பாலைப்புறா/அத்தியாயம் 26

லைவாணி, இலக்கு இல்லாமல் நடந்து, மக்கள் திரளில் இருந்து விடுபட்டு, கோணச்சத்திரத்தை மறைக்கும் ஒரு காட்டுப் பகுதிக்கு வந்தாள். இரு பக்கமும் கருவேலக் காடுகள். இடையில் தார்சாலை… அந்தச் சாலை துண்டிக்கப்பட்ட பாலத்துக்கு வந்தாள். பாழடைந்த பங்களாவின் அடிவாரம் போல் உள்வாய்; சிறிது தொலைவில், மாற்று மண் பாதையில், லாரிகளும், பேருந்துகளும் விட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தன. மானுடக் கண் படா இடம்… அப்படியே சுருண்டு கிடந்தாள். எப்படி பாம்பு சுருண்டு கிடக்குமோ… அப்படி… தலையும், கால்களும் சங்கமமாகும்படி, வட்டமாய்க் கிடந்தாள். தூக்கமோ, துக்கமோ…இவை இரண்டும் கலந்த ஏதோ ஒரு நிலை.

கலைவாணி, கால நேரக் கணக்கற்று, கண்களை மூடாமல், எங்கோ தூரத்துப் பார்வையாய் பார்த்துக் கிடந்தாள். பிறகு எழுந்து, ஈரக் கசிவான தரையில் உடல் போட்டு, ஒரு வட்டக் கல்லில் தலை சாய்த்துப் படுத்தாள்; ராசலட்சுமி சொல்லால் குத்தியது அவளை உலுக்கியது. அவளுக்கு பதிலளிப்பது போல் சத்தம் போட்டே பேசினாள் ‘ராசலட்சுமியம்மா, என் மகள்தானா ஒனக்குக் கிடச்சாள்னு கேட்டியே… அது தப்பு… போயும் போயும்… நான்தான் ஒன் மகளுக்கு கிடச்சிருக்கேன்… எந்த பாவமும் செய்யாத நான்தான் நானேதான்… அடேய் மனோகரா, என் நிலைமையப் பாருடா.. இப்போக் கூட என்னை விரட்டாமல், விரட்டுறியடா.. விரட்டுறியடா.. எங்கே போவேன்? யார் கிட்ட தஞ்சமாவேன்…? மோகன்ராம்… துரோகியாகிட்டான். அசோகன் கிட்டே போகவும் மனசில்ல… அடைக்கலம் கொடுக்கிறவராய் இருந்தால், டிஸ்சார்ஜ் செய்திருக்க மாட்டார். ஒப்புக்குக் கூட, தங்கிக்கோன்னு ஒரு வார்த்தை 238 பாலைப்புறா

கேட்கல... எப்படிப்போவேன்... எப்படிடா போவேன். எம்மா... என்னப் பெத்த அம்மா, நீ அழுதழுது கூப்பிட்டபோதே தான் வந்திருக்கலாமோ... எப்படிம்மா முடியும்? பலராமன் பார்வை சரியில்லியே... அம்மா! நீங்க என்னை பிறக்கும் போதே கொன்னுருக்கலாமே... அம்மா... உசிலம்பட்டியிலே பிறக்காமப் போயிட்டனே... அப்பா... என்ன பெத்த

soft/Liss...”

கலைவாணிக்கு, இயற்கை கனிந்தது. தற்செயலாய் கனிந்தது...துக்கச் சுமையே மாத்திரையானது; எறும்புகள் கடித்தன. கொசுக்கள் அரித்தன... பூச்சிகள் அவள்மேல் புரண்டன. ஆனாலும் தூங்கிப் போனாள். அப்படியே தூங்கிப் போனாள்...

ஒரிரு மணி நேரத்திற்கு பிறகு, கலைவாணிக்கு, இயற்கை இப்போது காய்விட்டது... மூளை உசுப்பிவிட்டது. விழித்த கண்களில் கற்கள், கல்லறை கட்டுவதற்கு உள்ளது போன்ற கற்கள்; எவரையோ, ரத்தமும் கூழுமாய் வெட்டிப் போட்டது... போன்ற மண் கட்டிகள்;. நீரோடு குழைந்த மண் சதைகள்; மனக்குகை போல், மருண்டு பார்த்த அடிவாரம்... அவளுக்கு பயமெடுத்தது... தனிமைப்பயம்... மனித முகங்களைப் பார்க்காவிட்டால், மரித்துப் போகலாம் என்ற பயம்...

