நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி
குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி
பெருமாள் திருமொழி
தொகுஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம:
பெருமாள் திருமொழித் தனியன்கள்
தொகுஉடையவர் அருளிச் செய்தது
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே! * தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் * - பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் “ எங்கள் குலசேகரன் என்றே கூறு.
மணக்கால் நம்பி அருளிச் செய்தது
ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே * வாரங்கொடு குடப் பாம்பிற் கை இட்டவன் * மாற்றலரை வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன் * சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியே.
முதல் திருமொழி - இருளிரியச் சுடர்மணிகள்
தொகு(திருவரங்கனைக் கண்டு களிக்க ஆசைப்படுதல்)
- இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி*
- இனத் துத்து அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த*
- அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்*
- அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி*
- திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*
- திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்*
- கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*
- என் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கு நாளே? (1) 647
- வாயோர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*
- வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
- வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*
- மேன்மேலும் மிகவெங்கும் பரந்ததன் கீழ்*
- காயாம் பூமலர்ப் பிறங்கல் அன்ன மாலைக்*
- கடி அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்*
- மாயோனை மணத்தாணே பற்றி நின்று*
- என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே? (2) 648
- எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்தேத்தி*
- ஈரிரண்டு முகமும் கொண்டு*
- எம் மாடும் எழிற் கண்கள் எட்டினோடும் தொழுதேத்தி*
- இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்*
- அம்மான் தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற*
- அணி அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்*
- அம்மான் தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு*
- அங்கு அடியவரோடென்று கொலோ அணுகு நாளே? (3) 649
- மாவினை வாய் பிளந்துகந்த மாலை*
- வேலை வண்ணணை என் கண்ணணை வன் குன்றம் ஏந்தி *
- ஆவினை அன்றுய்யக் கொண்ட ஆயர் ஏற்றை *
- அமரர்கள் தன் தலைவனை அந்தமிழின் இன்பப் பாவினை*
- அவ்வடமொழியைப் பற்றற்றார்கள் *
- பயில் அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும் *
- கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் *
- கொய்ம்மலர் தூய் என்று கொலோ கூப்பு நாளே? (4) 650
- இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி* இன்பத்
- தும்புருவும் நாரதனும் இறைஞ்ச ஏத்த*
- துணை இல்லாத் தொன்மறை நால் தோத்திரத்தால்*
- தொன்மலர்க்கண் அயன் வணங்கு ஓவாதேத்த*
- மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ*
- மதிள் அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்*
- மணிவண்ணன் அம்மானைக் கண்டு கொண்டு* என்
- மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே? (5) 651
- அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு* ஏனை
- அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
- தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தித்*
- திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
- களி மலர் சேர் பொழில் அரங்கத்துரகம் ஏறிக்*
- கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்
- ஒளி மத சேர் திருமுகமும் கண்டு கொண்டு* என்
- உள்ளம் மிக என்று கொலோ உருகு நாளே? (6) 652
- மறம் திகழும் மனம் ஓழித்து வஞ்சமாற்றி*
- வன்புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
- துறந்து* இரு முப்பொழுதேத்தி எல்லை இல்லாத்
- தொன்னெறிக்கண்* நிலை நின்ற தொண்டர் ஆன*
- அறம் திகழும் மனத்தவர் தம் கதியைப் பொன்னி*
- அணி அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்*
- நிறம் திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்*
- நீர் மல்க என்று கொலோ நிற்கு நாளே? (7) 653
- கோல் ஆர்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம்*
- கொலை ஆழி கொடுந்தண்டு கொற்ற ஒள்வாள்*
- கால் ஆர்ந்த ௧திக் கருடன் என்னும்* வென்றிக்
- கடும் பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*
- சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*
- திருவரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்*
- மாலோனைக் கண்டின்பக் கலவி எய்தி*
- வல்வினையேன் என்று கொலோ வாழு நாளே? (8) 654
- தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
- குழாம் குழுமித்* திருப்புகழ்கள் பலவும் பாடி*
- ஆராத மனக் களிப்போடழுத கண்ணீர்
