பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/பழியன்றோ மிஞ்சும்
ஆங்கிலத்தைக் கற்பதுதான்
உயர்வா? - பாப்பா
அழகுதமிழ் கற்றுவரல்
அனைத்துக்கும் தாழ்வா?
தாங்கிலையே உன்முடிவை
பாப்பா - தமிழ்த்
தாய்மொழியைத் தள்ளிவிடல்
இனத்திற்குக் காப்பா?
கொச்சைத்தமிழ் பேசுவது
நன்றா? - பாப்பா
கொஞ்சுதமிழ் பிழையின்றிப்
பேசுவது நன்றா?
பச்சைத்தமிழ்ப் பாலினிலே
நஞ்சைப் - பாப்பா
பாய்ச்சுவதும் கேடன்றோ?
பழியன்றோ மிஞ்சும்!