கலைவாணி, ஈரப் புடவையோடு மேலே வந்தாள். முதுகிலும் தோளிலும் அப்பிய சேறோடு வெளியேறினாள். மனம் போன போக்கில் நினைத்து, கால்போன போக்கில் நடந்து, சாலையோரமாய் உள்ள ஒரு ஆலமரத்தின் அடிவாரத்துக்கு வந்தாள். அதன் விழுதுகளில் இரண்டை பிடித்தபடி நின்றாள். அப்படியே, அந்த மரத்தின் தூரில் சாய்ந்தாள். உடல் மரத்துப் போனது... மனம் அற்றுப் போனது. நினைவற்ற சூனியம். ஏகாந்தத்தின் எதிர்நிலை...

அந்த உச்சி வெயிலில் புலிப்பாய்ச்சலில் ஒடிக் கொண்டிருந்த லாரிகள், அவளைப் பார்த்து பம்மி பம்மி, தத்தித் தத்திப் போயின... இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே ரிப்பேராய் நின்றன. ஆனால், இவள் சட்டை செய்யாததால், காலவிரயத்தை ஈடுகட்டும் வகையில் மீண்டும் ஓடின. முன் பக்கமும், பின் பக்கமும் நரிகள் வாழும் கருவேலமரக் காடுகள், எதிரே தெரிந்த எருக்கலைக்ச்செடிகள்.காற்றிலாடி அவளைக் கூப்பிட்டன. கருவேல மரங்கள், அவளைப் பார்த்து முட்கரங்களை ஆட்டின. இடிபட்ட பனை ஒன்று, அவளைப் போல் மொட்டையாய் நின்று மொக்கை வாயால் புலம்பியது. காக்காவால் கடிபட்ட அணில் ஒன்று, மூக்கில் ரத்தம் சொட்ட அரற்றி அரற்றி, அவள் காலடிப் பக்கமாய்த்தாவியது. சு.சமுத்திரம் 239

வேக வேகமாய் போய்க் கொண்டிருந்த லாரிகளில் ஒரு தேசிய லாரி, அவள் பக்கத்தில் நின்றது. வாட்டசாட்டமான லாரி டிரைவர், அவளை உற்றுப்பார்த்தார். பைத்தியமோ என்பது போல் பகுத்தும் பார்த்தார். பிறகு, அப்படி இருந்தாலும் பரவாயில்லை. என்பது போல்தலையாட்டினார். லாரி தர்மப்படி, இருக்கைக்கு பக்கத்தில் வைத்திருந்த மல்லிகைப் பூச்சரத்தை எடுத்து, வண்டிக்கு வெளியே பக்கவாட்டில் உள்ள வட்டக் கண்ணாடியில் வைத்தார். இதைப் பார்த்தால், விஷயம் தெரிந்த பெண்கள்உடலுக்கு விலை பேச வந்து விடுவார்கள்...

கலைவாணி, அந்த லாரியைப் பார்க்கவில்லை. அது, ரோட்டையும் அவளையும் அடைத்து நின்றதும் தெரியவில்லை. ஆனாலும் டிரைவர் ஹாரன் அடித்தபோது நிமிர்ந்தாள். அந்த இருக்கையில் இருப்பவர் ஆணாகவோ, பெண்ணாகவோ அவளுக்கு படவில்லை. ஏதோ ஒரு மனிதஉருவம் ‘ஏன் இப்படி கையை நீட்டுகிறது? ஏன் இப்படி தலையை ஆட்டுகிறது? அந்த லாரியில் உட்கார்ந்து கொண்டே ஒடலாமோ... ஒடணும். கண்தெரியாத இடத்துக்கு ஒடனும். ஒடியே ஆகணும்.

கலைவாணி, கண்களைக் கசக்கியபடியே எழுந்தாள். லாரிக்காரன் நீட்டிய கரத்தை நோக்கி நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_26&oldid=1639246" இலிருந்து மீள்விக்கப்பட்டது