பயனர்:தமிழ்க்குரிசில்/wsguide

1

இந்திய மொழிச் சமூகத்திற்கான விக்கிமூலக் கையேடு


2


3

முன்னுரை

இணையத்தின் ஊடாக இந்திய மொழிகளில் அறிவு சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல CIS நிறுவனம் உதவும். CIS-A2K என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, கன்னடம், கொங்கணி, மராட்டி, ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழி விக்கிமீடிய சமூகங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். அத்துடன் பஞ்சாபி விக்கிமூலத் திட்டத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறோம். மேற்கூறிய சமூகங்களுடன் இணைந்து செயலாற்றிய போது, இச்சமூகங்கள் அனைத்தும் சந்தித்து வருகிற ஒத்த சிக்கல்களை கண்டறிந்தோம். எனவே, "இந்திய மொழிச் சமூகத்தினருக்கான விக்கிமூலக் கையேட்டினை" உருவாக்க முடிவு செய்தோம்.

முதற்கட்டமாக, இந்திய மொழிகளிலுள்ள விக்கிமூலத் திட்டங்களின் நிலவரத்தை குறித்துக் கொண்டோம். பின்னர், இந்திய மொழிகளில் பங்களிக்கின்ற விக்கிமீடியர்களை அணுகி, விக்கிமூலத் திட்டத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களை குறித்து பேசினோம். இக்கையேட்டின் வரைவை கொடுத்து கருத்துக்களை கேட்டோம். இக்கையேட்டினை வெளியிட்ட பின்னரே, நம்முடைய பணி தொடங்கும். இச்சமூகங்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், அதன் மூலம் விக்கிமூலத் திட்டங்களை வளர்த்தெடுக்கவும் இச்சமூகங்களுடன் செயல்படுவோம்.


4

அறிமுகம்

பழைய நூல்களை மின்மயமாக்கவும், இணையத்தில் இலவசமாக கொண்டு சேர்க்கவும் ப்ராஜெக்ட் குட்டென்பெர்கு[1] என்ற திட்டம் தன்னார்வலர்களால் 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுவெளியில் இருந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் மின்னூல் வடிவம் பெற்றன. அதே நோக்குடன் செயல்படும் விக்கிமூலத் திட்டத்திற்கு 'ப்ராஜெக்ட் சோர்ஸ்பெர்க்' என்ற பெயரே முதலில் பரிந்துரைக்கப்பட்டதை நினைவு கூர்வோம். விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றாக காட்டப்பட்ட இத்தகைய மூல உரைகளின் எண்ணிக்கை காலம் செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கியது. 2003ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட விக்கிமூலத்தில் 2005 மே 18ஆம் தேதியன்று 20,000 உரைத் தொகுப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன[2]. உலகமெங்கும் அணுகக் கூடிய இலவச இணைய நூலகமாக விக்கிமூலத் திட்டம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதைய நிலவரத்தை அறிய, இவ்விணைப்பை[3] பார்க்க.


காப்புரிமையைப் பற்றி அறிதல்


காப்புரிமை நிலையை கண்டறிதல்


பதிவேற்றல்


அட்டவணைப்படுத்தல்


எழுத்துணரி வழியாக உரையை எடுத்தல்


உரையை மெய்ப்புப்பார்த்தல்


மூல ஆக்கத்தைப் போல பக்க ஒருங்கமைவு செய்தல்


விக்கித்தரவுடன் இணைத்தல்

விக்கிமூலத்திலுள்ள அனைத்து உள்ளடக்கங்களும் காப்புரிமையற்றவை. இதனால் எந்தவித காப்புரிமைச் சிக்கலும் இன்றி, இவற்றை நகலெடுக்கவும், மற்றவருக்கு வழங்கவும், உள்ளடக்கத்தை திருத்தவும் முடியும்[4]. பொதுவெளியில் கிடைக்கும் உள்ளடக்கத்துக்கும் விக்கிமூலம் போன்ற தளங்களிலுள்ள உள்ளடக்கத்துக்கும் வேறுபாடு உண்டு. பொதுவெளியில் ஒருவர் தன் ஆக்கத்தை வெளியிட்டுவிட்டால், அவர் அதற்கு காப்புரிமை கோர முடியாது. ஆனால், விக்கிமூலம் போன்ற திறந்த மூல தளங்களில் எவ்வகை உரிமத்துடன் ஆக்கம் பதிவேற்றப்படுகிறதோ, அதே உரிமத்துடன் தான் அதை பதிவிறக்குவோரும், நகலெடுப்போரும் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆசிரியர் ஒருவர் தன் ஆக்கத்தை இலவச உரிமத்துடன் விக்கிமூலத்துக்கு தருகிறார். ஆக்கத்தை பயன்படுத்தும் போது தன் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என உரிமத்தில் குறிப்பிடுகிறார் என்றால், அவ்வாக்கத்தை பயன்படுத்துவோர், அவரின் ஆக்கம் என்று குறிப்பிட்டே பயன்படுத்த வேண்டும். [5]

