பட்டினத்துப் பிள்ளையார் தனிப்பாடல்

பட்டினத்துப் பிள்ளையார்
தனிப்பாடல்
பக்கம் 75
***
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
கவட்டுத்தொன் மரத்திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே
ஆப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்குரங்கு போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. (1)
நல்லதைப் பற்றி அறியாத உயர்ந்த (ஏளனக் குறிப்பு) மனிதனிடம் நாடிப் போய் அவனைப்பற்றி நாக்கு பிளந்துபோகும்படி பொய்யைச் சொல்கிறீர்கள்
பூமி பிளக்க எழுந்திருக்கின்ற கறையான் புற்றிலிருந்து 'பொல பொல' என எழுகின்ற ஈசல் போலப் பிள்ளைகளைப் பெறுகிறீர்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்றும் வழி உங்களுக்குத் தெரியவில்லை.
தச்சன் அறுப்பதற்குப் பிளவில் வைத்திருக்கும் ஆப்பை அதன் பிளவில் தன் வாலை விட்டுக்கொண்டு பிடுங்கிய குரங்கு(வால் மாட்டிக்கொண்டு திண்டாடுவது போல) வாழ்க்கைப் பந்தத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகின்றீர்கள்.
(இதற்கு யார் பொறுப்பு? நீங்கள்-தானே! )
(பற்றிலிருந்து விடுபடுங்கள்)