தொட்டிக்கலை சுப்பிரமணியத் தம்பிரான் தனிப்பாடல்கள்

தொட்டிக்கலை சுப்பிரமணியத் தம்பிரான்
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடல் 2
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 155
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

வெண்பா

வல்லவ குளத்திருக்கு மன்னவா வாசமலி
நல்லவ குளத்திருக்கு நாதனே- மெல்ல
வடிவாளைக் கொண்ட மணவாளா கணிச்சி
வடிவாளைக் கொண்டென் இடர்மாற்று.

கட்டளைக் கலித்துறை

பொன்முக நோக்கி நின்றன் முகநோக்கு முன் போயினளென்
றுன்னிட வீழ்ந்தனள் கைதொட வுய்ந்தனள் உன்னுடனே
பின்னும் பணர்ந்துட முன்னறி வுற்றிட பெற்றபிறப்
பென்னல மென்றனள் ஏரகத்தான் மலையீர்ங் கொடியே.