பாலைப்புறா/அத்தியாயம் 32

ரு காலத்தில், பொன் விளையும் பூமியாக விளங்கி, இப்போது, மலட்டு வீட்டு மனைகளான பகுதி… ஆனாலும், ஆங்காங்கே கட்டிடங்கள் முளை விட்டுக் கொண்டுதான் இருந்தன. இந்தப் பகுதியில், அசோகன் எப்போதோ மூன்று கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தான். வாங்கிப் போட்டான் என்பதை விட, அவன் தந்தை ஊரில் இருந்த நில புலன்களை, பாகப் பிரிவினை செய்து, ஐந்தாண்டு கால குத்தகைக்கு பணமாய் அவன் பெயரில் வாங்கிப் போட்டார். இப்போது, அந்த இடத்தில் ஒரு கீற்றுக் கொட்டகை… முன் பக்கத்தில் வாசலைத் தவிர்த்த, இரண்டு பக்கங்களிலும், வெறும் மண் சுவர்கள். அவற்றிற்கு மேல் மூங்கில் தட்டிகள். பின் பகுதியில் வாசல் ஒதுக்கப்பட கதவில்லாத அடைப்பு… காயப் போட்ட கோரைப் புற்களே, சுவர்களான அலுவலக அடைப்பு… அங்கே ஒரு நீண்ட மேசைக்குப் பின்னால், இரண்டு நாற்காலிகள்… முன் பக்கம் இரண்டு பெஞ்சுகள்… அத்தனையும், சந்திரா, அசோகன் வீடுகளில் உள்ளவை…

முன் பக்கம் பனைத் தூண்கள் தாங்கிப் பிடிக்கும் கொட்டகைத் தரை, சாணத்தால் மெழுகப்பட்டு பச்சை பசேல் என்று காட்சி காட்டியது. ஒரு மேஜையில், பல்வேறு பத்திரிகைகள் பாதியாய் மடித்தும், விரித்தும் வைக்கப்பட்டிருந்தன. ‘எய்ட்ஸ் பெண்ணின் குமுறல்’, ‘எனக்கு எய்ட்ஸ் வந்தது… இளம் பெண்ணின் பகிரங்க அறிவிப்பு’, ‘கோவையில் எய்ட்ஸ் நோயாளிக்குத் திருமணம். டாக்டர் உடந்தை! அவளுக்கு வந்தது ஆவேசம்! அத்தனையும் சொல்லி விட்டாள்’ ‘ஹெச்.ஐ.வி. இன்பெக்ட்டட் உமன்ஸ் பிளைட்’

இந்த மாதிரியான பத்திரிகை தலைப்புக்களால், கலைவாணியும், சந்திராவும் முகம் சுழித்தாலும், அந்த சுழிப்பிலும் ஒரு புன்னகை… 286 பாலைப்புறா

கலைவாணியின் புகைப்படத்தோடு வெளியான செய்திகள். அரசின் கண்களைத் திறக்கவில்லையானாலும், அதற்கு வரி கொடுக்கும் மக்களின் கண்ணைத் திறக்கும் என்ற நம்பிக்கை டாக்டர் சுமதி போன்றவர்களின் ‘விழிப்புணர்வுகளைத்டுக்க முடியர்மல் போனாலும், அவர்களின் பிடியைத் தளர்த்த முடியும் என்கிற எதிர்பார்ப்பு

டாக்டர் சந்திராவின் சேமிப்பாலும், அசோகனின் நன்கொடையாலும், கலைவாணியின் உழைப்பாலும் உருவான இந்த அமைப்பிற்கு என்னபெயர் வைக்கலாம் என்பதில், அந்த மூவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. பெண்கள் மீட்பு இயக்கம் என்று பெர்த்தாம் பொதுவாய்வைக்கலாம் என்பது சந்திராவின் கட்சி. அமைப்பின் பெயர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஆறுதல் காட்டுவது போல் இருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட நோயாளித் தரப்பை ஊனப்படுத்துவதாய் இருக்கக்கூடாது என்பது அசோகனின் வாதம்... ஆனாலும் கலைவாணியின் பிடிவாதத்தாலும், சுமதியிடம் இருந்து பிரிந்து அவளோடு சேர்ந்து கொண்ட பெண்களின் ஆதரவாலும், எய்ட்ஸ் திருமண தடுப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டது. ஹெச்.ஐ.வி. என்கிற வார்த்தையை எய்ட்ஸ்ஸுக்குப் பதிலாய் போடலாமே என்று சந்திரா கேட்டாள். ஆனால் அது பொது மக்களுக்கு புரியாது என்பதால், அவளும் இறுதியில் உடன்பட்டாள்.

