நூதனமாகப் பாடப்பட்ட தனிப்பாடல்கள்
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடல் 24
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 155 முதல் 159
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்
1
கலித்துறை
நீந்தா வறிஞர் பிணியாளர் கல்வி நெறியறியார்
பூந்தார மஞ்சி விருந்து ஒளிப்பார் பொருட்கே சிவிகை
யூர்ந்தே சுமை சுமந்து உண்போர் இவர்கள் உயிரிருந்து
வீந்தாரிவ ரைவர்காண் செழியா திரு வேங்கடமே.
2
கொடுத்தாவி காக்கின்ற காவேரி வற்றிக் குறைந்திடினு
மடுத்தோண்டி நீருண்ணுவார் அதுபோல் இந்த மானிலத்தி
லடுத்தாரை ரட்சிக்குந் தாதா வென்பார்க்கு அடையாளம் பிச்சை
யெடுத்தாகிலுங் கொடுப்பார் வெள்ளை நாவல் இருப்பவனே
3
வெண்பா
மாமிக்கோர் மாமியுண்டு வாணருக்கோர் வாணருண்டு
சாமிக்குமேற் றகப்பன் சாமியுண்டு- பூமிக்குள்
எல்லாந் தெரிந்தவரும் இல்லை தெரியாதவரு
மல்லாமற் கண்டவர்க ளார்.
4
ஆங்கால மெய்வருந்த வேண்டாம் அதுவன்றித்
தேங்காய்க் கிளநீர்போற் சேருமே- போங்காலை
காட்டானை தின்ற கனியது போலாகுமே
தேட்டாளன் தேடுந் தனம்.
5
சொல்லிச் செய்யார் பெரியோர் சொல்லிச் செய்வார் சிறியோர்
சொல்லியுஞ் செய்யாதவர் கசடர்- சொல்லுங்கால்
குலாமாலை வேற்கண் குறிப்பறிந்து பார்க்கிற்
பலாமாநற் பாதிரியைப் பார்.
6
கலித்துறை
முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர்
சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும்
பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள்
கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே.
7
வெண்பா
மிக்குப் பெருகியு மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லாவொலி கடல்போல்- மிக்க
இனநல நன்குடையர் ஆயினு மென்று
மனநல மாகவாங் கீழ்.
8
உடைபெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை
அடக்கமில் நெஞ்சத்தி னாடு- நடக்கையின்
ஒள்ளிய னல்லான் மேல்வைத்தல் குரங்கின்கை
கொள்ளி கொடுத்து விடல்.
9
சத்துவம் புத்தி வித்தைச் சதுர்விதார்த் தங்களான
இத்தனை விதமுஞ் செலவ மில்லையே லில்லையாகும்
சத்துவம் புத்தி வித்தைச் சதுர்விதார்த் தங்களான
இத்தனை விதமுஞ் செலவ மெய்திடில் எய்துமன்றே.
10
கதிரவ னிலையேற் கண்ணிற் காண்பன மறையு மாபோல்
நிதிய மொன் றிலையேல் யார்க்கு நீதிமான் ஞானபோதம்
துதிபெறு கீர்த்தி யாண்மைச் சூழ்ச்சி மந்திர விசாரம்
கதிரபி மான மெல்லாந் தன்னிலே மறைந்து போமால்.
11
கலித்துறை
பாலுக்குச் சர்க்கரை யில்லை யென்பார்க்கும் பருக்கை யற்ற
கூழுக்குப் போட வுப்பில்லை யென்பார்க்குங் குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பில்லை யெனபார்க்குங் கனத்த தண்டி
மேலுக்குப் பஞ்சணை யில்லை யென்பார்க்கும் விசனம் ஒன்றே.
12
மேவுமெண் போகம் விளம்பில் பெண்ணாடை வியன் கலன்பாற்
றாவியம் போசனந் தாம்பூலம் வீசு சுகந்தம் அன்பி
னாவெழிற் பாட்டலர் மெல்லணை யாமிவை நன்கமைந்த
வாவிக் கடவுள ரருட்பாழி பெற்ற வரசிடமே.
