதகார்கள்! காவலர்களின் அணிவகுப்பு! ஆனால், அன்று நடந்தது முடியாட்சி; இன்று நடப்பது குடியாட்சி! மக்களுக்கும் ஆட்சியாளருக்குமிடையே இடைவெளி குறையும்போதே நல்லாட்சி அமைய இயலும்.
உண்மையில் சமூகம் என்ற அமைப்பு உருவாக வில்லை. மனிதர்கள் கூட்டமாக வாழ்கின்றனர். கூட்டமாக வாழ்தல் வேறு. கூட்டமாக கூடுதல் கூடப் பயம், தேவை ஆகிய அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒன்றாகக் கூடி வாழ்தல் வேண்டும். ஒன்றாகக்கூடி உழைத்தல் வேண்டும். இங்ஙனம் உணர்வால் ஒத்ததறிந்து வாழும் மக்கள் தொகுதியே சமூக அமைப்பு. உயர்ந்த சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மேட்டுக்குடியினர் என்ற பாகுபாடு தோன்றாது; தோன்ற வழியில்லை. 'ஒருவர் எல்லாருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும்' என்று வாழ்வர். இயற்கை அமைவின், காரணமாகத் தகுதி, திறமையில் வேறுபாடுகள் இருந்தாலும் அல்லது காணப்பெற்றாலும் அவற்றை பொருட்படுத்துவதில்லை. பெரியோரை வியத்தல் தமிழ் மர்பன்று. அதுமட்டுமல்ல. சிறியோரை இகழ்தல்; அதனினும் இல்லை. தகுதி, திறமைகள் அழுக்காற்றைத் தூண்டி வளர்த்தல் உயர்ந்த சமுதாய அமைப்பில் காண இயலாது. 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' எங்கு உள்ளதோ அங்கேதான் சமூகம் இருக்கிறது.
சமுதாயம் என்ற அமைப்பு, மனிதகுல வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தது. ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்ந்தனர். அன்று மனித குலத்தை அரித்து அழிக்கும் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகள் இல்லை. தனி உடைமைக் கோட்பாடும் வாழ்க்கை முறையும் தோன்றிய பிறகே சமுதாயம் உருக்குலைய ஆரம்பித்தது. பண்டங்களைப் பணமாக்கிப் புழங்கும் சமுதாயம் தோன்றிய பிறகே 'மனிதம்' மறைந்தது. பண மதிப்பீட்டுக் கொள்கை கோலோச்சத் தொடங்கியது என்றோ, அன்றே சமூகம் என்ற அமைப்பு நொறுங்கி உருத்தெரியாமல் போய்விட்டது. களவும் காவலும் தோன்றின. இரப்போரும் ஈவோரும் தோன்றினர். ஆட்சிக்கு அதிகாரங்கள் பெருகி வளர்ந்தன் சிறைச் சாலைகள் வளர்ந்தன. மக்கள் அடிமைகளானார்கள். அரசன் கடவுளானான். இது சமூகம் தோன்றி மறைந்த வரலாறு.
மாணிக்கவாசகர் காலத்தில் சமூக அமைப்பு கெட்டிருந்ததை அவரே குறிப்பிடுகிறார். இதனை,
“சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி காயேனை”
என்று பாடுவதால் அறியலாம். சாதி குலப்பிரிவினைகள் நிலப் பிரபுத்துவம் பெற்றெடுத்த குழந்தைகள்! வளர்த் தெடுத்த செவிலித் தாய். தனி உடைமைச் சமுதாயம். திருவாசகம் “அயலவர்” என்று குறிப்பிடுகிறது. ஆக, மாணிக்கவாசகர் காலத்திலேயே “நம்மவர்” “அயலவர்” என்ற வழக்குகள் தோன்றிவிட்டன. “பொய்யர்தம் மெய்” என்பார் மாணிக்கவாசகர். கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய மதப் புரோகிதர், ஆதிக்க சக்தியின் பால் சேர்ந்துவிட்டனர்; சுரண்டும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு “செல்வச் செழிப்பு, கடவுள் கருணை, புண்ணியத்தின் பயன்” என்று கூறியவுடன் சுரண்டப்பட்ட- வாழ்விழந்த மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கை தோன்றாலாயிற்று. அவர்கள் ஆப்தமான உறவினராக இருந்து “அயலார்” ஆயினர். நாத்திகம் பேசினர். மனிதகுல நாகரிகத்திற்கு- பாதுகாப்பிற்குக் கடவுள் நம்பிக்கை தேவை. நாத்திகம் நஞ்சு. அதே போழ்து கடவுள் நம்பிக்கை மனித நேயத்திற்கு மாறாக இருப்பின் அது நாத்திகத்தினும் கொடிது.