இதர தொண்ட நிறுவனங்களைப் போல், ஒப்புக்கு ஒரு டிரஸ்டை வைக்காமல், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உறுப்பினர்களாக்க சந்தா ரசீதுகள் அச்சாகிவிட்டன. உறுப்பினர் கூட்டத்தில் புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதுவரை சந்திராவும் கலை வாணியும் அமைப்பாளர்களாக செயல்படுவது என்றும் தீர்மானமாயிற்று. அசோகன், எந்த பதவிப் பொறுப்பையும் ஏற்க மறுத்துவிட்டான். ஆனாலும் பாதி நேரம் இந்தக் கொட்டகைதான், அவன்குடியிருப்பு.

கொட்டகைக்கு கீழே, ஆங்காங்கே போடப்பட்ட பெஞ்சுகளில் பத்துப் பதினைந்து இளம் பெண்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தாப் புத்தகங்களில் உள்ள பெயர்களை ஒரு ரிஜிஸ்டருக்கு மாற்றிக் கொண்டிருந்தவர்கள், பேனர் தயாரித்துக் கொண்டிருந்தவர்கள்... செவ்வக அட்டைகளில், எய்ட்ஸ் பற்றிய உண்மைகளை திருக்குறள் போல் தீட்டிக் கொண்டிருந்தவர்கள். இப்படி ஒரே இயக்க மயம். வெளியே, ஆண்களும் பெண்களுமாய் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம்.

அசோகன், அந்தக் கொட்டகைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு, இயங்கிக் கொண்டிருந்த பெண்களையும், கலைப்பாடு கொண்ட அவர்களின் செயல்பாடுகளையும் பார்த்தபடியே, பின் பக்கத்து அடைப்பை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்து எழுந்து நின்ற சந்திரா - கலைவாணி... சு.சமுத்திரம் 287

ஜோடியைப் பார்த்துவிட்டு ஏதேது மரியாதை பலமாய் இருக்குது என்றான். அவன் உட்கார்ந்ததும், சந்திரா கவலை தெரிவித்தாள்.

‘எனக்கு என்னவோ பயமா இருக்குது அசோகன். ஆழம் தெரியாமல் காலைவிட்டது மாதிரி...”

‘நீச்சல் தெரிந்தவங்களுக்கு ஆழம் தெரிய வேண்டியது இல்லை... நேர்மையான தொண்டர்களுக்கு பின்விளைவுகள் தெரியவேண்டியதில்லை. ஆனாலும் ஒன்றை நான் சொல்லியாகணும்... நீங்க ரெண்டு பேரும், முக்கியமான பொறுப்புக்கு வந்திருக்கீங்க. பத்திரிகைகள் செய்திகள் போட்டாலும் போட்டது, இப்போது கலைம்மாவுக்கு ஏகப்பட்ட அழைப்பு கள் குவியுது. ஆனாலும் இவை திடீர் மழையில் காளான் முளைச்சது மாதிரி. நிரந்தரமான உழைப்புதான் இதை நிலைப்படுத்தும்...’

“ஒரு மைக் கொண்டு வரட்டுமா அசோக்?...’

‘இந்த மாதிரி... அவசரக் குடுக்கைத்தனம் ஒனக்கு ஆகப்படாது

டாக்டரம்மா... கலைவாணி ஒனக்குந்தான்... இனிமேல் நீ ஒன்னையே நினைத்து பொருமப்படாது... டால்ஸ்டாய் சொன்னாப் போல, அனுபவம் ஒரு ஜன்னல் அதன் மூலம் தெருவைப் பார்க்கணும். ஜன்னலே தெருவாகிடப்படாது...’