13
வெண்பா
எண்கோவை மேகலைக் காஞ்சி யிருகோவை
கண்கோள் கலாபமிரு பத்தொன்று- பண்கோள்
பருமம் பதின்மூன்று முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரப் பாற்று.
14
மன்னவன் குணங் கொடிதென வருத்தலு மதற்குத்
துன்னு பைங்கொடி யடுத்த கொம்ப தனையே சூழும்
கன்னி மாதரு மன்னருந் தங்களைக் காத்தே
பன்னு மிங்கிதஞ் செயுமவர் பாற் செய்வர் பரிவு.
15
பாவிக ளகத்தைப் போலும் பல விரதியர்கள் போலும்
ஓவரு சகாயர் போலு முறை முறை சுற்றம் போலும்
மேவுவ ரவரைச் சேரின் மேன்மைய ரேனுமுய்யார்
பூவையு முயலு முன்னோர்ப் பூனையைச் சேர்ந்த வாறே.
16
வேந்தருங் கொடுந்தீயும் வெவ்விடம் பொழி பகுவாய்
பாந்தளுஞ் சலியா தலின் அன்னவன் பக்கல்
போந்து நண்பு கொண் டடவிநீ புரக்குமா றென்னாம்
மோந்திடும் படிக் கடிப்பது மன்னர்தம் முறையே.
17
ஒருவருக் கமுதளித்தா லுண்பனே உலகமாளு
மிருவருக் கமுதளித்தா லிந்திரன் பதவி சேர்வார்
மருவிய பூசை செய்து வந்தவரிளப் பையாற்றில்
திருமட வன்ன தானஞ் சிவாலய மாகுந்தானே.
18
வெண்பா
அருக்கனையுஞ் சோமனையு மைம்மூன்று நாளதனிற்
பெருக்க வரவந் தீண்டிற் பேசுங்கால்- செருக்களத்தின்
மன்னர் மடிவார் மடிவாரே யாமாகில்
அன்னம் அரிதாய் விடும்.
19
பரிதியும் பஞ்சமாகிற் பார்மதி வெள்ள மாகுங்
குரிதியுங் கூச்சலாகுங் கொடும் புதன் காற்ற தாகும்
பெருத்த தோர் வியாழம் வெள்ளிப் பேரகமேற நிற்குங்
கருத்த தோர் சனியுமாகிற் கலகமும் பற்றறாதே .
20
வெண்பா
கல்லாடர் செய்பனுவல் கல்லாடம் நூறுநூல்
வல்லார் சங்கத்தில் வந்தருளிச்- சொல்லாடா
மாமதுரை யீசர் மனமுவந்து கேட்டுமுடித்
தாமசைத் தார்நூறு தரம்.
21
இடுகாட்டு மங்கை யெலும்பிற் புரண்மால்
சுடுகாட்டி லாடுவார் சுட்டி- னொடுகாட்டுஞ்
சம்பந்தா யென்புநின் பாறந்தாக்கிக் கொண்டிலளே
கும்பந்தா னென்னு முலைக் கொம்பு.
22
கலித்துறை
அரியெச்சில் போல வாவெச்சிலு மஞ்சரி யெச்சிலும்
எரியெச்சில் ஏழுமுனி யெச்சிலும் போவேந் திழையாள்
கரியெச்சில் போன்றனள் விக்கிரமச் சோழன் கனைத்த கன்றின்
புரியெச்சில் உண்ட புயல் வண்ணன் எச்சிற் புரந்தரனே.
23
வாக்கு மனமும் உடையான் ஒன்னார் தமணி முடிநீ
ராக்குந் திறமை யிருங் கோளன் வெற்பில் அயனடுக்கம்
போக்கும் புனிதனுங் கந்தனும் மாலும் புரந்தரனும்
நாக்குங் கழுத்துந் தலையும் இல்லாள் பகை நானல்லவே.
24
காயுங் கரடுஞ் சுரமீ தென்றும் காட்டிய கையுஞ் சொன்ன
வாயும் புகை யெழும் பாலையிலே மணிமா மகுடம்
தோயும் புகழ் கச்சிச் சுந்தர பாண்டியன் தோகை வெற்பில்
தாயுந் தமரும் இல்லான் இங்கனே நின்ற தார்குழலே.