[1] https://www.gutenberg.org/ [2] See ‘Wikisource: What is Wikisource?’ https://en.wikisource.org/wiki/ Wikisource:What_is_Wikisource%3F [3] https://tools.wmflabs.org/phetools/statistics.php?diff=0 [4] https://en.wikipedia.org/wiki/Free_content [5] https://en.wikipedia.org/wiki/Public_domain


5

காப்புரிமை

காப்புரிமை என்ற சொல்லின் பொருள் என்ன? காப்புரிமை என்றால் என்ன? ஒரு படைப்பை வெளியிடுபவருக்கு அந்த படைப்பின் மீதுள்ள சட்டப்படியான உரிமைகளை காப்புரிமை என்கிறோம். இலக்கியம், இசை, கலை போன்ற துறைகளில் வெளியிடப்படும் படைப்புகளுக்கும் காப்புரிமை உண்டு. படைப்பின் தன்மையை பொருத்து, அதன் மீதான காப்புரிமைகள் மாறுபடும்[6]. படைப்புக்கு காப்புரிமை பெறப்பட்டால் படைப்பின் மீதான வணிக உரிமையும், தார்மீக உரிமையும் ஆசிரியருக்கு உறுதிப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஆசிரியரின் அனுமதியின்றி அவரது படைப்பின் பகுதியை மற்றொரு தளத்தில் பயன்படுத்துவதை ஆசிரியர் தடுக்க காப்புரிமை உதவும்.[7] அந்த படைப்பை தன் புனைபெயரிலோ, பெயரின்றியோ வெளியிடும் உரிமையும் ஆசிரியருக்கு கிடைக்கும்.[8]


[6] Understanding Copyright and Related Rights, World Intellectual Property Organization, http://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_909_2016.pdf [7] Copyrights as an Economic Right, Japanese Society for Rights of Authors, Composers and Publishers, http://www.jasrac.or.jp/ejhp/copyright/property. html [8] Understanding Copyright and Related Rights, World Intellectual Property Organization, http://www.wipo.int/edocs/pubdocs/en/wipo_pub_909_2016.pdf


6

சுருக்கம்

சொல் | விளக்கம்

காப்புரிமை - படைப்பாசிரியர் தன் விருப்பத்திற்கு ஏற்ப தன் படைப்பை மொழிபெயர்க்கவும், மறுபதிப்பு செய்யவும் வழங்கப்படும் உரிமைகளின் தொகுப்பே காப்புரிமை எனப்படுகிறது

கூட்டாக்கப் படைப்பு - இருவரோ, அவர்களுடன் பலரோ இணைந்து உருவாக்கும் படைப்பு.

இந்திய காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்ட படைப்புகள் - * இலக்கிய, நாடக, இசைத் தொகுப்புகள், கலைப் படைப்புகள் ஆகியவற்றின் மூல பிரதிகள்; * திரைப்படங்கள் ; * ஒலித் தொகுப்புகள்

கலை வேலைப்பாடு - • ஓவியம், சிற்பம், கோட்டோவியம், புடைப்புச் சிற்பம், எந்த வித கலை நுட்பமும் இல்லாத புகைப்படம்;

• கட்டமைப்புகளை கொன்ட எந்தவொரு படைப்பும்; • மற்ற எல்லா வித கலைப்படைப்புகளும்

இசைப் படைப்பு - பேச்சே, செயல், சைகை போன்ற எதுவும் இன்றி, இசை மட்டுமே பதிவாகி இருந்தால் அது இசைப்படைப்பே. காப்புரிமையைப் பெற இசைப் படைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


7

சொல் | விளக்கம்

ஒலிப்பதிவு - பதிவு செய்யப்படும் ஒலி காப்புரிமைக்கு ஏற்புடையதே. அது எந்த கருவியிலும், எந்தவொரு முறைப்படியும் பதிவாகி இருக்கலாம்.