தட்டுமுட்டுச் சத்தம் கேட்டு, அந்த மூவரும் வெளியே வந்தார்கள். ஆங்காங்கே இயங்கிக் கொண்டிருந்த பெண்களும் ஒன்றுபடப் போனார்கள். ஒவ்வொருவர் கண்களிலும் ஒரு ஆச்சர்யம். ஒவ்வொரு முகத்திலும் ஒரு சுழிப்பு...

அந்தக் கொட்டகை வாசலுக்கு வெளியே, ஒயர்பொருத்தப்பட்டTப்பில் இருந்துதுள்ளிய இன்ஸ்பெக்டர் சிங்காரம், அந்த கொட்டகைத்துண்ஒன்றில் சாத்தி வைக்கப்பட்ட சைக்கிளை பூட்ஸ் காலால் கீழே தள்ளினார். சிறிது நடந்து இன்னொரு பக்கம் கிடந்த நாற்காலியை எட்டிஉதைத்தார். இன்னும் நடந்து, ஒரு முக்காலியைத் தூக்கி விசிறியடித்தார். பேனராய் மாறிய ஒரு மூங்கில் தட்டியை இரண்டாக உடைத்துப் போட்டார். பக்கத்தில் புடை சூழ்ந்த கான்ஸ்டபிள்களைக் கம்பீரமாய் பார்த்துக் கொண்டார். பிறகு வலது கை பிடித்த லத்திக் கம்பு, இடது உள்ளங்கையை செல்லமாய் தட்டிக் கொடுக்க, அந்த மூவரை நோக்கி நடந்தபடியே கத்தினார்.

‘யோவ். டாக்டர்... ஒன் மனசிலே என்னய்யா நெனைப்பு...? வரச் சொன்னால், வர மாட்டியா? ஒன்னை இப்போ நாய்மாதிரி இழுத்துட்டுப் போகப் போறேன். இழுங்கடா... ராஸ்கலை,... போலீசா... மாமன் மச்சானா...? ‘

வலது பக்க இடுப்பில் துருத்திய உறையோடு நின்ற இன்ஸ்பெக்டரின் 288 பாலைப்புறா

ஆணையை நிறைவேற்ற கான்ஸ்டபிள்கள் தயங்கினார்கள். அத்தனை பேருமே அசோகனின் ஒசி நோயாளிகள். அதோடு, இவர் ஒரு கெளரவமான டாக்டர் ...எம்.எல்.ஏ. இன்றைக்கு சொன்னதை, நாளைக்கே மறுப்பான்... சட்டசபையில் அடிபடக் கூடிய விவகாரமாகலாம்...

கான்ஸ்டபிள்களின் தயக்கத்தைப் புரியும் நிலையில் இன்ஸ்பெக்டரும் இல்லை. கூடவே அந்த இரண்டு பெண்களைப் பார்த்ததும், அந்த நாற்பது வயது நட்சத்திரச் சட்டைக்கு, தான் ஒரு சினிமா நட்சத்திரம் என்ற நினைப்போ... என்னவோ... அசோகன் சட்டைக் காலரைப் பிடிக்கும் அளவிற்கு கையைத்தூக்கிவிட்டார். அதற்குள்...

கலைவாணி, அசோகனின் முன்னால் போய் நின்றாள். முகம் வெளுக்க நின்ற சந்திராவை, கையைப் பிடித்து தன் பக்கமாய்ச் சேர்த்துக் கொண்டாள். இப்போது அவளே 'எஸ்.பி.' ஆனது போல், இன்ஸ்பெக்டருக்கு ஆணையிட்டாள்.

"மொதல்ல... அந்த சைக்கிளை தூக்கி நிறுத்துங்க... கீழே கிடக்குற நாற்காலிய உட்காரும்படியாய் போடுங்க. அப்புறமாய் இங்கே வாங்க... இன்ஸ்பெக்டர், ஒங்களைத் தான்..."

இதற்குள், அங்குமிங்குமாய் சிதறி அப்புறம் ஒன்றுபட்ட பெண்கள், அந்தப் பக்கம் தடதடவென்று ஓடிவந்து, கலைவாணியையும், சந்திராவையும், இவர்களுக்கு இடையே நின்ற அசோகனையும் பின்னால் தள்ளிவிட்டு, முன்னால் வந்து நின்றார்கள். முந்தானையை இறுக்கிக் கட்டி, கரங்களை முஷ்டிகளாய் ஆக்கிக் காட்டி, சூளுரைத்தார்கள்.