மாணிக்கவாசகர் காலத்தில் சமூகம் உருக்கொள்ள வில்லை. மாணிக்கவாசகர் காலத்தில் சமூகம் சீர்குலைந்து இருந்தது. அவரவர் மனப்போக்குப்படி பேசினர்; அவரவர் விரும்பியவாறு ஒழுகினர்.
“ஊரவர் தத்தம் மனத்தன
பேச எஞ் ஞான்று கொல் சாவதுவே !”
என்று மாணிக்கவாசகரே அழுது புலம்புகிறார்.
சமூகம்- சமுதாயம் என்ற அமைப்புத் தோன்றியது, ஒருவரையொருவர் தாங்குவதற்காக, வாழ்விப்பதற்காகவேயாம்.
இந்த உலக அமைவை- இயற்கை நோக்கின் ஒப்புரவுநெறி பேணத்தக்கதாகவே அமைந்துள்ளது. ஒன்றின்றி ஒன்றில்லை என்பதை நியதியாக விளங்குகிறது. ஆனால் மனிதன் உயிரியல் இயற்கை- மனித இயல்பைப் பெரிதும் முயன்று அழிக்கிறான். அதன் விளைவே கெட்ட போரிடும் உலகத்தின் தோற்றம்! ஏன் இந்த உலகத்தில் பஞ்சம்? பாரதி காரணம் சொல்கின்றான்.
- கேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
- கினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா,
- கர்ரான கிலத்தைப் போய்த் திருத்த வேண்டா;
- கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
- சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு;
- சிவன் செத்தா லன்றி, மண்மேல் செழுமை உண்டு
- கேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
(பாரதி அறுபத்தாறு- 61)
என்று பாடினான். இன்று என்ன நிலை? மண்மேல் செழுமையைக் காணோம். “சிவன் செத்து” விட்டானா? நஞ்சுண்டும் சாகாத சிவன் எப்படிச் சாகமுடியும்? சாவாதவன் மூவாதன் சிவன், சிவன், மனிதகுலம் நெறிமுறை தவறித் தறிகெட்டுப் போவதைக் கண்டு திகைத்துச் சிலையாக நிற்கிறான்? அவ்வளவுதான்!
இன்றோ சமூகம் இடறி விழுகிறது; ஒருவன் முன்னேறுவதற்கு இடையூறுகள் செய்கிறது. இடறி விழுந்து விட்டால் எடுத்துத் தூக்க மறுக்கிறது. உண்மையில் சமூகம் நம்மீது சவாரி செய்கிறது. ஏசுகிறது; பேசுகிறது; இழிவு செய்கிறது. மானம், மரியாதை என்ற பெயரில் கலகம் செய்கிறது. அழுக்காற்றின் வழிப்பட்டு அல்லற்படுகிறது; அல்லற்படுத்துகிறது. ஆதலால், சமூகம் என்ற அமைப்பு வலிமையான அடைப்பாக உருக்கொள்ளவில்லை.
மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஆனாலும் அவனால் சமூகத்தில் ஓர் உறுப்பினனாக வாழ முடியவில்லை; வாழ இயலவில்லை. ஆதலால், சமூகத்தின் அங்கீகாரத்தை மனிதன் பெற முயற்சி செய்வதில் அர்த்தமில்லை; பொருளுமில்லை. சமூகம் “நல்லது”, “உண்மை” என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யாது. தகுதி, திறமைகளுக்கும் கூட சமூகம் மதிப்புக் கொடுப்பதில்லை. ஆதலால், நாம் வளர வேண்டுமானால் இரண்டு நிகழ்வு கள் கட்டாயமாக நிகழ்ந்தாக வேண்டும். அதாவது,
“பேசப்பட்டேன் கின்னடியாரில்” பூதலரால்
“நின் அடியான் என்று ஏசப்பட்டேன்”
என்ற மாணிக்கவாசகரின் அனுபவம் நமக்கும் பொருந்தும்; வேண்டும். . -
நல்லவர்கள் கூடியிருக்கிற அவையில் நாம் ஒரு பொருளாக மதிக்கப் பெற்றுப் பேசப்படுதல் வேண்டும். கெட்டவர்கள் கூடியுள்ள கூட்டத்தில் நாம் ஏசப்படுதல் வேண்டும். இவை இரண்டும் நிகழ்ந்தால் நாம் நல்லவர்களாக வாழ்கிறோம் என்பது பொருள்.
