பாரதிதாசன் தாலாட்டுகள்/தாயின் தாலாட்டு
பொன்னே மணியே புதுமலரே
செந்தேனே
மின்னே கருவானில் வெண்ணிலவே
கண்ணுறங்கு.
தன்னே ரிலாத தமிழே
தமிழ்ப்பாட்டே
அன்னைநான்! உன்விழியில் ஐயம்
ததும்புவதேன்?
என்பெற்ற அன்னையார் உன்பாட்டி
இன்னவர்கள்
உன்தந்தை அன்னை உயர்பாட்டி
இன்னவர்கள்.
என்னருமைத் தோழிமார் உன்தாய்மார்
அல்லரோ?
கன்னற் பிழிவே கனிச்சாறே
கண்ணுறங்கு.
சின்னமலர்க் காலசையச் செங்கை
மலர் அசைய
உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே
கண்ணுறங்கு.
குடும்பவிளக்கு - 4