“மொதல்ல எங்களை சுட்டுட்டுத்தான், டாக்டரை நெருங்க முடியும்..."

இன்ஸ்பெக்டருக்கு லேசான பயம்... கான்ஸ்டபிள்கள் சிரிப்பார்களே என்ற தாழ்வு மனப்பான்மை... ஆனாலும், எம்.எல்.ஏ.விடம் ஒரு புறநானூற்று வீரனாய்க் காட்டிக் கொள்ள இன்னமும் ஆசை. இந்தச்சமயம் பார்த்து, புரமோஷன் பேனல்ல பேர் வேற இருக்குது...

"இந்தாப் பாருங்கம்மா, நான் என் டூட்டியைத்தான் செய்ய வந்திருக்கேன். இவரு... ஒரு லேடியை அவமரியாதையாய்ப் பேசியவரு. கொலை செய்யப் போறதாய் மிரட்டியவரு... விசாரணைக்கு கூப்பிட்டால் வரமாட்டாரு... நான் சும்மா இருக்கணுமா..."

அசோகன், அழுத்தம் திருத்தமாய் பேசினான்... "ஒங்க காக்கிச் சட்டைக்கு, நான் மதிப்பு அளிக்கணுமுன்னால், இப்பவும் சொல்றேன். அந்த இண்டர்நேஷனல் ஃபிராட் சுமதியையும் கூப்பிடுங்க. நேருக்கு நேராய் விசாரியுங்க. நான், நிச்சயமாய் வருவேன். அப்படி சு.சமுத்திரம் 289

இல்லாட்டி இப்பவும் சொல்றேன்... ஒங்களால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க. அரெஸ்ட்வாரண்ட் இருக்குதான்னுக் கூட நான கேட்கப் போவதாய் இல்ல... ஏன்னா, நாட்டு நிலைமை எனக்கு நல்லாவே தெரியும்...”

‘அரஸ்ட் வாரண்டே இருந்தாலும்... எங்களை, கைது செய்யாமல், நீங்க இவர்கிட்ட நெருங்க முடியாது...’

‘கையிலே லத்திக் கம்பையும், இடுப்பிலே துப்பாக்கியையும் விளையாட்டுக்காக கொடுக்கலம்மா...”

‘உங்க திருவிளையாடல்தான்...’

‘ஷட்டப்... மிஸ்டர் அசோகன் பெண்களுக்கு பின்னால பேடியா ஒளியாதிங்க. மரியாதையாசரண்டர்.ஆயிடுங்க...”

‘என்ன அநியாயம்...? இவர் என்ன வீரப்பானா... இன்ஸ்பெக்டர்...’ இன்ஸ்பெக்டர் சிங்காரம், அப்படிக் கேட்டவளை உற்றுப் பார்த்தார். அடையாளம் வைத்துக் கொள்ளும்படிப் பார்த்தார். அதே சமயம், அசோகனை, முன்பு நினைத்ததுபோல், இழுத்துப் போகவும் பயம்... அரெஸ்ட்வாரண்ட் கூட இல்லை. இப்படி தெரிந்திருந்தால், ராத்திரியோடு ராத்திரியாய் இழுத்துட்டுப் போயிருக்கலாம்...

இன்ஸ்பெக்டர், பின் வைத்த காலை முன் வைக்க முடியாமலும், முன் வைத்த காலை பின் வைக்க முடியாமலும் திண்டாடினார். இந்த கான்ஸ்டபிள்களாவது என்னை சமாதானப்படுத்தலாம். எதாவது சாக்கு சொல்லி, என்னை இழுத்துட்டுப் போகலாம். எப்படிச்சிரிக்காங்க... எனக்கு திண்டாட்டமுன்னா. இவங்களுக்கு கொண்டாட்டம்.

அசோகன், தன் பாட்டுக்கு கூரைமேட்டைப் பார்த்துக் கொண்டு நின்றான். சந்திரா. தன்னை அறியாமலே, அசோகன் கையைப் பிடித்துக் கொண்டாள். இந்த பெண்களோ, இன்ஸ்பெக்டரையே கைது செய்ய போவதுபோல் பார்த்தார்கள். இன்ஸ்பெக்டர் சிங்காரம் யோசித்தார். எம்.எல்.ஏ. அவர்களை வெறுங்கையோடு பார்த்தால், அவர் எந்த முகத்தோடு சுமதியம்மாவைப் பார்ப்பார்.