மாணிக்கவாசகருக்கு தம்மை இந்த உலகம் ‘பேய்’ என்று கூறிப் பரிகாசத்துடன் சிரிக்கவேண்டுமாம். ஆம்: இன்று இந்த உலகம் பேயாகத்தான் திரிகிறது. பணப் பேய் பிடித்தாட்டுகிறது. தலைவராதல் வேண்டும் என்ற பேய்க்குணம் பிடித்தாட்டுகிறது. நல்லதைக் கேட்பதும் இல்லை; சிந்திப்பதும் இல்லை. ஆதலால், இந்த உலகம் என்னை அங்கீகரிப்பது என்பது ஒருபோதும் ஆகாது. அப்படியே அங்கீகரித்தாலும் பயன் ஒன்றும் இல்லை. பயன் இல்லாதது மட்டும் அல்ல- தீமையும் விளையும்.
திருக்குறள் ‘புகழ்’ என்று ஓர் அதிகாரம் ஒதுகிறது. “புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்பது புறநானூறு.
புகழ் என்பது என்ன? இன்று நாம் கேட்பது, காண்பது புகழல்ல! இன்று விளம்பரத்தைப் புகழ் என்று கருதுகிறார்கள். விளம்பரம் வேறு. புகழ் வேறு. சமுதாயத்தில் பயன்பட வாழ்ந்தோர் இருப்பைதேவையைச் சமூகம் உணர்வதே புகழ். புகழ் வேண்டிப் பெறுவதல்ல. தாமே வரலாற்றுப் போக்கில் வந்தடைவது புகழ்.
இங்ஙணம் பலபட வாழ்க்கைக்குப் புகழ் தேவை என்று கூறினும் புகழை விரும்பாத சான்றோர்களும் இருந்துள்ளனர்; இருக்கின்றனர். அவர்கள் தம் புகழ் கேட்கின் நாணுவர். ஏன்? மாணிக்கவாசகரும்,
என்றார். ஈசனின் புகழே பொருளுடைய புகழ் என்றார்.
புகழ் கேட்டு மகிழ்தல், பழி கேட்டு மனம் கோணுதல் மனிதர் இயல்பன்று. புகழ்படும்போது மகிழ்ந்து கேட்கலாம், பழியை மட்டும் கேட்கக் கூடாதா? மற்றவர் பழித்தலை மனம் கோணாது கேட்க வேண்டும். “யாம் வல்லேம்” என்று மமதை கொள்ளுதல் தகாது. மமன்த இழக்கப்படுதல் வேண்டும். “நான்” கெட்டுப் போக வேண்டும். தாழ்வெனும் தன்மை வேண்டும். அறிவுடை யோம் என்னும் செருக்கும் மயக்கமும் ஆகாது. செருக்கு, அறிவு வளர்ச்சியின் ஊற்றுக்களைத் துார்க்கும்; மூடனாக்கும்; முட்டாளாக்கும்; பேதையாக்கும்; மூர்க்க ாைக்கும். எவ்வகையாலும் செருக்கு ஆகாது; கூடாது. இத்தகு தீய வாயில்களை அடைத்து நன்னெறி வாயிலைச் சார்தல் வேண்டும். ‘கடவுள் ஒன்று’ என்ற துணிவு வேண்டும். “இவர் தேவர், அவர் தேவர் என்று ஆசைகளால் உந்தப்பட்டு அலை மோதல் கூடாது. ஈசனை- இறைவனை நினைந்து நினைந்து கன்று ஈன்ற ஆவின் மனம் போலக் கசிந்துருகி அழக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதுவே ஆன்மிக வாழ்க்கை; சமய வாழ்க்கை.
நெறிமுறை பிறழ்ந்த சமூகத்தின் மதிப்பீட்டை எதிர்பார்க்கக் கூடாது; புகழை விரும்பி அலையக்கூடாது. பழிச் சொற்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். கடவுள் உண்டென்றும் ஒன்றென்றும் துணிதல் வேண்டும். அக்கடவுளை ஆவின் மனம் போல, நினைந்து நினைந்து கசிந்துருகி வழிபடல் வேண்டும்.
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
கானது ஒழிந்து காடவர் பழித்துரை
பூனது வாகக் கோணுத லின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரம அதிசய மாகக்
கற்ற மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வம் கனவிலும் கினையாது.
(போற்றித் திருவகவல் 68-74)