பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர ரகுநாதன் 129 காரியாலயத்தில் திருவாளர் தில்லைத் தாண்டவராயன் தலைமை யில் உருவாகியது...... 3 பறையருக்கும் இங்குதியர் புலையருக்கும் விடுதலை ! பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை ! என்று பாடிக்கொண்டே அருணுேதயப் பொழுதில் நகரை வலம் வரத் தொடங்கியது அந்த ஊர்வலம். கதர்க் குல்லாய், கதர் ஜிப்பா, கதர் பைஜாமா முதலிய தூய வெள்ளை ஆடையலங்காராதிகளோடு, புத்தம் புதிய வாளிகளையும் அகப்பைகளையும், விளக்கு மாறுகளையும் ஏந்திய திருக்கரங் களோடு, சில காங்கிரஸ் ஊழியர்கள் அணிவகுத்துச் சென்ருர்கள். வீறு நடைபோட்டுச் செல்லும் அந்த ஊழியர்களுக்கு முன்னல் வெற்றி நடை போட்டுச் சென்றுகொண்டிருந்தார் சேர்மன் பிள்ளையவர்கள். அந்தக் கர்மயோக சாதகர்களின் அணி வகுப் புக்கு இருமருங்கிலும் போலீஸ் ஜவான்கள் சிலர் பாதுகாப்பாக நடந்து வந்தனர். அந்த ஊர்வலத்துக்குப் பின்னல், சுமார் ஐம்பது கஜ தூரத்துக்கு அப்பால், எழுந்திருந்தாகிச் செல்லும் உற்சவ மூர்த்தத்துக்குப் பின்னல் தேவாரம் பாடிவரும் திருக் கோஷ்டியைப் போல், ஆயுதம் தாங்கிய போலீஸாரைத் தாங்கிய லாரி ஒன்று மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. ஊர்வலம் முதல் பெருவீதியைக் கடந்து மூலை திரும்பியது, . எதிரே நகரசுத்தித் தொழிலாளர்களின் ஊர்வலம் கட்ட விழ்த்துவிட்ட அசுர சக்தியைப்போல் உருண்டு திரண்டு அலை மோதிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. 'மகாத்மா காந்திக்கு-ஜே!' என்று கோrதித்தது தில்லைத் தாண்டவராயரின் ஊர்வலம். உழைப்பவன் சோற்றைப் பறிக்காதே!' என்று எதிரொலி தந்தது நகர சுத்தித் தொழிலாளரின் ஊர்வலம். சிறிது நேரத்தில் இரு ஊர்வலங்களும் எதிரும் புதிருமாக, இரு பெரும்படைகள்போல் நெருங்கின : ஒன்றையொன்று வழி மறித்தன ; இரண்டும் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. - . . . . . 'வழி விடுகிறீர்களா, இல்லையா? என்று கர்ஜனை செய்தார் தேசபக்த ராஜசிம்ம தில்லைத் தாண்டவராயர். &rrTamilBOT (பேச்சு)9