இப்படியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றபோது, எதிரே ஒரு படகுக்கார்வந்தது தெரியாமல் வந்துநின்றது. பின்னிருக்கையில் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள். ஒருத்தர் நீலச் சபாரிக்காரர். அறுபது வயது இருக்கலாம்.உருண்டு திரண்ட கண்கள்...ஆடையைப் போல், முகத்திலும் ஒரு வாளிப்பு. அவரது ஒரு பக்கம் ஒரு சல்வார் கமிஷ் பெண். மறுபக்கம், கழுத்துக்குக் கீழே ஒரு அங்குலம் கூட உடம்பைக் காட்டாத ஒரு ஐம்பது ufr. 19 290 பாலைப்புறா

வயதுக்காரி...

அந்த மூவரும், கும்பலாய் நின்றவர்கள் பக்கமாய் வந்தார்கள். உடனே இன்ஸ்பெக்டர் சிங்காரம் தன்னை அங்கீகரிப்பது போல் பார்த்த அந்தம்மாவுக்கு ஒரு கும்பிடு போட்டார். பிறகு, சபாரிக்காரரைப் பார்த்து விறைப்பாய் ஒரு சல்யூட் அடித்தார். எஸ்.பி.க்கு கூட இப்படி அடிக்காத சல்யூட்... அவரைப்பார்த்த அந்த படகுக்கார் மனிதர் எப்படிய்யா இருக்கே?” என்று அவரை கீழ்நோக்கிப் பார்த்துவிட்டு, அந்தக் கும்பலில் முகமறியா ஒருத்தியை தேடினார். இன்ஸ்பெக்டர் குழைந்து நின்றதை அலட்சியப் படுத்தியபடியே, கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.

‘கலைவாணி., என்கிறது யாரு...?” எல்லோரும் கலைவாணியையே உற்றுப் பார்ப்பதைப் பார்த்ததும், அவருக்குப்புரிந்து விட்டது. கலைவாணியின்கைகளைப் பிடித்து, கண்களில் ஒற்றிக் கொண்டார். இதற்குள், சல்வார் கமிஷ்காரி துள்ளிக் குதித்து ஒடிப்போய், கலைவாணியின் பக்கமாய்ப போய் நின்று, அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் அம்மா வந்து, கலைவாணி யின் தோளில் கை போட்டாள். பிறகு, உணர்ச்சிப் பெருக்கில் அவளையும், அவளைக் கட்டிப் பிடித்த தன் மகளையும் இறுகத் தழுவியபடியே விம்மினாள்... சபாரிக்காரர், மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். பாதி புரிந்தும், புரியாமலும் நின்ற கலைவாணியிடம் பேசினார்.

‘நீ செய்திருக்கிற உதவிக்கு ஜென்மம் ஜென்மமாய் கடன் பட்டிருக்கோம்மா. இல்லாட்டி, என் ஒரே மகளான இந்த சாந்தி ஒரேடியாய்ப் போயிருப்பாள். நான்கூட, நீடெலிபோன்லே பேசும் போதும், டெலிகிராம் கொடுத்த போதும் முழுசாநம்பல... பத்திரிகைகளுலே பார்த்த பிறகுதான், முழு நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு சம்பந்தியாய் உறவாட இருந்தவனையும், இந்த சுமதியையும் நான் விடப் போறதாய் இல்ல... இந்தாப்பா சிங்காரம்...’

‘எஸ்... சார்’

‘இந்த சுமதி மேல ஒரு புகார் கொடுக்கணும். ஒரு இளம் பெண்ணை தெரிந்தே திட்டமிட்டே... சிறுகச் சிறுக கொலை செய்யப் போனவளை, நீ உடனே கைது செய்யனும்’

இன்ஸ்பெக்டர் சிங்காரமாய் தலையாட்டியபோது, கலைவாணி குறுக்கிட்டாள்.

