பாரதி அறுபத்தாறு/ஸர்வமத ஸம ரஸம்

ஸர்வ மத ஸம ரஸம்

கோவிந்த ஸ்வாமியுடன் ஸம்பாஷணை

மீளவு மங் கொரு பகலில் வந்தா னென்றன்
மனை யிடத்தே கோவிந்த வீரஞானி,
ஆள வந்தான் பூமியினை, யவனி வேந்தர்
அனைவருக்கு மேலானோன், அன்பு வேந்தன்;
நாளைப் பார்த்தொளிர்தரு நன் மலரைப் போலே
நம்பிரான் வரவுகண்டு மன மலர்ந்தேன்;
வேளையிலே நமது தொழில் முடித்துக் கொள்வோம்;
வெயிலுள்ளபோதினிலே யுலர்த்திக்கொள்வோம்;

காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவை யெதிர் கண்ட போதே
மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;

கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குரு வந்தான்; இவன்பால் ஞானப் [ளே
பேற்றை யெல்லாம் பெறுவோம் யாம்“ என்றெனுள்
சிந்தித்து:— ”மெய்ப் பொருளை யுணர்த்தாயையே!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக் கேட்டேன் கூறாய்” என்றேன்.
வானவனாங் கோவிந்த ஸாமி சொல்வான்:—
”அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை; பந்தமில்லை; பந்தமில்லை;
பயமில்லை ; பயமில்லை; பயமே யில்லை. (59)

”அதுவே நீயென்பது முன் வேத வோத்தாம்;
அதுவென்றா லெதுவென் நா னறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளினாமம்;
அவனியிலே பொருளெல்லா மதுவாம்;—நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை; ஆதலாலே,
அவனியின் மீதெது வரினு மசைவுறாமல்
மதுவுண்ட மலர்மாலை யிராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தி யிங்கு வாழ்வாய்,சீடா. (60)

”பாரான உடம்பினிலே மயிர்களைப் போற்
பலப்பலவாம் பூண்டு வரு மியற்கையாலே;
நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டாலுமுதல் வேண்டா;
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா;
சீரான மழை பெய்யும்; தெய்வமுண்டு;
சிவன் செத்தாலன்றி மண்மேற் செழுமையுண்டு. (61)

“ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கு முழைப்பின்றி யுணவுண்டாகும்;
பேதமிட்டுக் கலகமிட்டு வேலிகட்டிப்
பின் னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர் நெறி யாயிற்றப்பா?
நினைக்குங் கா லிது கொடிய நிகழ்ச்சியன்றோ?
பாதமலர் காட்டி நினை யன்னை காத்தாள்
பாரினிலித் தரும் நீ பகருவாயே. (62)

”ஒரு மொழியே பலமொழிக்கு மிடங் கொடுக்கும்;
ஒரு மொழியே மலமொழிக்கு மொழிக்கு மென்ற
ஒரு மொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒரு மொழி ”ஓம் நமச்சிவாய” வென்பர்;
”ஹரி ஹரி” யென்றிடினு மஃதே; ”ராம ராம”
”சிவ சிவ”; வென்றிட்டாலு மஃதே யாகும்;
தெரி வுறவே ”ஓம் சக்தி”யென்று மேலோர்
ஜெபம் புரிவ தப் பொருளின் பெயரே யாகும். (63)

”ஸாரமுள்ள பொருளினை நான் சொல்லி விட்டேன்:
சஞ்சலங்க ளினி வேண்டா, சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போது மருளை மனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். (66)

பூமியிலே, கண்ட மைந்து, மதங்கள் கோடி!
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்

சாமி யென யேசு மதம் போற்று மார்க்கம்,
ஸநாதன மாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாம முயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,
நல்ல “கண்பூசி“ மத முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே;
யாவினுக்கு முட் புதைந்த கருத்திங் கொன்றே. (65)

பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்
பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ ; சாமி நீ ; கடவுள் நீயே ;
தத்வமஸி ; தத்வமஸி ; நீயே யஃதாம் ;
பூமியிலே நீ கடவு ளில்லையென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் 'சிவோஹ' மென்று ஸாதிப்பாயே. (66)