பஞ்சாக்கரத்திருப்பதிகம்
திருஞானசம்பந்தர்
மூன்றாந்திருமுறை
பண்: காந்தாரம்
(அஞ்செழுத்துண்மை)
தொகுபாடல்: 01 (துஞ்சலுந்)
தொகு- துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
- நெஞ்சக நைந்து நினைமி னாடோறும்
- வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
- றஞ்ச வுதைத்தன வஞ்செ ழுத்துமே. (01)
பாடல்: 02 (மந்திர)
தொகு- மந்திர நான்மறை யாகி வானவர்
- சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வன
- செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
- கந்தியுண் மந்திர மஞ்செழுத்துமே. (02)
பாடல்: 03 (ஊனில்)
தொகு- ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
- ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
- தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
- ஆன கெடுப்பன வஞ்செழுத் துமே. (03)
பாடல்: 04 (நல்லவர்)
தொகு- நல்லவர் தீயரெ னாது நச்சினர்
- செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
- கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
- தல்லல் கெடுப்பன வஞ்செ ழுத்துமே. (04)
பாடல்: 05 (கொங்கலர்)
தொகு- கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
- தங்குள பூதமு மஞ்ச வைம்பொழில்
- தங்கர வின்பட மஞ்சுந் தம்முடை
- அங்கையி லைவிர லஞ்செழுத்துமே. (05)
பாடல்: 06 (தும்மல்)
தொகு- தும்மலிரும றொடர்ந்த போழ்தினும்
- வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
- இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
- அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே. (06)
பாடல்: 07 (வீடுபிறப்பை)
தொகு- வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
- பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
- மாடு கொடுப்பன மன்னு மாநடம்
- ஆடி யுகப்பன வஞ்செ ழுத்துமே. (07)
பாடல்: 08 (வண்டமர்)
தொகு- வண்டம ரோதி மடந்தை பேணின
- பண்டை யிராவணன் பாடி யுய்ந்தன
- தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
- கண்ட மளிப்பன வஞ்செழுத்துமே. (08)
பாடல்: 09 (கார்வணன்)
தொகு- கார்வண னான்முகன் காணுதற் கொணாச்
- சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
- பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
- கார்வண மாவன வஞ்செ ழுத்துமே. (09)
பாடல்: 10 (புத்தர்)
தொகு- புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
- சித்தத் தவர்க டெளிந்து தேறின
- வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
- கத்திர மாவன வஞ்செ ழுத்துமே. (10)
பாடல்: 11 (நற்றமிழ்)
தொகு- நற்றமிழ் ஞானசம் பந்த னான்மறை
- கற்றவன் காழியர் மன்ன னுன்னிய
- அற்றமின் மாலையீ ரைந்து மஞ்செழுத்
- துற்றன வல்லவ ரும்ப ராவரே. (11)
திருஞானசம்பந்தர் பாடிய பஞ்சாக்கரத்திருப்பதிகம் முடிந்தது