புத்தர் பொன்மொழி நூறு/7
குறிப்புரை
பாயிரம்—முகவுரை, பொருள்அடக்கம், எ டு த் த து இயம்பல். 1. ஒண்புத்தர்—ஒளிவிடும் புத்தர். 2. அலகில்— அலகு+இல்,—அளவு இல்லாத.
நூல்
3. இரட்டைச் செய்யுள் இயல் தலைப்பு—ஒரே கருத்தை உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் இரண்டு விதமாக இரண்டு செய்யுள்களில், முதல் நூலில் கூறப் பட்டிருப்பதால், இந்தத் தலைப்புக்கு 'இரட்டைச் செய்யுள் இயல்' என்னும் பெயர் தரப்பட்டது. ஆனால், இந்தத் தமிழ்ச் செய்யுள் நூலில், ஒரு கருத்து ஒரே செய்யுளில் மட்டும் கூறப்பட்டுள்ளது.
அருஞ் சொற் பொருள்
1. இரட்டைச் செய்யுள் இயல்
2. விழிப்பு இயல்
14. ஓங்கல்—மலை, 15. அவா தளை—அவாவாகிய விலங்கு,
3. அடக்க இயல்
16. தள்ளரு—தள்ள அரு ('அ' தொ கு த் த ல் — நீக்குதற்கு அரிய. 17. வரித்தல்—கட்டுதல்:
4. மலர்கள் இயல்
18. தா அரு—குற்றம் இல்லாத, 19. நச்சிடார்—விரும்பார். 20. பொன்றாது—அழியாமல்.
5. பேதைகள் இயல்
21. உறுவழி—செல்லும் வழி. 22. துன்னுதல்—பொருந்துதல். 23. நாப்பண்—நடுவே. 24. கரந்திடும்—மறைந்திருக்கும்.
6. அறிஞர் இயல்
25. வெம்மை—கொடுமை. 26. தரையினர்—உலகத்தார்.
7. அருகந்தர் இயல்
27. அருகந்தர் இயல்—விருப்பு வெறுப்பு இ ல் லா த மேலோர் பற்றியது. 28. கோ ள் —கொ ள் கை, 29. நண்ணரும்—நண்ண (அடைவதற்கு) அரிய.
8. ஆயிரம் இயல்
9. தீய நடத்தை இயல்
32. உஞற்றல்—செய்தல். 33. விள்ளரும்—வி ள் ள அரும்—சொல்ல முடியாத அளவினதான. 34. பொன்று தல்—அழிதல். 35. கடுகி—விரைந்து.
10. ஒறுப்பு இயல்
36. ஓட்டும்—வீரைந்து அனுபவிக்கும்படி விரட்டும் 37. நாடிடும் வடிவு—செய்ய எண்ணிய உருவம்.
11. முதுமை நிலை இயல்
38. வன்பொடு—வலிமையோடு, 39. துப்பு அறு—வலிமை திறமை) அற்ற, உப்பு—இனிமை, இன்பம். 40. வல்லையோ—வல்லமை உடையையோ. 41. அகல் மடை—அகன்ற நீர் மடை.
12. தன் தூய்மை இயல்
42. மயல்—மயக்கம். 43. எய்தல் ஒல்லா—எளிதில் அடைய முடியாத, 44. க ல் லி — சி றி து சி றி தா க ச் சுரண்டி, தோண்டி,
13. உலக இயல்
14. புத்தர் இயல்
49. உன்னி—உற்று எண்ணி. 50. தொப்பை—பெரு வயிறு.
15, மகிழ்ச்சி இயல்
51. பகையதை — பகைக் குணத்தை (அது—பகுதிப் பொருள் விகுதி). 52 உறுத்துவிக்கும்—உண்டாக்கும் 53. வித்தை—விதையை. 54. யாணர்—புது வருவாய். 55. அறிவர்—மெய்யறிவுடைய மேலோர்.
16. விருப்ப இயல்
56. வன்புறு—வன்பு உறு—வன்கண்மை (கொடுமை), உற்ற 57. புணை—தெப்பம்.
17. சின இயல்
58. வெருவரும்—அஞ்சத்தக்க. 59. தருக்கி—தருக்கு (செருக்கு) உடையவன். 60. முப்பொழுதும்—இறப்பு—நிகழ்வு—எதிர்வு என்னும் மூன்று காலத்திலும், 61. உள்ள லில்—நினைப்பதில்.
18 மாசு இயல்
19. சான்றோர் இயல்
69. ஆதல் உண்டோ—ஆதல் இல்லை. 70. புனைந் தோர்—ஒப்பனை (அலங்காரம்) செய்தவர்.
20. நெறி இயல்
71. மாந்துதல்—உண்ணுதல். 72. தகுநெறி எரி—தக்க அறநெறியாகிய நெருப்பு. 73. அறத்தை ஒருவிடின்—அறத்தைக் கைவிடின்.
21. பல்வகை இயல்
74. அடி 3,3— செய்ய வேண்டியதைச் செ ய் யா ச் (சோம்பும்) சோம்பலும் செய்யக் கூடாததைச் செய்தலும் வேண்டா— 75. துய்ப்பும் — அனுபவிப்பதும். 76. வன் கணை—கொடிய அம்பு.
22. அளறு இயல்
77. ஒறுப்பு—தண்டனை. 78. அளற்றுத் துன்பம்— நரக வேதனை. 79. அகம்—மனம்
23. யானை இயல்
80. உய்தி இல்—கடைத்தேறும் வழி இல்லாத. 81. பார் புரப்பவர்—உலகைக் காக்கும் அரசர். 82. சோம்பு—சோம்பல். 83. வெருவரு—அஞ்சத்தக்க.
24. அவா இயல்
84. அரங்கவும்—முற்றிலும். 85. முடுக்குறு—வலுவாகப் பொருந்தியுள்ள, 86. பற்று — ஆசை. 87. தேட்டை — பேரவா. 88. திகைக்கலீர் — திகைக்காதீர்கள். 89. ஆர்ந் திடும்—நிறைந்த. 90. செயிர்—குற்றம்.
25. பிக்கு இயல்
91. அமைவிலா—அ மை தி இல்லாத, பொருந்தாத, 92. ஆர்ந்திட—அனுபவிக்க
26. பிராமண இயல்
பிற் சேர்க்கை
எமது சிறந்த நூல்கள்
கவியரங்கக் கவிதைகள்
—ரகுநாதன்
பாட்டு வராத குயில்
—கே. சி. எஸ். அருணாசலம்
பாலைமலைப் பாடல்கள்
—கோபெநா
கதெரீனா
—தராஸ் ஷெவ்சேன்கோ
பல்கேரியக் கவிதைகள்
—கே. கணேஷ்
ஜீவாவின் பாடல்கள்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் பாடல்கள்
கியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை-600 098
தொமுசி. ரகுநாதன்
- பாரதி காலமும் கருத்தும்
க. கைலாசபதி
- பாரதி ஆய்வுகள்
- இலக்கியச் சிந்தனைகள்
தி. முத்துகிருஷ்ணன்
- மகாகவி பாரதியார்
- வாழ்க்கைச் சித்திரம்
கார்த்திகேசு சிவத்தம்பி
- ஈழத்தில் தமிழ் இலக்கியம்
சென்னை-600 098.
மேலட்டை அச்சிடோர்:
பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., சென்னை-14.