பக்கம் பேச்சு:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/433

ஐந்தாம் பாரம் தொகு

ஐந்தாம் பாரம்  : அக்காலத்தைய பத்தாம் வகுப்பு.

அக்காலத்தைய படிப்பு : முதலாம் பாரம் : இக்காலத்திய ஆறாம் வகுப்பு
ஐந்தாம் பாரம் : இக்காலத்திய பத்தாம் வகுப்பு
ஆறாம் பாரம் : இக்காலத்திய +1
Intermediate [கல்லூரியில் படித்த ஒரு வருடப் படிப்பு] : இக்காலத்திய +2

பிறபாடு - 1975 வரையில் :
பதினொன்றாம் வகுப்பு [SSLC : Secondary School Leaving Certificate) : இக்காலத்திய +1
PUC [Pre-University Course-கல்லூரியில் படித்த ஒரு வருடப் படிப்பு] : இக்காலத்திய +2

எடுத்துக்காட்டு  :
(1) அவர் தமது ஐந்தாம் வயதில் அங்கு படிக்கச் சேர்ந்தாக ஆகிறது. இது சரியென்று தோன்றவில்லை. ஐந்தாம் பாரம் வரை அங்கு படித்ததாக ஏற்படுவதால் அவர் மணமாகும் வரையிலோ அல்லது அதன் பின்னருங் கூடவோ படித்திருக்க வேண்டும். - பாரதித் தமிழ்

(2) ஐந்தாம் பாரம் வரை படித்து விட்டு அங்கே மரைக்காயர் சாயபுவின் ஜவுளி வியாபாரத்திற்கு உதவியாக இருந்தான். அவர் வடக்கு தேசங்கள் எல்லாம் போகிறவர். கூடவே கூட்டிக் கொண்டு போவார். அவர் பேசும் உருதும், வடநாட்டில் பேசும் இந்தியும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது. - அப்பாவின் மொய் நோட்டு

(3) கிராமங்களில், எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களை பெரிய பத்து படித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் அது. ஏனெனில், பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு என்ற ரீதியில் கணக்கிடப்படாத காலம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு முதல் பாரம் (ஃபர்ஸ்ட் ஃபார்ம்) இரண்டாம் பாரம் (செகண்ட் ஃபார்ம்) என்ற தன்மையில் கணக்கிடப்பட்டிருந்தது. அப்படிப் பார்க்கையில் 'ஐந்தாம் பாரம் (பிஃப்த் ஃபார்ம்) என்பது பத்தாவது வகுப்பு ஆகிறது. - நிலைபெற்ற நினைவுகள்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:15, 20 ஆகத்து 2021 (UTC)Reply

Return to "நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/433" page.