‘இந்த மாதிரி கடுமையான குற்றங்களைத் தண்டிக்க, சட்டத்தில இடமில்லன்னு சொல்றாங்க..." சு.சமுத்திரம் 291

‘என்ன சட்டம்... ? பொல்லாத சட்டம்... இன்ஸ்பெக்டர் வைக்கிறதுதான் சட்டம், என்னப்பா சொல்றே...? நீ இங்கே எதுக்காக வந்தே...?”

‘ஒரு சின்ன விசாரணையாய்...’

‘சின்ன விசாரணை இல்ல சார். இவரு டாக்டர் அசோகனை... சுமதியோடது.ாண்டுதலுல...’

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல சார். எங்க தொழிலப்பற்றி ஒங்களுக்கு தெரியாதா... என்விசாரணையோட இன்னொரு நோக்கம், இந்த சுமதியைப் பற்றி தெரிஞ்சிக்க நினைச்சதுதான். நான் கடுமையா பேசுறது ஒரு நடிப்புத்தானே...’

‘இனிமேல் இந்தப் பக்கம் தலைகாட்டப்படாது. அப்புறம் குற்றாலத்தில் கவர்ன்மென்ட் கெஸ்ட் ஹவுஸ்லதான் இருக்கேன். எப்போ வாறே?”

‘இப்பவே... வாறேன் சார்...’

‘'வேண்டாம்... என் மகள் கலைவாணிக்கிட்டே கொஞ்சம் பேசணும். பேச முடியாட்டியும், அவளைப் பார்த்துட்டே நிற்கணும்... ஸ்டேஷன் பக்கமாய் நில்லு... ஒன் விஷயம் முடிஞ்சது மாதிரிதான்’

“தேங்க்யூசார். அப்போநான். ஸ்டேஷன் பக்கமா நிற்கிறேன். சார்’

இன்ஸ்பெக்டர் சிங்காரம், கால்களைத் தேய்த்தபடியே நடந்தார். அவருக்கு, தனது காட்பாதரிடம், இங்கே நிற்பவர்கள் தன்னைப் பற்றி ஏடாகூடமாய் பேசிவிடப்படாதே... என்ற பயம்... என்றாலும், அசோகன் மீது ஏற்பட்ட கோபத்தை, சுமதி மீது திருப்பிக் கொண்டே, இன்ஸ்பெக்டர் புறப்பட்டார். கான்ஸ்டபிள்களோ, தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று அசோகனிடம் சொல்வதற்காக, ஒரு மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிக்கும் சாக்கில்நின்றார்கள். ஆனாலும், இன்ஸ்பெக்டர் அந்த குடம் தீர்ந்து போவது வரைக்கும், அவர்களுக்காக வெளியே காத்து நின்றார்.

காவல்துறையினர் போனதும், அசோகன் சபாரிக்காரரிடம் கேட்டே விட்டான்.

‘'சார். தப்பாய் நினைக்கப்படாது; பெரியவங்க... காலுல தொங்கிக் கிட்டே சின்னவுங்க தலையில் மிதிக்கிறவங்களைப் பற்றி என்ன நினைக்கறீங்க...?’

‘சிபாரிசுலே வேலைக்கு வருகிறவன் எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க. இந்த சிங்காரம் எங்க ஊர்ப்பயல்... எங்க சாதிச்காரன். சப் 292 பாலைப்புறா

இன்ஸ்பெக்டர் செலக்ஷன்லே பிஸிக்கல் டெஸ்ட்டுலே இவன் வாங்கின சைபருக்கு முன்னால... ஒரு ஏழு என்கிறதை போட வைத்தவன் நாள்... இப்போ கோவைக்கு டிரான்ஸ்பர் கேட்கான். கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். எங்களை மாதிரி தொழிலதிபர்களுக்கும், குலைக்கிறதுக்கு யூனிபார்ம் போட்டவனும் தேவையாய் இருக்குதே...’

அசோகன் லேசாய் முகம் சுழித்தான். அவன் ஏதோ, ஏடாகூடமாய் கேட்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட சந்திரா, வெளிப்படை யாகப் பேசவழியில்லாததால், அவன் உள்ளங்கையைக் கிள்ளினாள். பிறகு, அசோகனை முந்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேண்டுகோள் விடுத்தாள்.

‘உள்ளே வந்து உட்கார்ந்துட்டுப் போகலாமே சார்! வாங்கம்மா... வாட் இஸ் யுவர் நேம்...’

