பக்கம்:நற்றிணை 1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

நற்றிணை தெளிவுரை


யையும் நமக்கு உணர்த்துவதாக விளங்குகின்றது. 'அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல, எனவுரைத்துள்ள உவமைத்திறம் பெரிதும் நுட்பமுடையதாதலை அறிந்து இன்புறுக; பண்டைத் தமிழ் மருத்துவத்தைப் பற்றியும் இதனால் அறியலாம்.

நற்றமனார் 133

நற்றாமனார் என்னும் பெயரே நற்றமனார் எனத் திரிந்ததெனக் கொள்ளலாம். பிரிவுப் பெருவெம்மையிடையே தோழியுரைக்கும் ஆறுதல் உரைகள், 'கொல்லன் உலையிற் பழுக்கக் காய்ச்சிய இரும்பினிடத்தே சிறிது நீர் தெளித்து அதன் சூட்டைத் தணிப்பது போலாகு' மென்று தலைவி உரைப்பதாக இவர் கூறுவது மிக்க நயம் உடையதாகும்.

நெய்தற்றத்தனார் 49

'தத்தன்' என்னும் பெயரினருள் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவராதலின் இப் பெயரைப் பெற்றனர் போலும்! இவர் பாடிய மற்றொரு செய்யுள் அகநானூற்று 243ஆவது செய்யுள் ஆகும். தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்ததாக அமைந்த இச் செய்யுள், இவரது நுட்பமான புலமையைக் காட்டுவதாகும். 'அவனூர்க்குத் தலைவி சென்று அறிந்தாலென்ன?' எனத் தோழி கேட்டாள் எனினும், அவள் அதற்கு இசையாள் என்பதையும் அத் தோழி அறிவாள், அஃது பண்பன்று ஆயினமையின். இதனால் தலைவியின் காதற்பெருக்கத்தைத் தோழி உணர்ந்து கொண்டாளாகத் தலைவியும் இரவுக்குறியிடைத் தலைவனைக் காணற்கு இசைவாள் என்பதாம்.

நொச்சி நியமங்கிழார் 17

'நியமம்' ஓர் ஊர்; நொச்சிவேலி சூழ்ந்ததாயிருந்தமையின், 'நொச்சி நியமம்' எனப் பெற்றது; ' நெகமம்' என இக்காலத்தும் கொங்குப் பகுதியில் ஓர் ஊர் வழங்கிவருகின்றது. வேளாண் குடியினர் இவர். இவர் செய்தன் அகம்.52; நற்.17, 208, 209; புறம், 293 ஆகிய செய்யுட்கள். தலைமகள் அன்னையிடம் தான் தன் களவுறவைச்சொல்ல முற்பட்டு மறைத்துக்கொண்ட தன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/417&oldid=1731074" இலிருந்து மீள்விக்கப்பட்டது