திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/பொதுத் திருமுகங்கள்/முன்னுரை
புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகங்களுள் பவுலோடு தொடர்புபடுத்தப்பட்டு வந்த திருமுகங்கள் பதினான்கு. பிற ஏழு திருமுகங்களும் பொதுத் திருமுகங்கள் எனப்படுகின்றன. இவை யாக்கோபு, 1,2 பேதுரு, 1,2,3 யோவான், யூதா திருமுகங்கள் ஆகும்.
பொதுத் திருமுகங்கள்
தொகுமுன்னுரை
இவை குறிப்பிட்ட சபைக்கு என இல்லாமல், பொதுவாக அனைத்துலகத் திருச்சபைக்கும் எழுதப்பட்டுள்ளதால் பொதுத் திருமுகங்கள் எனப்படுகின்றன. ஆயினும் எல்லாப் பொதுத் திருமுகங்களும் அனைத்துலகத் திருச்சபைக்கு எழுதப்பட்டவை எனக் கூற இயலாது. மூன்றாம் யோவான் திருமுகம் தனிப்பட்ட ஒரு நபருக்கு எழுதப்பட்டது. இரண்டாம் யோவான் திருமுகம் தனிப்பட்ட ஒரு சபைக்கு எழுதப்பட்டது. பேதுருவின் முதல் திருமுகம் சின்ன ஆசியாவிலுள்ள பல சபைகளுக்கு எழுதப்பட்டுள்ளது. எனினும் பழங்காலத்திலிருந்தே இவை 'பொதுத் திருமுகங்கள்' எனப் பெயர் பெற்று வந்துள்ளன.
(தொடர்ச்சி): யாக்கோபு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 3 வரை