- மழை சோர* நினைந்துருகி ஏத்தி** நாளும்
- சீர் ஆர்ந்த முழவோசை பரவை காட்டும்*
- திருவரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்*
- போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்*
- பூதலத்தில் என்று கொலோ புரளு நாளே? (9) 655
- வன்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
- மண்ணுய்ய * மண்ணுலகில் மனிசர் உய்ய*
- துன்ப மிகு துயர் அகல அயர்வொன்றில்லாச்
- சுகம் வளர * அகமகிழும் தொண்டர் வாழ*
- அன்பொடு தென்திசை நோக்கப் பள்ளி கொள்ளும்“
- அணி அரங்கன் திருமுற்றத்தடியார் தங்கள்*
- இன்ப மிகு பெருங்குழுவு கண்டு* யானும்
- இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே? (10) 656
- திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் *
- திருவரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும் “
- கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக் *
- கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் *
- குடை விளங்கு விறல் தானைக் கொற்ற ஒள்வாள் *
- கூடலர் கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த *
- நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் *
- நலம் திகழ் நாரணன் அடிக் கிழ் நண்ணுவாரே (11) 657
இரண்டாம் திருமொழி - தெட்டறும் திறல்
தொகு(அரங்கன் மெய்யடியாரது அடிமைத் திறத்தில் ஈடுபடுதல்)
:தேட்டரும்திறல் தேனினைத் தென்னரங்கனைத் *திருமாதுவாழ்
- வாட்டமில்வன மாலை மார்வனை வாழ்த்திமால் கொள்சிந்தையராய்*
- ஆட்டமேவி யலந்த ழைத்தயர் வெய்தும் மெய்யடி யார்கள்தம்*
- ஈட்டம் கண்டிடக் கூடு மேலது காணும் கண்பய னாவதே (1) 658
- தோடுலாமலர் மங்கைதோளிணை தேய்ந்ததும் *சுடர்வாளியால்
- நீடுமாமரம் செற்றதும் நிரை மேய்த்தும் இவையே நினைந்து*
- ஆடிப்பாடி அரங்கவோ! என்றழைக்கும் தொண்ட ரடிப்பொடி
- ஆடனாம்பெறில்* கங்கைநீர்குடைந் தாடும்வேட்கை யென்னாவதே? (2) 659
- ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன் இராமனாய்*
- மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி* வண்பொன்னிப்பேர்
- ஆறுபோல்வரும் கண்ணநீர்கொண்டு அரங்கன்கோயில் திருமுற்றம்*
- சேறுசெய் தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே (3) 660
- தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சிகண்டு*
- ஆர்த்ததோளுடை யெம்பிரான் என்னரங்கனுக் கடியார்களாய்*
- நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்து மெய்தழும் பத்தொழு
- தேத்தி* இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே (4) 661
- பொய்சிலைக்குர லேற்றெருத்த மிறுத்துபோரர வீர்த்தகோன்*
- செய்சிலைச்சுடர் சூழொளித் திண்ண மாமதிள் தென்ன ரங்கனாம்*
- மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்*
- மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்து என்மனம்மெய் சிலிர்க்குமே (5) 662
- ஆதி யந்தம னந்த மற்புதம் ஆனவானவர் தம்பிரான்*
- பாத மாமலர் சூடும் பத்தி யிலாத பாவிகள் உய்ந்திட*
- தீதில் நன்னெறி காட்டி யெங்கும் திரிந்து அரங்கனெம் மானுக்கே*
- காதல்செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே (6) 663
- காரினம்புரை மேனிநல்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய்*
- ஆரமார்வன் அரங்க னென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை*
- சேரும் நெஞ்சின ராகிச் சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால்*
- வார நிற்பவர் தாளிணைக்கொரு வார மாகுமென் னெஞ்சமே (7) 664
- மாலை யுற்ற கடல்கிடந்தவன் வண்டுகிண்டு நறுந்துழாய்*
- மாலை யுற்ற வரைப்பெருந் திருமார்வனை மலர்க்கண்ணனை*
- மாலை ற்றெழுந் தாடிப்பாடித் திரிந்து அரங்கனெம் மானுக்கே*
- மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே (8) 665
- மொய்த்துக் கண்பனி சோரமெய்கள் சிலிர்ப்பஏங்கி யிளைத்துநின்று*
- எய்த்துக்கும்பிடு நட்டமிட் டெழுந் தாடிப்பாடி யிறைஞ்சி*என்
- அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி* அவனுக்கே
- பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே (9) 666
- அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடி யார்கள்தம்*
- எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்*
- கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்*
- சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே (10) 667
மூன்றாம் திருமொழி - மெய்யில் வாழ்க்கையை
தொகு(ஆழ்வார் அரங்கனுக்கு அடியாராய் உலகத்தாரோடு தாம் சேராமை)
- மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்*இவ்
- வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்*
- ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்*
- மையல் கொண்டாழிந்தேன் என்தன் மாலுக்கே (1) 668
- நூலி னேரிடை யார்திறத்தே நிற்கும்*
- ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்*
- ஆலியா! அழையா! அரங்கா! வென்று*
- மாலெ ழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே (2) 669
- மார னார்வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும்*
- பாரி னாரொடும் கூடுவ தில்லையான்*
- ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
- நாரணன் நரகாந்தகன் பித்தனே (3) 670
- உண்டியே உடையே உகந்தோடும்*இம்
- மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்*
- அண்ட வாணன் அரங்கன்* வன்பேய்முலை
- உண்ட வாயன்தன் உன்ம த்தன் காண்மினே (4) 671
- தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்*
- நீதி யாரொடும் கூடுவ தில்லையான்*
- ஆதி ஆயன் அரங்கன்* அந்தாமரைப்
- பேதை மாமண வாளன்தன் பித்தனே (5) 672
- எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்*
- உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்*
- தம்பிரான் அமரர்க்கு* அரங்கநகர்
- எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே (6) 673
- எத்தி றத்திலும் யாரொடும் கூடும்*அச்
- சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*
- அத்தனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
- பித்த னாயொழிந்தேன் எம்பி ரானுக்கே (7) 674
- பேய ரேயெனக் கியாவரும்* யானுமோர்
- பேய னேயெவர்க் கும்இது பேசியென்!*
- ஆயனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
- பேய னாயொழிந் தேன் எம்பி ரானுக்கே (8) 675
- அங்கை யாழி யரங்க னடியிணை*
- தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்*
- கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்*
- இங்கு வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே (9) 676
நான்காம் திருமொழி - ஊனேறு
தொகு(திருவேங்கடமுடையான்)
- ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*
- ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*
- கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*
- கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (1) 677
- ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*
- வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*
- தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*
- மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே (2) 678
- பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*
- துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்*
- மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*
- பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே (3) 679
- ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*
- கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*
- பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*
- செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே (4) 680
- கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
- இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
- எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*
- தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே (5) 681
- மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*
- அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*
- தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*
- அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே (6) 682
- வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்
- கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*
- தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*
- கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே (7) 683
- பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*
- முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*
- வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*
- நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே (8) 684
- செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*
- நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*
- அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*
- படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (9) 685
- உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்
- அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*
- செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்*
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே (10) 686
- மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*
- பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*
- கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*
- பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே (11) 687
ஐந்தாம் திருமொழி - தருதுயர்
தொகு- தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
- விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
- அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
- அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (1) 688
- கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
- கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
- விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
- கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே (2) 689
- மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
- பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
- தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
- கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே (3) 690
- வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
- மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
- மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
- ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே (4) 691
- வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
- எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
- எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
- வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (5) 692
- செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
- அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
- வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
- அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே (6) 693
- எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
- மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
- மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
- டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே (7) 694
- தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
- புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
- மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
- புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே (8) 695
- நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
- தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
- மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
- நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே (9) 696
- விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
- மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
- கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
- நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (10) 697
ஆறாம் திருமொழி - ஏர்மலர்
தொகுமார்வுதழுவுதற்காசையின்மைஅறிந்தறிந்தே
- உன்தன்பொய்யைக்கேட்டு
கூர்மழைபோல்பனிக்கூதலெய்திக்
- கூசிநடுங்கியமுனையாற்றில்
வார்மணற்குன்றில்புலரநின்றேன்
- வாசுதேவா! உன்வரவுபார்த்தே. (1) 698
கெண்டையொண்கண்மடவாளொருத்தி
- கீழையகத்துத்தயிர்கடையக்
கண்டு ஒல்லைநானும்கடைவனென்று
- கள்ளவிழியைவிழித்துப்புக்கு
வண்டமர்பூங்குழல்தாழ்ந்துலாவ
- வாண்முகம்வேர்ப்பச்செவ்வாய்த்துடிப்ப
தண்டயிர்நீகடைந்திட்டவண்ணம்
- தாமோதரா! மெய்யறிவன்நானே. (2) 699
கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக்
- கடைக்கணித்து ஆங்கேயொருத்திதன்பால்
மருவிமனம்வைத்துமற்றொருத்திக்குரைத்து
- ஒருபேதைக்குப்பொய்குறித்து
புரிகுழல்மங்கையொருத்திதன்னைப்
- புணர்திஅவளுக்கும்மெய்யனல்லை
மருதிறுத்தாய்! உன்வளர்த்தியூடே
- வளர்கின்றதாலுன்றன்மாயைதானே. (3) 700
தாய்முலைப்பாலிலமுதிருக்கத்
- தவழ்ந்துதளர்நடையிட்டுச்சென்று
பேய்முலைவாய்வைத்துநஞ்சையுண்டு
- பித்தனென்றேபிறரேசநின்றாய்
ஆய்மிகுகாதலோடுயானிருப்ப
- யான்விடவந்தஎன்தூதியோடே
நீமிகுபோகத்தைநன்குகந்தாய்
- அதுவுமுன்கோரம்புக்கேற்குமன்றே. (4) 701
மின்னொத்தநுண்ணிடையாளைக்கொண்டு
- வீங்கிருள்வாயென்றன்வீதியூடே
பொன்னொத்தவாடைகுக்கூடலிட்டுப்
- போகின்றபோதுநான்கண்டுநின்றேன்
கண்ணுற்றவளைநீகண்ணாலிட்டுக்
- கைவிளிக்கின்றதும்கண்டேநின்றேன்
என்னுக்கவளைவிட்டிங்குவந்தாய் ?
- இன்னமங்கேநடநம்பி! நீயே. (5) 702
மற்பொருதோளுடைவாசுதேவா!
- வல்வினையேன்துயில்கொண்டவாறே
இற்றையிரவிடையேமத்தென்னை
- இன்னணைமேலிட்டகன்றுநீபோய்
அற்றையிரவுமோர்பிற்றைநாளும்
- அரிவையரோடும்அணைந்துவந்தாய்
எற்றுக்குநீயென்மருங்கில்வந்தாய் ?
- எம்பெருமான்! நீயெழுந்தருளே. (6) 703
பையரவின்னணைப்பள்ளியினாய்!
- பண்டையோமல்லோம்நாம் நீயுகக்கும்
மையரியொண்கண்ணினாருமல்லோம்
- வைகியெம்சேரிவரவொழிநீ
செய்யவுடையும்திருமுகமும்
- செங்கனிவாயும்குழலும்கண்டு
பொய்யொருநாள்பட்டதேயமையும்
- புள்ளுவம்பேசாதேபோகுநம்பீ! (7) 704
என்னைவருகவெனக்குறித்திட்டு
- இனமலர்முல்லையின்பந்தர்நீழல்
மன்னியவளைப்புணரப்புக்கு
- மற்றென்னைக்கண்டுழறாநெகிழ்ந்தாய்
பொன்னிறவாடையைக்கையில்தாங்கிப்
- பொய்யச்சங்காட்டிநீபோதியேலும்
இன்னமென்கையகத்தீங்கொருநாள்வருதியேல் என்சினம்தீர்வன்நானே. (8) 705
மங்கலநல்வனமாலைமார்விலிலங்க மயில்தழைப்பீலிசூடி பொங்கிளவாடையரையில்சாத்திப் பூங்கொத்துக்காதிற்புணரப்பெய்து கொங்குநறுங்குழலார்களோடு குழைந்துகுழலினிதூதிவந்தாய் எங்களுக்கேயொருநாள்வந்தூத உன்குழலின்னிசைபோதராதே. (9) 706
அல்லிமலர்த்திருமங்கைகேள்வன்தன்னை
நயந்திளவாய்ச்சிமார்கள்
எல்லிப்பொழுதினிலேமத்தூடி
எள்கியுரைத்தவுரையதனை
கொல்லிநகர்க்கிறைகூடற்கோமான்
குலசேகரனின்னிசையில்மேவி
சொல்லியவின்தமிழ்மாலைபத்தும்
சொல்லவல்லார்க்கில்லைதுன்பந்தானே. (10) 707