திரைப்படங்கள் - ஒலியும், ஒளியும் இணைந்தவாறு தயாரிக்கப்படும் எந்தவொரு விழியமும்

அரசுப் படைப்பு - அரசு, அரசுத் துறை, நீதிமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றால் வெளியிடப்படும் அனைத்தும்

இந்தியப் படைப்பு - * இந்தியர் ஒருவரால் உருவாக்கப்படும் கலை, இலக்கிய, நாடகப் படைப்பு; • முதன்முதலில் இந்தியாவில் வெளியாகும் படைப்பு; • வெளியிடப்படாத படைப்பாக இருப்பின், அந்த படைப்பின் ஆசிரியர் இந்தியர் எனில் அந்த படைப்பு


8


காப்புரிமை நிலையை அறிதல்

இலக்கிய உரை, படம், காணொளி, ஒலி என எல்லா வகை படைப்புகளையும் விக்கிமீடிய பொதுவகத்தில் ஏற்றலாம். படைப்பை ஏற்றும் முன் படைப்பின் காப்புரிமையை நிலையை அறிவது அவசியம். படைப்பு வெளியான நாட்டிலும், கோப்பாக ஏற்றப்படவுள்ள சர்வர் கணினியைக் கொண்ட நாட்டிலும் காப்புரிமைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, படைப்புக்கு பொது உரிமம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் வெளியாகியுள்ள கோப்புகளும் படைப்புகளும்

ஏற்றப்படவுள்ள படைப்பு இந்திய சட்ட விதிகளின் படி பொது உரிமத்திற்கு உட்பட்டதா என அறிய, இந்திய காப்புரிமைச் சட்டம் (1957) படித்தறிய வேண்டும். அதன் சுருக்கம் கீழ் வருமாறு “படைப்பாசிரியர் பெயர் குறிப்பிடப்படாத படைப்புகள், நிழற்படங்கள், திரைப்படக் கோப்புகள், ஒலிப்பதிவுகள், அரசு ஆவணங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை அவை வெளியான நாளில் (அல்லது பதிப்பிக்கப்பட்ட நாளில்) இருந்து சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு பொது உரிமத்தைப் பெறுகின்றன. படைப்பாசிரியர் இறந்திருப்பின், அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு படைப்பானது பொது உரிமத்தைப் பெறும். 1941ஆம் ஆண்டுக்கு முன்பு இறந்த படைப்பாசிரியரின் படைப்புகள், அவர் இறந்த 50 ஆண்டுகளிலேயே பொது உரிமத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அரசுப் பதிவேடு, சட்டதிட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்பு, அரசின் தீர்வறிக்கை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் பொது உரிமத்திற்கு ஏற்றவை. குறிப்பிட்ட அரசு ஆவணத்தை தொடர்புடைய அரசோ அரசு நிறுவனமோ பொது வெளியில் பயன்படுத்த தடை விதித்தால் மட்டுமே, அந்த ஆவணம் பொது வெளியில் வராது.”


பக்கம் 9,10

அமெரிக்காவில் காப்புரிமை நிலை

இப்படைப்பு அமெரிக்காவில் பொது உரிமத்தைப் பெற்றதா என அறிய கீழ்க்கண்ட தகவல்களைப் பெற வேண்டும்.

  • அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் 1923ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதா, அல்லது, அத்தேதிக்கு முன்பே வெளியானதா
  • இந்தியாவில் முதலில் பதிப்பாகி, 30 நாட்களுக்குப் பின்னரே அமெரிக்காவில் பதிப்பானதா
  • 1989ஆம் ஆண்டு மார்ச்சு ஒன்றாம் தேதிக்கு முன்பே காப்புரிமை பெறாமல் வெளியானதா அல்லது 1964 ஆண்டுக்கு முன்பு வரை காப்புரிமை புதுப்பிக்கப்படாமல் இருந்ததா, அல்லது, உருகுவே வட்டமேசை ஒப்பந்தச் சட்டம்[4] இயற்றப்பட்டு இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்ட தேதிக்கு முந்தைய தேதியில் வெளியானதா. (ஒப்பந்தம் ஏற்கப்பட்ட தேதி : ஜனவரி 1 , 1996)

எடுத்துக்காட்டுகள்:

ஆசிரியர் இறந்த வருடம் படைப்பு பதிப்பான வருடம் உரிமம் பொதுவகத்திற்கு ஏற்றதா
<1918 <1918 {{PDold-100-1923}} ஆம்
<1923 <1923 {{PDold-80-1923}} ஆம்
<1923 1923-1940 {{PD-IndiaURAA}} ஆம்
<1923 1941-1958 {{PD-India}} இல்லை
1923 - 1940 <1923 {{PDold-70-1923}} ஆம்
1923 - 1940 1923 - 1940 {{PD-IndiaURAA}} ஆம்
1923 - 1940 1941 - 1958 {{PD-India}} இல்லை
1941 - 1958 <1923 {{PD-1923}}, {{PD-India}} ஆம்
1941 - 1958 1923 - 1940 {{PD-India}} இல்லை
1941 - 1958 1941 - 1958 {{PD-India}} இல்லை

[10] https://en.wikipedia.org/wiki/Uruguay_Round_Agreements_Act உரிமங்கள்: {{PD-old-100-1923}}[11] , {{PD-old-80-1923}}[12] , {{PD-IndiaURAA}}[13] , {{PD-India}}[14] , {{PD-old-70-1923}}[15] , {{PD-1923}}[16] ,{{PD-US}}[17]

காப்புரிமையை பற்றி மேலும் அறிய, கீழுள்ள இணைப்பைக் காணக். http://copyright.gov.in/documents/copyrightrules1957.pdf


[11] https://commons.wikimedia.org/wiki/Template:PD-old-100-1923 [12] https://commons.wikimedia.org/wiki/Template:PD-old-80-1923 [13] https://commons.wikimedia.org/wiki/Template:PD-India-URAA [14] https://en.wikipedia.org/wiki/Template:PD-India [15] https://commons.wikimedia.org/wiki/Template:PD-old-70-1923 [16] https://commons.wikimedia.org/wiki/Template:PD-1923 [17] https://commons.wikimedia.org/wiki/Template:PD-US


11

பதிவேற்றல் (பெயர்வெளி : கோப்பு/File) கோப்பின் காப்புரிமை நிலையை அறிந்து உறுதி செய்த பின், கோப்பை விக்கிமீடிய பொதுவகத்தில் ஏற்றலாம்.[12] கோப்பை ஏற்றுவதற்கு பல வழிகள் உள்ளன.

பதிவேற்றக் கருவிகள்

அப்லோடு விசார்டு (Upload Wizard) அப்லோடு விசார்டு[13] என்னும் கருவி விக்கிமீடிய பொதுவகத்தில் இயல்பிருப்பாக கிடைக்கும். இதைக் கொண்டு ஒரே நேரத்தில் 50 கோப்புகள் வரை பதிவேற்ற முடியும். கூடுதல் விவரங்களை அறிய, அப்லோடு விசார்டு உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்[14].

ஐஏ-அப்லோடு கருவி (IA-upload tool) ஐஏ-அப்லோடு கருவி[15] இன்டர்நெட் ஆர்க்கைவ் தளத்தில் இருந்து கோப்புகளை எடுத்து விக்கிமீடிய பொதுவகத்தில் ஏற்ற உதவியாக இருக்கும். DjVu வடிவக் கோப்புகளை மட்டுமே இக்கருவி ஏற்ற உதவும். இக்கருவியை பயன்படுத்துவதைப் பற்றி அறிய,


[18] https://commons.wikimedia.org/wiki/Main_Page [19] https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard [20] https://commons.wikimedia.org/wiki/Commons:Upload_Wizard [21] https://tools.wmflabs.org/ia-upload/


12

இக்கருவியினைக் கொன்டு தரவேற்ற விரும்பினால், கீழ்க்காணும்படி செய்யுங்கள்.

1 ஐஏ அப்லோட் கருவிக்குச் சென்று, உள்நுழையுங்கள். உங்கள் விக்கிமீடிய கணக்கை பயன்படுத்தி பதிவேற்ற விரும்புகிறீர்கள் எனில், “OAuth” எனப்படும் அனுமதி கேட்கும்.