‘'சாந்தி... கலைவாணி ஸிஸ்டரால பெயருக்கு உள்ளது நிலைச்சுட்டுது...’

‘நல்லா பேசுறியே... பேசுறீங்களே’

‘என் மகள்... பேசணுமுன்னு பேசலம்மா... உணர்ச்சிப்பெருக்கில்... அதுவும் நன்றிப் பெருக்கில் எல்லோருக்கும் உண்மைதான்... வரும்... அந்த உண்மையும் எதுகை மோனையோட வரும்...’

அசோகன்கூட, அவரை இப்போது வியந்து பார்த்தான். அவர் மகளுக்கு, ஆலோசனையும் வழங்கினான்...

‘இனிமேல், எவனையும் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் செய்துக்காமல் கல்யாணம் செய்துக்காதே பாப்பா... ஏன்னா, உங்க வர்க்கத்தில் இது சகஜம். எங்க டாக்டர்வர்க்கமும் இதுக்கு உடந்தையாய் நிற்கும்...”

‘நோ...அங்கிள், இனிமேல் நான்கல்யாணமே செய்துக்கிறதாய் இல்லே. டாடி டாடி... இங்கயே இருந்து டுறேன்... டாடி ஒங்க சர்க்கிள் எனக்கு வேண்டாம் டாடி’

சாந்தி, அப்படிச் சொல்லிவிட்டு, கலைவாணிக்கு முத்தமிட்டாள். அவள்கையை எடுத்து, தன்கையோடு கோர்த்துக் கொண்டாள்.

சபாரிக்காரர், குடும்பச் சகிதமாய் உட்கார்ந்தார். அசோகனும் வெளியே இருந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, உட்கார்ந்தான். சந்திராவும் கலைவாணியும் நின்றார்கள். அந்தம்மா, முதல் தடவையாய்ப் பேசினாள்,

‘யாரு... அவள்... சுமதியா... என்னங்க நீங்க அவளை ஏதாவது

செய்யனும்...' சு.சமுத்திரம் 293

‘இந்த இடத்தில பேசுற பேச்சில்லைம்மா... எனக்குத் தெரியாதா?”

‘எனக்கு, என்னமோ சார்... நீங்க அவளைப் பழிவாங்குறதாக்குப் பதிலாய் கோர்ட்டுக்கு போகலாமுன்னு தோணுது... ஏன்னா ஹெச்.ஐ.வி., ஒருத்தருக்கு வந்தால், அதை அவர்கிட்ட மட்டுமே சொல்லணுமுன்னு ஒரு அரசு விதி வந்திருக்கு... ஆனால் சுமதி போன்ற எய்ட்ஸ் வியாபாரிகள், இதைப் பயன்படுத்தி தப்பிக்கலாம். அதனால கோர்ட்டுலே இந்த முறையை கேள்வி கேட்கிறதே நல்லது... அமெரிக்காவிலே கூட, ஒரு ஒரினச்சேர்க்கை ஆசாமி. தன் கூட்டாளிக்கு இருந்த ஹெச்.ஐ.வி. பற்றி தெரிந்த டாக்டர், தன்கிட்ட சொல்லாததால், தனக்கும் எய்ட்ஸ் வந்துட்டதாய், அந்த டாக்டர் மேலே கோர்ட்டுலே வழக்குப் போட்டிருக்கான். இன்னும் வழக்கு நடக்கு...’

சபாரிக்காரர் குறுக்கிட்டார்...

‘இந்த இடத்தில, நல்லவங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். நல்ல காரியங்களை மட்டுமே செய்வோம்... அப்புறம்... தப்பாய் எடுக்கப்படாது. கலைவாணி விழிப்புணர்வோ ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு ஏற்பாடு செய்கிறதாய் கேள்விப்பட்டேன். என் சார்பில் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கணும். எல்லோருக்கும் பிச்சை போடுற மாதிரிதான் பணம் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்தப் பணத்தை என் இன்னொரு மகளுக்கு...’

சபாரிக்காரரால், பேச முடியவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து நின்றார். மூன்று நிமிடம் கழித்து உட்கார்ந்து, செக்கை நீட்டினார். கலைவாணி அதை வாங்கிக் கொள்ளாமல், அசோகனைப் பார்த்தாள். அவன் யோசனை தேவை இல்லை என்பது போல் சொன்னான்.

