பக்கம் பேச்சு:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/58

முப்பத்திரண்டு அறங்களும் விளக்கமும்

தொகு

முப்பத்திரண்டு அறங்கள் பற்றிய பட்டியல் இது. இலக்கிய நூல்களுக்கிடையே இந்தப் பட்டியலில் சிறு, சிறு மாறுபாடுகளும் காணப்படுகின்றன.

  1. ஆதுலர்க்குச் சாலை (ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களும் தங்கி வாழ்வதற்கு விடுதி அமைத்தல்)
  2. ஓதுவார்க்கு உணவு (கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்தல்)
  3. அறுசமயத்தோர்க்கு உண்டி (சைவம், வைணம், சாக்தம், கௌமாரம் , காணபத்தியம், சௌரம் என்னும் அறுவகை சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவிடுதல்)
  4. பசுவிற்கு வாயுரை (பசுவிற்கு உணவு)
  5. சிறைச் சோறு (சிறைக் கைதிகளுக்கு உணவு)
  6. ஐயம் (இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல், இயன்ற உதவி செய்தல்)
  7. தின்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் இனிப்பு வகை உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல்)
  8. அறவைச் சோறு (ஆதரவற்றோருக்கு உணவளித்தல்)
  9. மகப்பெறுவித்தல் (பெண்களின் பிரசவ காலத்தில் உடனிருந்து உதவுதல்)
  10. மகவு வளர்த்தல் (குழந்தைகளைப் பராமரித்து அவர்களை வளர்க்க உதவுதல்)
  11. மகப்பால் வார்த்தல் (தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும், உணவுக்கு வழியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் பாலளித்தல்)
  12. அறவைப் பிணஞ்சுடல் (ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்டோரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்தல்)
  13. அறவைத் தூரியம் (ஆதரவற்றோர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்)
  14. சுண்ணம் (தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்)
  15. நோய் மருந்து (நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்)
  16. வண்ணார் (ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள், பிணியாளர்களின் துணி துவைக்க உதவுதல்)
  17. நாவிதர் (ஏழை எளியோருக்கு தலை முடி திருத்துதல், முகச்சவரம் செய்ய உதவுதல்)
  18. கண்ணாடி (ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்திச் சரி செய்து கொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்)
  19. காதோலை (பெண்கள் காதணி இல்லாது இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்)
  20. கண்மருந்து (பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக் கொள்ள கண்மை அளித்தல்)
  21. தலைக்கு எண்ணெய் (எண்ணெய் பூசாது காய்ந்த தலைகளோடு இருக்கும் ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும் தலைக்கு எண்ணெய் வாங்கித் தந்து உதவுதல்)
  22. பெண் போகம் (தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்துத் தந்து, அவர்களது காம நோய் தணிக்க உதவுதல்)
  23. பிறர் துயர் தீர்த்தல் (காயமோ, நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்து உதவுதல்)
  24. தண்ணீர்ப் பந்தல் (வெயிலில் வாடி, தாகத்தால் தவிப்பவர்களுக்குத் தண்ணீர் அளித்து உதவுதல்)
  25. மடம் (வழிப்போக்கர்கள், வறியோர்கள் தங்க விடுதி அமைத்தல்)
  26. தடம் (வழிப்போக்கர்கள், வறியோர்கள் நீர் அருந்தி இளைப்பாறக் குளம் தோண்டுதல், அவற்றைப் பராமரித்தல்)
  27. சோலை (நிழல் தரும் மரங்கள், சோலைகள் அமைத்து, பயணம் செய்யும் மக்கள் தங்கி இளைப்பாற்றிச் செல்ல உதவுதல்)
  28. ஆவுறுஞ்சு தறி (பசுக்கள் மேயும் இடங்களிலும், பசுக் கொட்டில்களிலும் அவை தங்கள் உடலைத் தேய்த்துக் கொள்ள உராய்ந்து கொள்ளும் கல் தூண்களை நிறுவுதல்)
  29. ஏறு விடுத்தல் (பசுக்களைச் சினைப்படுத்த, தரமான காளைகளைக் கொடுத்து உதவுதல்)
  30. விலங்கிற்கு உணவு (பல்வேறு விலங்கினங்களும் பசியாற உணவளித்தல்)
  31. விலை கொடுத்து உயிர் காத்தல் (கொலை செய்யப்படுவதற்காகவும், பலியிடப்படுவதற்காகவும் அழைத்துச் செல்லப்படும் உயிர்களை விலைக்கு வாங்கி, அவற்றை இறுதி வரை பாதுகாத்தல்)
  32. கன்னிகா தானம் (ஏழைப் பெண்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் திருமணம் நடக்க உதவுதல்; திருமண வயது நெருங்கியும், திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்குத் திருமணம் செய்து வைத்து உதவுதல்)
    காண்க: 32 _அறங்கள்
    - TI Buhari (பேச்சு) 3:05, 21 ஆகத்து 2024 (UTC)
Return to "இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/58" page.