பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார்.

அதிபரவளைவு (Hyperbola): கூம்பின் வெட்டு முகங்களில் இவ்வடிவமும் ஒன்று. நிலையான இரு புள்ளிகளிலிருந்து தனது தொலைவுகளின் வேற்றுமை மாறாதவாறு இயங்கும் ஒரு புள்ளியின் நியமப்பாதை என இதை வரையறுக்கலாம். இந்நிலைப் புள்ளிகள்

அதியரவளைவு

அதிபரவளைவின் நாபிகள் (Foci) எனப்படும். இது இரு கிளைகள் கொண்டது. இரு நாபிகளையும் இணைக்கும் கோட்டின் மையப்புள்ளி வடிவத்தின் மையம் எனப்படும். இந்த வரைக்கும் மையத்தின் வழியே இந்த வரைக்கு லம்பமாக வரையப்படும் கோட்டிற்கும், அதிபர வளைவும் சமச்சீராக இருக்கும். நாபிகளை இணைக்கும் கோடு வடிவத்தை வெட்டும் இடங்கள் அதன் முனைகள் எனப்படும். முனைகளினிடையே உள்ள வெட்டுத்துண்டு குறுக்கு அச்சு (Transverse axis) எனப்படும். குறுக்கு அச்சின் நீளம் 2a என்றும், நாபிகளின் தொலைவு 2c என்றும், b2 = c2—a2 என்றும் கொண்டால் 2b என்பது துணை அச்சு (Conjugate axis) எனப்படும். அதிபரவளைவின் மையப் பெயர்வு (Eccentricity) I a. இது ஒன்றைவிட அதிகம்.

அதிபரவளைவின் மையத்தை ஆதியாகவும் (Origin) குறுக்குவெட்டைக் கிடை அச்சாகவும் கொண்டால்.

அதிபரவளைவைக் குறிக்கும் சமன்பாடு

x =a/e x == -- a/e என்ற சமன்பாடுகளால் குறிக்கப்படும் இரு நேர்கோடுகளும் அதிபரவளைவின்மேருக்கள் (Directrices)எனப்படும். வளைவின்மேலுள்ள புள்ளியிலிருந்து ஒரு நாபியின் தொலைவிற்கும் அப்புள்ளியிலிருந்து அதையடுத்துள்ள மேருவுக்கும் உள்ள லம்பத்தொலைவிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி. இது வளைவின் மையப் பெயர்விற்குச் சமம்.

ஒவ்வோர் அதிபரவளைவிற்கும் இரண்டு ஈற்றணுகிக் (Asymptotes) கோடுகள் உண்டு. இவை வளைவை
அனந்தத்தில் தொடுகின்றன. என்ற அதி
பரவளைவின் ஈற்றணுக்கள் ஆகும்.

ஓர் அதிபரவளைவின் ஈற்றணுக்கள் ஒன்றற்கொன்று நேர் குத்தாக இருந்தால்,அந்த அதிபரவளைவு செங்கோண அதிபரவளைவு (Rectangular H.) எனப் படும். இதன் சமன்பாடு x2 -y 2 =a2. இதில் a என்பது அதன் குறுக்கு அச்சு அல்லது துணை அச்சில் பாதி.

செங்கோண அதிபரவளைவின் ஈற்றணுகிகளை அச்சுக்களாகக் கொண்டால் அதன் சமன்பாடு 2xy =a2.

அதிபூரிதம் (Supersaturation): தூசு, அயான் முதலிய துகள்கள் இல்லாத காற்று, பூரித நிலையைவிட அதிகமாகக் குளிர்ந்த பின்னருங்கூட அதிலுள்ள நீராவி நீராகக் குளிராமல் இருக்கலாம். இது ஒரு நிலைப்பற்ற நிலை. காற்றில் சிறிதளவு தூசு முதலியன கலந்தாலும். அதிலுள்ள ஆவி உடனே குளிர்ந்துவிடும். இந்நிலை அதிபூரித நிலை எனப்படும். சிறிதும் அசைவில்லாதவாறு பூரிதக் கரைவொன்றை மெதுவாகக் குளிர்வித்தால், அக்கரைவில் படிகங்கள் தோன்றா. இத்தகைய நிலைப்பற்ற நிலையும் அதிபூரித நிலை எனப்படும்.

