பாரதிதாசன் தாலாட்டுகள்/தங்கத்துப் பாட்டி தாலாட்டு

தங்கத்துப் பாட்டி தாலாட்டு


ட்டனத்தி யான அருமை
மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக்
கொண்டுசெல்லப்

போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக்
கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள்
நீதானோ?

செல்வத் தமிழ்வேந்தர் போற்றும்
செழுந்தமிழாம்
கல்விக் கரசி கலைச்செல்வி
ஔவை

இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக்
காக்க
நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ
என்கிளியே?

இனியு நற்காக்கை தமிழ்காத்தே இந்நாட்டைக்
காக்க
நினைந்துவந்தாள் என்னிலவள் நீதானோ
என்கிளியே?

நாட்டு மறவர்குடி நங்கையரைச்
செந்தமிழின்
பாட்டால் அமிழ்தொக்கப் பாடிடுவாள்
நற்காக்கை

பாடினியாம் நச்செள்ளை, பார்புகழும்
மூதாட்டி
தேடிவந்தாள் என்றுரைத்தால் செல்வமே
நீதானோ?

அண்டும் தமிழ்வறுமை அண்டாது
காக்கவந்த
எண்டிசையும் போற்றும் இளவெயினி
நீதானோ?

தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை
பாடியவள்
நக்கண்ணை என்பளும் நீதானோ
நல்லவளே?

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளோடு
முற்றோன்றி மூத்த குடியின்
திருவிளக்கே.

சற்றே உன் ஆடல் தமிழ்ப்பாடல்
நீநிறுத்திப்
பொற்கொடியே என்னருமைப் பொன்னே நீ
கண்ணுறங்காய்.

குடும்பவிளக்கு - 4