நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இயற்கை வளங்களைப் படைத்த ஆண்டவன்
பெருமானார் அவர்கள் ஹலரத் அபூதாலிபுடன் ஷாம் தேசத்துக்குப் பயணமாகச் சென்ற பொழுது, ஆண்டவனுடைய பெருமையையும், வல்லமையையும் காட்டக் கூடிய பல அரிய காட்சிகள் பெருமானாருக்கு நன்கு புலப்பட்டன.
மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் ஆகியவை, பெருமானார் அவர்களின் உள்ளத்தில் என்றும் அகலாத ஓர் உண்மையை உணர்த்தின என்றே கூற வேண்டும்.
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்” என்பதை எண்பிக்கும் வகையில் இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி, “இத்தகைய பொருள்களை எல்லாம் படைத்தது யார்? அவனுடைய உண்மையை இந்தப் பொருள்கள் உணர்த்தவில்லையா?” என்று சொல்வார்கள், பெருமானார் அவர்கள்.