பாரதி அறுபத்தாறு/பெண் விடுதலை
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலை யென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்!
மண்ணுக்குள் ளெவ்வுயிருந் தெய்வ மென்றால்,
மனையாளுந் தெய்வ மன்றோ? மதி கெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்,
விடுதலை யென்பீர், கருணை வெள்ள மென்பீர்.
பெண்ணுக்கு விடுதலை நீ ரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கை யில்லை.
(45)