பாரதி அறுபத்தாறு/தேம்பாமை

தேம்பாமை

“வடகோடிங் குயர்ந்தென்னே சாய்ந்தாலென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீதிங்கே,
விட முண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெது தான் யாதாவி னெமக் கிங்கென்னே?
திடங் கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல்வேண்டா;
தேம்புவதிற் பயனில்லை, தேம்பித் தேம்பி
டருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர். (10)