‘iர வசனம் பேசாமல், வாங்கிக்கோ கலைம்மா’

அந்தம்மா, கலைவாணியைக் கண்களால் கெஞ்சினாள். சாந்தி, கவைாணியின் கையைப் பிடித்து, விரல்களை ஒவ்வொன்றாய் நீட்டிவிட்டு, அதை உள்ளங்கையாக்கி செக்கை எடுத்து அதில் வைத்தாள். பிறகு அவளைக் கட்டிப் பிடித்து இன்னொரு முத்தம்,

அரைமணி நேரம் வரை, பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு, வந்தவர்கள் புறப்பட்டார்கள். முரண்டு பிடித்த சாந்தியை, கலைவாணிதான் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தாள். அடிக்கடி கடிதம் போட வேண்டும், டெலிபோனில் பேச வேண்டும் என்ற நிபந்தனையோடு சாந்தியும், காருக்குள் ஏறினாள்.

அவர்கள் போனதும், கலைவாணியும் சந்திராவும் அசோகனுடன் 294 பாலைப்புறா

உள்ளே வந்தார்கள். கலைவாணி கேட்டாள்.

‘இந்தப் பணத்தை வச்சி என்ன செய்யலாம்...?” ‘இது ஒன்னோட பணம்மா...பேங்க்லே டிபாசிட் செய்...” ‘என்ன டாக்டரய்யா... ஏன் என்னைப் பிரிச்சிப் பேசlங்க...? நம்ம. பணமுன்னு சொல்லப்படாதோ... இந்த அமைப்புக்கு எப்படிச் செல வழிக்கிறதுன்னுதான் கேட்டேன்’

சந்திரா, குறுக்கிட்டாள். ‘அப்படில்லம்மா... உனக்கும் ஒன்னை நம்பி பணம் இருக்கணும். எனக்குன்னு ஒரு கிளினிக் இருக்குது. சஸ்பெண்டானது நல்லதாப் போயிற்று... கிளினிக், பணத்தைக் கொட்டுது... அது என்னோட சொத்து... அசோக்கிற்கு, மருத்துவமனை இருக்குது. அது அவரோட சொத்து... இது மாதிரி, இது ஒன்னோட சொத்து... தாய் பிள்ளையாய் இருந்தாலும், வாய் வயிறு வேறம்மா...’

‘அதுவே எய்ட்ஸ் பிள்ளையாய் இருந்தாலுமா... நல்லாக் கேளுங்க. இந்தப் பணம் இந்த அமைப்புக்குத்தான். இதுல நான்மாறமாட்டேன்...’

‘சொன்னாக் கேளும்மா...’ ‘அவளை, அவள் வழியிலே விட்டுடு சந்திரா... எனக்கும் ஒனக்கும் பணம் தேவை. ஏன்னா, நீயும் நானும் கல்யாணம் செய்துக்குவோம். சாரி... வெரி வெரிசாரி... நீயும் நானும் தனித்தனியாய் திருமணம் செய்துக்கலாம். அப்போது நமக்கு குழந்தை குட்டின்னு’

‘தத்துப் பித்துன்னு உளறாதீங்க... அசோக்...”

‘'சாரி... நமக்கு, தனித்தனியா குழந்தை பிறக்கலாம்’

கலைவாணி, கலகலப்பாய்ச் சிரித்தாள். எதையேக் கண்டுபிடித்தவள் போல் கைதட்டிச்சொன்னாள்.

‘டாக்டரம்மா, ஒங்க அசோக்கோடஐடியா நல்ல ஐடியா...’

‘அது என்ன ஒங்க அசோக்’ “ஆமாம்... அசோக் ஒங்களுக்கு... டாக்டர் அசோகன் எனக்கு... புரியுதா...?”

சந்திராவிற்குப் புரிந்தது. ஆனாலும் நாணப்பட முடியவில்லை. கலைவாணி தலையில் செல்லமாகக் குட்ட முடியவில்லை. அவள் மனதுக்குள், தாய்மாமா மகன் சங்கரன் விஸ்வரூபம் எடுத்தான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_32&oldid=1639252" இலிருந்து மீள்விக்கப்பட்டது