கலைக்களஞ்சியம்/அஞ்சி

அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி எனவும் பெயர் பெறுவான். அதிபர் மரபினனாதலால் அதியமான் என்று பெயர் பெற்றான். கொல்லிக் கூற்றத்திலிருந்த தகடூரில் அரசாண்டான். குதிரை மலைக்குத் தலைவன். கரும்பை வேற்று நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் கொண்டு வந்தவர் இவன் முன்னேரே. இவன் பரணராலும் ஔவையாராலும் புகழ்ந்து பாடப்பெற்றவன். நீண்ட காலம் உயிருடன் இருக்கச் செய்யும் நெல்லிக்கனியைப் பெற்றும் தானுண்ணுது ஔவையாருக்குத் கொடுத்தவன். பெருஞ்சேரலிரும் பொறையுடன் நடந்த போரில் பகைவருடைய வேல் பாய அதன லிறந்தான். ஔவையார் புலம்பி அமுத பாடல் மிகுந்த சோகச்சுடையது. இவன் வமிசம் 13-அம் நூற்றாண்டு வரை இருந்ததாக விடுகாதழகிய பெருமான் சாசனம் ஒன்றில் புலப்படுகிறது என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஞ்சி&oldid=1453690" இலிருந்து மீள்விக்கப்பட்டது