பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்திச் சாதி

76

அத்வைதம்

தென் பாரசீகம் தென்மேற்கு ஆசியா வரையிலும் வளர்கிறது. சீமை அத்தியை இந்தப் பிரதேசங்களிலும், மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளிலும் மிகப் பழைய காலந் தொட்டே பயிர் செய்து வந்திருக்கின்ற னர். இப்படிப் பயிர் செய்து வரும் வகைகள் நூற்றுக்கு மேற்பட்டவை உண்டு. அவற்றுளெல்லாம் மிக உயர்ந் தது ஸ்மர்னா அத்தி. பலவகைச் சீமையத்திகளில் மகரந்தச் சேர்க்கை யில்லாமலே பழம் உண்டா கும். ஆனால் ஸ்மர்னா அத்திக்கு மகரந்தச் சேர்க்கை

சீமையத்தி

இலையும் இரண்டு பூ மஞ்சரிகளும் : 1. அத்தி மஞ்சரி : அகத்தே நீண்ட சூல் தண்டுள்ள பெண் பூக்கள். புறத்தே மகரந் தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி. 2. காட்டு அத்தி மஞ்சரி : மலட்டுப் பெண் பூக்களும் ஆண் பூக்களும். 3. நீண்ட சூல் தண்டுள்ள பெண் பூ. 4. ஆண் பூ. 5. குறுகிய சூல் தண் டுள்ள மலட்டுப் பூ. (காடு) 6. காடான மலட்டுப் பூவி லிருந்து பூச்சி வெளிவருதல். 7. மலட்டுப் பூவின் உறுப்புக்கள் : a சூல் முடி, b. சூல் தண்டுக் குழாய். c. பூச்சி முட்டை , d . பூவின் அண்டக் கரு. 8 பெண் பூச்சி. 9. ஆண் பூச்சி.

இன்றியமையாதது. இதன் அத்தி மஞ்சரியில் பெண் பூக்கள் மட்டும் உண்டு. இவற்றில் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்குக் காட்டத்தி (Caprifig) மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூக்களிலிருந்து வெளிப்படும் அத்திப்பூச்சி இவற்றிற்கு வரவேண்டும். இதற்காக அத்தி மஞ்சரி களுள்ள காட்டத்திக் கிளைகளை நறுக்கிக் கொண்டுவந்து இவற்றின் கிளைகளில் கட்டுவார்கள் (Caprification). இதனால் இந்தக் காட்டத்தியை ஆண் அத்தியென்றும் சொல்வதுண்டு. காட்டத்தியிலிருந்து பூச்சி வெளிவரும் போது அந்த அத்தியின் கண்ணருகே யுள்ள ஆண் பூவிலுண்டாகும் மகரந்தம் அதன்மேற் படியும். அது வெளியே வந்து, நல்ல அத்தி மஞ்சரிக்குள் புகும். அப் போது மகரந்தச் சேர்க்கை யுண்டாகும். அதனால் பழம் பெரிதாகவும் சுவையும் மணமு முள்ளதாகவும் வளரும். நன்றாக வளர்ந்த பழம் 2 அங்குல நீளமும், 1½ அங்குல அகலமும் உள்ளது. அத்தி ஆண்டில் இரண்டு தடவை பழுக்கும்; மூன்று தடவையும் பழுப்பதுண்டு. ஓராண்டு வளர்ந்த அத்திக் கிளையைத் துண்டுகளாக நறுக்கி, 10, 12 அடிக்கு ஒன்றாக நட்டுப் பயிர் செய்வார் கள். அப்படி வளர்ந்த மரம் 2, 3 ஆண்டுகளில் தொடங்கி, 15, 20 ஆண்டுகள் வரை பலன் தரும்.