அதிர்ச்சி நிகழாதவாறு தூய திரவங்களை அவற்றின் உருகு நிலைக்குப் பல டிகிரி குறைவாகக் குளிர்வித்தாலும் அவை திரவ நிலையிலேயே இருக்கக் காணலாம். மிகைக் குளிர்நிலை எனப்படும். திரவத்தில் சிறிய அதிர்ச்சி நிகழ்ந்தாலும், அது உடனே இறுகி, அதன் வெப்பநிலை அதிகமாகும். இப்போது அது தன் உருகு நிலையை அடையும். காற்றிலுள்ள நீர்த்துளிகள் இத்தகைய நிலையை அடைந்திருக்கும்போது அவற்றின் வழியே விமானமொன்று சென்றால். அதன்மேல் நீர்த்துளிகள் இறுகிப் பனிக்கட்டியாகி, அதற்குத் தொல்லை விளைவிக்கலாம்.

அதிமதுர கவி (14ஆம்.நூ.) திருமலை ராய மன்னன் அவையின் அறுபத்துநாலு தண்டிகைப் புலவர்களின் தலைவன்; காளமேகப் புலவரை யமகண்டம் பாடுவித்தவன்.

அதிமதுரம்: அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைசிரைசா (Glycyrhiza) என்னும் சாதிச் செடியின் வேரும், வேரிலிருந்து எடுக்கும் ஒரு சத்தும் அதிமதுரம் எனப்படும். சாதிப்பெயரின் பொருள் இனிய வேர் என்பது. இந்தச் செடி ஐரோப்பாவின் வெப்பப் பிரதேசங்களில், முக்கியமாக மத்தியதரைக் கடற்கரை நாடுகளில், நெடுகவும், வட அமெரிக்காவில் சிறிதளவும் பயிர் செய்யப்படுகிறது. இது நீல நிறமான பூப் பூக்கும். 2, 3 அடி நீளம் உள்ளதாக வேரை வெட்டியெடுப்பார்கள். -1 அங்குலம் மொத்தமாக இருக்கும். வெளியில் மெதுவாகவும் மடிக்கக்கூடியதாகவும் நாராகவும் இருக்கும். உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு ஒரு சிறப்பான தித்திப்புச் சுவையுண்டு. இதில் திராட்சைச் சர்க்கரை, மாப்பொருள் பிசின், ஆஸ்பராகின், மாலிக்க அமிலம் முதலிய பொருள்களோடு கிளைசிரைசின் என்னும் குளூக்கோசைடும் இருக்கின்றது. வேரை இடித்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துக் கஷாயத்தைச் சுண்டவைத்தால் கருகிறமான அதிமதுரம் கிடைக்கும். இதைக் குச்சுக் குச்சாகத் திரட்டிக் கொள்ளுவார்கள். இதற்கு அதிமதுரப் பால் என்பது பெயர். அதிமதுரம் இருமலுக்கு நல்ல மருந்து. கசப்பு, குமட்டலான மற்ற மருந்துகளின் சுவையை மாற்றவும் இதைக் கலப்பார்கள். நமது நாட்டில் வளரும் குன்றிமணிக் கொடியின் வேரும் அதிமதுரம் எனப்படும். இது ஐரோப்பிய அதிமதுரத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. இதிலும் கிளைசிரைசின் சத்து இருக்கிறது. இதன் இலையிலும் அந்தச் சத்து இருக்கிறது. பார்க்க: குன்றிமணி.

அதியமான்: பார்க்க: அஞ்சி.

அதியன் விண்ணத்தனார் கடைச்சங்க காலப் புலவர். இவர் அதிகன் விண்ணத்தனார் எனவும்