என் பெயர் வருண் காஷ்யப். எனது கல்லூரிப் பருவத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். பள்ளி நாட்களில் படிப்பு மற்றும் விளையாட்டு மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தேன். என்னைப் போல மற்ற மாணவர்களும் இருந்ததைப் பார்த்து இது தான் வாழ்க்கை என்று தவறாக நினைத்தேன். ஆனால் கல்லூரியில் நுழைந்த போது வியப்பாகவும் சற்று பயமாகவும் தோன்றியது. மிகப் பெரிய கட்டிடங்கள், பரந்து விரிந்த வளாகம், சீருடை அணியாத மாணவர்கள் என்ற சூழ்நிலை மிரட்சியைத் தோற்றுவித்தன.பல் வேறு மாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களைப் பார்த்த பொழுது மனதில் மகிழ்ச்சியும் அன்பும் மாறி மாறி வந்து சென்றன. முதல் இரண்டு மாதங்கள் போன பிறகு தான் சிறிது சிறிதாய் புரிய ஆரம்பித்தது.பதின் பருவத்தில் உள்ள அனைவருக்கும் கல்லூரிப் பருவத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதிகம் படிக்க வேண்டாம். ஜாலியாக இருக்கலாம். நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். இதைப் போல பல பல. இவை அனைத்தும் ஒரு பகுதி தான். மிக முக்கியமானது என்னவென்றால் வாழ்க்கை என்னும் கல்வியை இங்கு தான் கற்கப்போகிறோம் என்பதை நான் உணர்ந்த போது ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்தன. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தின் அடித்தளம் இங்கு தான் அமைக்கப்படுகிறது. ஏட்டுக் கல்வி ஒரு சிறிய சதவிகிதம் தான். எந்த ஒரு பாடத்தையும் நாம் கற்கும் போது அதை வாழ்வியலோடு பொருத்தி பார்க்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்தது இங்கு தான். வலை தளங்களில் தேடுதல் பல புத்தகங்களை வாசித்து குறிப்பெடுத்தல் சக மாணவர்களோடு கலந்து உரையாடல் கூட்டு வடிவமைத்தல் போன்ற செயல்களில் மிகப் பெரிய உண்மை ஒன்றை புரிந்து கொண்டேன். தனித்து செயல் படுவதை விட கூட்டாக செயல் படும் போது மன தைரியம் பெருகிற்று. மற்றவர்களின் சிந்தனை வியப்பூட்டியது. என் தவறு புரிந்தது. விட்டுக் கொடுத்து போகும் குணம் வளர்ந்தது. எதை எப்படி செய்ய வேண்டும் நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு கொள்வது எப்போது ஏன் இவ்வளவு கடும் போட்டி போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.இது முதல் ஆண்டு தானே இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுதாய் இருக்கின்றதே.அதற்குள் முடிந்த அளவு கல்லூரிப் பருவத்தை அனுபவித்து வாழ்க்கை கல்வியை கற்று ஒரு நல்ல மாணவனாக மட்டுமல்ல நல்ல மனிதனாகவும் வளர வேண்டும் என்பதே என் விருப்பம்.

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kasyapvarun&oldid=1272684" இலிருந்து மீள்விக்கப்பட்டது