நேரு தந்த பொம்மை/சின்னப் பையன்



சின்னப் பையன்


கங்கை, யமுனை, சரஸ்வதி
கலக்கும் இடத்தில் உள்ளது,
எங்கள் நேரு பிறந்ததாம்
இனிய நகரம் அலகாபாத்.

வருவாய் மிகவும் உடையவர்:
வக்கீல் தொழிலில் சிறந்தவர்;
அருமை நேரு தந்தையார்;
அவரின் பெயரே மோதிலால்.

பண்பு மிகுந்த அம்மையார்;
பழகு தற்கே இனியவர்:
அன்பு மிக்க நேருவின்
அன்னை சொருபராணியாம்.

சின்ன வயதில் ஜவஹரைச்
செல்ல மாக அனைவரும்
'நன்னா’ என்றே அழைத்தனர்.
என்ன அர்த்தம் தெரியுமா?

சின்னப் பையன் என்பதை
'நன்னா என்பர் இந்தியில்
சின்னப் பையன் வளர்ந்தனன்;
‘சிறந்த மனிதர்' ஆயினன்!