பக்கம்:நாடகக் கலை 2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

மற்றும் பல நாடகங்கள்

பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வீர பாண்டியக் கட்டபொம்மன், திரு. எம். ஜி. ராமச்சந்திரனின் இன்பக்கனவு, அட்வகேட் அமரன், நேஷனல் தியேட்டர்சாரின் துறையூர் மூர்த்தி எழுதிய இலங்கேஸ்வரன், உபகுப்தர், எம். எஸ். திரௌபதி நாடக மன்றத்தாரின் நாராயணசாமி எழுதிய திலகம், வேல் வன் எழுதிய கவிதா ராஜ்யம் முதலிய நாடகங்கள் சிறந்த நாடகங்களாக ரசிகர்களால் போற்றப்படுகின்றன.

ஓரங்க நாடகங்கள்

ஓரங்க நாடகங்கள் வானொலியில் நடைபெறுகின்றனவே தவிர இன்னும் நாடக மேடையில் உருவாகவில்லை. தமிழ்ச் செல்வம், ஔவையார் போன்ற நாடகங்கள் ஓரங்க நாடகங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். இந்த நாடகங்களில் சில பகுதிகளைப் பல சமயங்களில் நாங்கள் நடத்தியிருக்கிறோம். நல்ல ஓரங்க நாடகங்கள் பலவற்றைத் திருவாளர்கள் சி. ஆர். மயிலேறு, வி. சி. கோபாலரத்தினம் சு. குருசாமி பெரியசாமித் தூரன், சிதம்பர சுப்பிரமணியம், கோமதி சுவாமிநாதன் போன்ற எழுத்தாள நண்பர்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அவைகளில் பல நாடகங்கள் இன்னும் மேடையில் அரங்கேறவில்லை.

குழந்தைகளுக்கென்று சிறந்த நாடகம் எதுவும் இதுவரை நடிக்கப் பெறவில்லை.

அந்த நாளில் முழுதும் பாடல்களாக நாடகங்கள் இருந்த காலம் போய்விட்டது. சமுதாய நாடகங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/67&oldid=1540644" இலிருந்து மீள்விக்கப்பட்டது