நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-11

காட்சி - 11

பாதை

       இராவணன், நீதிதேவன் வருதல்

இரா : நீதிதேவா, போதுமல்லவா? இரக்கத்தின் பல வகை
       உருவங்கள் விளைவுகள்.

நீதி : என்னால் காணவும் சகிக்க முடியவில்லை. காதால்
      கேட்கவும் முடியவில்லை. அன்னை ஜானகியே
      இவ்வளவு வேதனைப்படுகிறாரே, அய்யனின்
      இரக்கமிலா செயல் கண்டு.

இரா : உண்மை அதுவாக இருக்கிறதே தேவா. இரக்கம்
      கொள்ளாதார் பலர் உளர். அது அவரவர்களுக்கு
      ஏற்பட்ட சூழ்நிலை. இரக்கம் உச்சரிப்பதற்கு எளிய
      பதம், இனிமையுங் கூட. வாழ்க்கையிலே
      இரக்கத்தைத் தேடிப்பயணம் நடத்துவதோ –
      அலைகடலிலே பாய்மரமற்றகலம் செல்வது
      போலத்தான். வாருங்கள் போகலாம்.

[காட்சி முடிவு]