பேச்சு:பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/1. விநாயகர் நான்மணி மாலை

விக்கியாக்கம் செய்தல்

தொகு

இன்பகுமார், விக்கிமூலத்தில் நீங்கள் பாரதியாரின் பாடல்களை இடுகை செய்வதைக் கண்டேன். பாராட்டுகள்! ஓர் எடுத்துக்காட்டுக்காக, விநாயகர் நான்மணி மாலையை விக்கி முறைக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளேன். ஒரு சில குறியீடுகளின் உதவியோடு மிக எளிதாக, அச்சில் வெளியாவது போல அழகாக இப்பாடல்களை இடுகை செய்ய முடியும்.

(;) என்னும் அடையாளத்தை ஒரு சொல்லுக்கு முன் இட்டால் அது தடித்த எழுத்துவடிவில் தெரியும். துணைத் தலைப்புகள் உருவாக்க இது உதவும். எ.டு:

எடுத்துக்காட்டு.

(:) இந்த அடையாளத்தை ஒரு வரிக்கு முன் இடும்போது அவ்வரி ஓரிரு எழுத்து இடைவெளிக்குப் பின் தோன்றும். எ.டு: செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்

சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.

வையந் தனையும் வெளியினையும்

வானத்தையும்முன் படைத்தவனே!

ஐயா!நான்மு கப்பிரமா!

யானை முகனே!வாணிதனைக்

கையா லணைத்துக் காப்பவனே!

கமலா சனத்துக் கற்பகமே!

சொல்லுக்கு/சொற்றொடருக்கு முன்னும் பின்னும் மூன்றுமுறை ஒற்றை மேற்கோள் குறியை இடும்போது ஒரு சொல்/சொற்றொடர் தடித்த எழுத்தில் மாறும். எ.டு.: 1. விநாயகர் நான்மணி மாலை

ஒரு வரியை இன்னொரு வரியிலிருந்து பிரிக்க br என்பதை <..> இந்த அடைப்புகளுக்குள் இடலாம்.

(தொகுத்தல் பற்றிய விரிவான விளக்கத்தை இங்கே காண்க: இங்கே

ஒருவேளை இந்தத் தொகுப்புமுறை உத்திகள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!--பவுல்-Paul (பேச்சு) 06:39, 4 ஜூலை 2012 (UTC)

நன்றி. பவுல். அவ்வாறே செய்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 12:23, 4 ஜூலை 2012 (UTC)
  • பாரதியாரின் பாடல்களை வேறு இணையத்தளங்களிலிருந்து (எ.டு.: Project Madurai) நீங்கள் எடுப்பதாக இருந்தால் அவ்வாறு எடுக்கும்போது சில எழுத்துக்கள் விடுபடவோ உருக்குலையவோ செய்யலாம். அல்லது தவறாக இடுகை செய்யப்பட்டிருக்கலாம். அதையும் சரிப்படுத்த வேண்டும். ஓரிரு எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். குறைகூறுவதாக நினைக்கவேண்டாம். விக்கிமூலத்தில் பதிவாகும் கவிதைகள் பிழையின்றி நன்றாக இருக்கவேண்டும், நம்பகத்தன்மை வேண்டும் என்னும் எண்ணத்தோடுதான் கூறுகிறேன்.

1) விநாயகர் நான்மணி மாலை: இதன் முதல் வரியை இடுவதிலேயே பிழை ஏற்பட்டுள்ளது. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம் என்னும் வரி (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும் என்றிருக்க வேண்டும். ஏழாவது வரி வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத் என்று இடப்பட்டுள்ளது. அது வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத் என்றிருக்க வேண்டும். இவ்வாறு பல எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளைத் தோற்றுவிக்கும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்.
2) பாரதியாரின் தெய்வப்பாடல்களின் இறுதியில் 76ஆக அமைவது "யேசு கிறிஸ்து". அங்கே ஈசன் வந்து லுவையில் மாண்டான் என்பது ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எனவும் இறுதி வரி நொடியி லிஃத பயின்றிட லாகும் என்பதற்குப் பதிலாக நொடியி லிஃது பயின்றிட லாகும் எனவும் வர வேண்டும்.

விக்கிமூலத்தில் பயனர்கள் கட்டுரை எழுதுவதில்லை, மாறாக சிறப்புடைய படைப்புகளை வழுவின்றி பதிவு செய்கின்றார்கள் (செய்ய வேண்டும்!). எனவேதான் மேற்கூறிய பரிந்துரைகளை முன்வைக்கின்றேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! விக்கிமூலத்தின் நம்பகத்தன்மையை வளர்க்க நீங்கள் உதவுவீர்கள் என்பது எனது நம்பிக்கை!--பவுல்-Paul (பேச்சு) 14:25, 4 ஜூலை 2012 (UTC)

பவுல். நன்றி. நிச்சயம் அதனை சரிப்பார்க்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 20:02, 4 ஜூலை 2012 (UTC)
Return to "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/1. விநாயகர் நான்மணி மாலை" page.