பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

07:59, 8 ஆகத்து 2019 (UTC)07:59, 8 ஆகத்து 2019 (UTC)07:59, 8 ஆகத்து 2019 (UTC)07:59, 8 ஆகத்து 2019 (UTC)~ அருண்குமார் முனுசாமி (பேச்சு)-~~- ~- வங்க மறுகூலர்ச்சியும், தேசிய எழுச்சியும் . . இந்திய நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தேசிய எழுச்சிக்கும் வங்க நாடே மூத்த பிள்ளைfi:ரகவும் முன்னோடி. யாகவும் திகழ்ந்தது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம்; அதே போன்று தாகூரும் பாரதிக்கு இருபத்தொன்று வயது மூத்த பிள்ளையாக இருந்தார். எனவே பாரதிக்கு முன்னதாகவே தேசியப் போராட்டத்தில் பங்குகொள்ளும் 'வாய்ப்பும் வசதியும் தாகூருக்கிருந்தன. " 1886-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, இருபததைந்து வயது . இளைஞரான தாகூர் " அந்த , மாநாட்டின் தொடக்கத்தில் தாமே இயற்றிய ஒரு தேச பக்திப் பாடலை மேடைமீது பாடினார். இதற்கு முன்பே அவர் தேசியப் பாடல்களையும் எழுதத் தொடங்கிவிட்ட தோடு, திறமை வாய்ந்த இளங்கவிஞர் என்ற பெயரையும் சம்பாதித்துக் கொண்டு விட்டார். 1884-ம் ஆண்டிலேயே அவர் ஆங்கிலேயரிடம் மனுப்போட்டு, சுதந்திரப் பிச்சை கேட்கும் . மிதவாதப் போக்கைக் கண்டித்து எழுதினார். ஆரம்பத்தில் காங்கிரஸ் மகாசபை மிதவாதிகளின் கையிலும், ஜரிகைத் தலைப்பாகைகளின் சட்டசபை மோகத் திலும், ராஜவிசுவாசத்திலும் சிக்கிக் கொண்டிருந்ததைக்