2. archive.org தளத்தில் இருந்து எடுத்த அடையாள எண்ணை முதல் பெட்டியில் குறிப்பிடுக. (https://archive. org/details/<அடையாள_எண்> என்றவாறு முகவரி இருக்கும். அந்த அடையாள எண்ணையே இங்கு குறிப்பிட வேண்டும்)

3. விக்கிமீடிய பொதுவகத்திற்கு ஏற்றப்பட இருக்கும் இக்கோப்பிற்கு நீங்கள் வழங்க விரும்பும் பெயரை இரன்டாவது பெட்டிக்குள் குறிப்பிடுங்கள். 'File:' என்ற முன்னொட்டோ, அந்த கோப்பின் வடிவமான .djvu/pdf போன்ற பின்னொட்டோ குறிப்பிடக் கூடாது. வெறும் பெயரை மட்டும் குறிப்பிடவும்

4. ‘Get metadata’ என்ற பொத்தானை அழுத்துக. கோப்பைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எடுத்து வரும்.

5. இது தரும் கூடுதல் விவரங்களை உறுதிப்படுத்துங்கள். தவறெனில் திருத்துங்கள். பொதுவகத்தில் {{book}} என்ற வார்ப்புரு உள்ளது. புத்தகத்தைப் பற்றிய அடிப்படை புலன்கள் இவ்வார்ப்புருவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

6. இன்டர்நெட் ஆர்கைவ் தளம் DjVu வகை கோப்புகளை உருவாக்குவதை மார்ச்சு 2016 உடன் நிறுத்திக் கொன்டது. சில கோப்புகள் இன்னும் இவ்வடிவத்தில் இருக்கக் கூடும். ஐஏ அப்லோடு கருவி DjVu வடிவக் கோப்புகளை உருவாக்க அனுமதிக்கும்.

a. JP2, PDF வகை கோப்புகளில் இருந்து DjVu வடிவத்திற்கு மாற்ற தேர்ந்தெடுத்தால், இச்செயல்பாடு முடிவடைய சில நிமிட நேரமெடுக்கும். இக்கருவி பெற்ற கோரிக்கைகளின் பட்டியலில் உங்கள் கோரிக்கையும் சேர்ந்து கொள்ளும்.

b. ஆர்கைவில் ஏற்கனவே DjVu கோப்பு இருக்குமெனில், அதையே தேர்ந்தெடுத்து தரவேற்றலாம்.


13

ஆசிரியர்

வார்ப்புருக்களை காண்க[22]


URL2Commons[17] எனப்படும் கருவியின் மூலம் மற்ற தளங்களிலுள்ள கோப்புகளை விக்கிமீடிய பொதுவகத்தில் ஏற்ற முடியும். ஏற்கனவே உள்ள IA-upload என்ற கருவியின் மூலம் இன்டர்னெட் ஆர்கைவ் தளத்திலுள்ள DjVu வகை கோப்புகளை மட்டுமே பதிவேற்ற முடியும். URL2Commons கருவியின் துணை கொண்டு எவ்வகை கோப்பையும் எந்தவொரு தளத்தில் இருந்தும் எடுத்து பொதுவகத்துக்கு ஏற்றப்படும். உங்கள் பயனர் கணக்கில் இருந்து OAuth Uploader என்ற கருவிக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே இக்கருவியை பயன்படுத்த முடியும்.2 முதல் புலத்தில் கோப்புகளின் இணையத்தள முகவரியை இடவும். ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புகள் இருப்பின், ஒன்றின் கீழ் ஒன்றாக இடவும். ஒவ்வொரு இணைய முகவரிக்குப் பிறகும் இடைவெளி விட்டு அவற்றின் பின்னர் கோப்புகளுக்கு இட விரும்பும் பெயரை குறிப்பிடவும். 3 Description புலத்தில், கோப்பைப் பற்றிய விவரங்களை இட வேண்டும். இதற்கு

ஆசிரியர்

என்ற வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும்.

<படிமம்>


[22] https://commons.wikimedia.org/wiki/Template:Book [23] https://tools.wmflabs.org/url2commons/index.html


14

1. இக்கருவியை பயன்படுத்துவதற்கு உங்கள் அனுமதி தேவைப்படும். எனவே OAuth Uploader என்ற கருவிக்கு உங்கள் கணக்கில் இருந்து அனுமதி கொடுக்க வேண்டியிருக்கும்.

