பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவாசகம் - சில சிந்தனைகள் என்பது பிரபஞ்சத்தில் காணப்படும் அடிப்படையான வையாகிய சிவப்பு, நீலம் உள்ளிட்ட ஐந்து நிறங்களைக் குறிப்ப தாகும். இந்த ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனிப் பண்பு உண்டு என்பதும், இவை மக்களிடத்து எவ்வகை உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன என்பதும் பற்றி இன்றைய விஞ்ஞான உலகம் விரிவாகப் பேசுகின்றது. இவ்வைந்து நிறங்களில் சிவப்பும், நீலமும் மிக இன்றியமையாதவை ஆகும். ஆதலால், இறைவனைச் “செம்மேனி அம்மான்’ (திருமுறை :4-12-9) என்றும் இறைவியை நீலமேனி வாலிழை (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து) என்றும் நம் முன்னோர் கூறிப்போயினர். ஓர் ஐந்து உடையாய் என்பதிலுள்ள ஓர் என்ற சொல் கல்ப்படம் இல்லாத தனித் தன்மை வாய்ந்தது என்ற பொருளைத் தருவதாகும். --TamilBOT (பேச்சு) 08:46, 26 பெப்ரவரி 2016 (UTC) விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் (49–50) புண்ணியம் செய்த பயனை மறு உலகில் சென்று அனுபவிக்கின்றவர்கள் விண்ணோர் என்ப்படுவர். தமிழர் களைப் பொறுத்தமட்டில் தம்மைவிட உயர்வாக என்றுமே அந்த விண்ணோரைக் கருதியதில்லை. தேவர் அனையர் கயவர் (குறள்-1073) என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகில் வாழ்பவர்கள் என்னென்ன குறை நிறைகளோடு இந்தப் பூத உடம்புடன் வாழ்கிறார்களோ, அதே குறை நிறைகளுடன் சூக்கும உடம்புடன் வாழ்பவர்களே தேவர்கள். ஆகவே அடிகளார் விண்ணோர்கள் என்ற காரணத்தால் ஏதோ இறைவனை அறிந்துவிட்டவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என்பதைக் குறிப்பதற்காக, மறைந்திருந்தாய் என்று கூறுகிறார். ●●峰●畿事争毒事é事●........வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை r அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்