முனைவர் கு.விஜயகுமார்
முனைவர் கு.விஜயகுமார் நாகப்பட்டினம் மாவட்டம்(தற்போது மயிலாடுதுறை மாவட்டம்) குத்தாலம் வட்டம்,திருவாலங்காடு என்னும் கிராமத்தில் குஞ்சிதபாதம்-சாரதா இணையோருக்கு 1981ஆம் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை உள்ளூரிலும் ஆடுதுறை, குத்தாலத்திலும் பயின்றார். இளங்கலைத் தமிழ் பட்டப்படிப்பைப் பூம்புகார்க் கல்லூரியிலும் முதுகலைத்தமிழ் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியிலும் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார். பன்னாட்டு, தேசிய கருத்தங்குகளில் 20க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான பல இலக்கிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 'பேராசிரியப்பெருந்தகை,இலக்கியச்சிகரம்,தமிழ்ச்சிற்பி,ஆசிய ஜோதி,வாழ்நாள் சாதனையாளர் விருது' போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். முதுகலைத் தமிழாசிரியராகவும் உதவிப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.