தொல்காப்பியம்
வட வேங்கடம் தென் குமரி
- சிறப்புப்பாயிரம்
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15
எழுத்ததிகாரம்
தொகுசொல்லதிகாரம்
தொகுபொருளதிகாரம்
தொகுதொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்
தொகுதொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணம் கூறும் நூல். தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல் அதிகாரம். தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.