பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/திருக்குறள்


திருக்குறள்


பெரிய வர்க்குப் பெரியநூல்!
சிறிய வர்க்கோர் அரியநூல்!
உரிய வர்க்கும் உரிய நூல்!
உலகில் யார்க்கும் உயர்ந்த நூல்!

அன்பைப் பற்றிச் சொல்லுமே!
அறத்தை விளக்கிக் கூறுமே!
பண்பை எடுத்துக் காட்டுமே!
பணிவை உயர்வை ஊட்டுமே!

உலகில் யார்க்கும் ஒரு குரல்!
உண்மை பேசும் திருக்குறள்!
பலவும் அறிந்து கொள்ளலாம்!
படித்து மடமை தள்ளலாம்!