2. முதல் பெட்டியில் a. ஒவ்வொரு முகவரியையும் ஒவ்வொரு வரியிலும் இடுக. b. ஒவ்வொரு முகவரிக்கு அருகிலும் இடைவெளி விட்டு, அக்கோப்பிற்கு நீங்கள் வழங்கவிருக்கும் பெயரைக் குறிப்பிடுக

3. Description பெட்டியில், இக்கோப்பினைப் பற்றிய விவரங்களை தருக. ஏற்கனவே உள்ள {{book}} என்ற வார்ப்புருவையும் பயன்படுத்தலாம். அதில் பல அடிப்படை தகவல்களுக்கான குறிப்பு இருக்கும்.

இந்த இணைப்பில்[24] சென்று அனுமதி வழங்கலாம்.

[குறிப்பு: பல புத்தகங்களை ஒரே நேரத்தில் தரவேற்றலாம். ஆனால், எல்லாவற்றுக்குமான காப்புரிமை நிலையை அறிந்தே தரவேற்ற வேண்டும். அப்படி இல்லை எனில், எல்லா கோப்புகளும் நீக்கப்பட்டு, பயனர் தடை செயப்படக்கூடும். எனவே, அனைத்து கோப்புகளின் காப்புரிமை நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்]

• கோப்பின் பெயரே, அட்டைப் பக்கத்தின் பெயராக இருக்கும். எனவே, கோப்பின் பெயரை சரியாக உள்ளிடுங்கள். • கோப்பைப் பற்றிய விவரங்களான ஆசிரியர் பெயர், பதிப்பாளர், பதிப்பித்த தேதி, உரிமம் போன்றவற்றை சரியாக குறிப்பிடுங்கள். • எந்த மொழி புத்தகமோ, அதே மொழியில் தலைப்பையும் விவரங்களையும் தரவும். • காப்புரிமை நிலையை சரியாக குறிப்பிடவும். • இவற்றுக்கு தனியான பகுப்புகளை பொதுவகத்தில் உருவாக்கவும். Category:Books in Tamil[25] என்று குறிப்பிடலாம்.


[24] https://tools.wmflabs.org/magnustools/oauth_uploader.php?action=authorize [25] https://commons.wikimedia.org/wiki/Category:Books_in_Bengali


15

காப்புரிமை பெற்ற புத்தகங்கள் காப்புரிமை பெற்ற புத்தகங்களையும் பொதுவகத்தில் தரவேற்றலாம். ஆனால், அதற்கு முன், ஆசிரியரிடம் அனுமதி பெற்று, அவரே இதை பொது உரிமத்தில் வெளியிடுவதாக உறுதி பெற வேண்டும். செய்முறை 1. கோப்பை பொதுவகத்தில் ஏற்றல் 2. பொது உரிமம் என்ற வார்ப்புருவை புத்தகத்தின் விவரப் பக்கத்தில் இடவும். 3. permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு உரிய சான்றுகளுடன் செய்தி அனுப்பவும். இதற்கு OTRS கருவியின் துணையை நாடலாம். 4. {{subst:OP}} வார்ப்புருவை பக்கத்தில் இடவும். அதுவே, பக்கத்தில் அந்த நாளைக் குறிப்பிட்டு வைக்கும். {{OTRS pending}} என்றவாறு அறிக்கை காட்டும்.

OTRS கருவி (Opensource Ticket Request System) [26] {{subst:OP}}[27] {{OTRS pending}}[28]

வைக்கப்படும் கோரிக்கையை OTRS குழுவினர் ஏற்று பரிசீலிப்பர். 1. கோரிக்கைக்கான எண் உருவாக்கப்படும். 2. அவர்கள் கோரிக்கையை பரிசீலித்து, தேவையெனில் கூடுதல் ஆவணங்களை கோருவர். 3. வார்ப்புரு:OP[29] வார்ப்புருவை எடுத்துவிட்டு, {{PermissionOTRS}} வார்ப்புருவை இடுவர். கூடுதல் சான்று தேவை எனில், {{OTRS received}}[30] என்ற வார்ப்புரு சேர்க்கப்படும்.[31]


[26] https://tools.wmflabs.org/relgen/ [27] https://commons.wikimedia.org/wiki/Template:OP [28] https://commons.wikimedia.org/wiki/Template:OTRS_pending [29] https://commons.wikimedia.org/wiki/Template:OP [30] https://commons.wikimedia.org/wiki/Template:OTRS_received [31] https://commons.wikimedia.org/wiki/Template:PermissionOTRS


16



மூலக் கோப்பிற்கான இடம் : https://docs.google.com/document/d/1oibboFdL-bvNAh2Frn9-nana8CQSGOOO7P03-b7NyC8/edit

29


30