அத்திப்பூச்சி :ஒரு மிகச் சிறிய குளவி; சால்சிடீ என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பல இனங்களுண்டு. அவை அத்தி, அரசு, ஆல் முதலிய அத்திச்சாதி மரங்களின் பூங்கொத்துக்களில் வளர்பவை. இவற்றில் மிக்க புகழ் பெற்றது உயர்ந்த சீமை யத்திப்பழம் உண்டாவதற்கு இன்றியமையாத ஓர் இனம்; சீமை யத்தியின் வகையாகிய காட்டத்தி மரத்தின் மஞ்சரியில் வளர்வது. அதற்கு பிளாஸ்ட்டோபாகா குரோஸ்ஸோரம் (Blastophaga grossorum) என்று பெயர். இதில் ஆண் பூச்சிக்குச் சிறகில்லை. பெண்ணுக்குச் சிறகு செம்மையாக வளர்ந்திருக்கும். பெண் அத்திப்பூச்சி, அத்தி மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூவின் சூலறைக்குள் முட்டையிடும். முட்டை பொரிந்து புழுவாகிப் பிறகு கூட்டுப் புழுவாகி, அப்பால் அதிலிருந்து குளவி வெளிவரும். முட்டையிடப்பட்ட மலட்டுப்பூக் கரடாகிவிடும். கரட்டிலிருந்து வெளிப்படும் குளவி அத்தி மஞ்சரியிலிருந்து புறத்தே வரும். வருகிற வழியில் ஆண்பூக்களிலிருந்துஉண்டாகும் மகரந்தத்தூள் அதன் உடலில் ஒட்டிக்கொள்ளும். பூச்சி வேறொரு மஞ்சரியில் புகுந்தால், அங்குள்ள பெண் பூக்களில் இந்த மகரந்தத்தூள் சேரும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. சீமை அத்திப்பழங்களில் சில உயர்ந்த வகைகளைப் பயிர் செய்வோர் அந்த அத்தியின் காட்டுவகைக் கிளைகளை மஞ்சரிகளோடு தந்து, அந்த உயர்ந்த மரங்களில் மகரந்தச்சேர்க்கை நிகழும்பொருட்டுக் கட்டுவார்கள். பார்க்க: அத்திச்சாதி, சீமை அத்தி.

அத்வைதம் என்பது வேதாந்த மதங்களுள் ஒன்று. "பிரமம் இரண்டற்ற மூலப் பொருள் ; பலவாகக் காணப்படும் உலகம் பொய்த் தோற்றம்; ஜீவன் பிரமத்தைவிட வேறன்று" என்று அத்வை தம் கூறுகிறது. அத்வைதம் என்ற சொல்லுக்கு இரண்டற்றது என்பது பொருள். ஆசாரிய சங்கரர் இம் மதத்தின் கொள்கைகளைத் தாம் வரைந்த நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். இம்மதம் அவர் இயற்றியதன்று. உபநிஷதங்களில் பலவிடங்களில் அத்வைதம் போதிக்கப்படுகின்றது. முக்கியமாக யாஞ்ஞவல்கியரின் உபதேசங்களில் இதைக் காணலாம். சங்கரருக்கு முன்வந்த கௌடபாதர் அத்வைதக் கொள்கைகளை யுக்திகளைக் கொண்டு நிலைக்கச் செய்தார்.

ஏனைய வேதாந்த மதங்களைப்போல் அத்வைதமும், மூன்று பிரஸ்தானங்களை மூல நூல்களாகக் கருதுகின் றது. அவையாவன : உபநிஷதங்கள், பிரம சூத்திரம், பகவற்கீதை. கௌடபாதர் மாண்டூக்கிய உபநிஷதத் திற்கு வியாக்கியானமாகக் காரிகை யொன்றை இயற்றி யுள்ளார். சங்கரர் முக்கியமான உபநிஷதங்களுக்கும், மற்ற இரண்டு பிரஸ்தானங்களுக்கும் பாஷியம் எழுதி யுள்ளார். அத்வைதத்தைச் சுருக்கமாகவும் தெளிவாக வும் விளக்கி, அவர் வரைந்துள்ள விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ முதலிய தனி நூல்களும் உண்டு. பிருஹதாரணியகம், தைத்திரீயம் முதலிய உபநிஷதங் களுக்குச் சங்கரர் எழுதிய உரைகளுக்கு, அவருடைய சீடரான சுரேசுவரர் 'வார்த்திக'ங்கள் செய்துள்ளார். நைஷ்கர்ம்ய சித்தி என்பது சுரேசுவரருடைய மற்றொரு நூல். சங்கரரின் இன்னொரு சீடரான பதுமபாதர் தம்